புதிரான எப்சிலன் ஆரிகே (Epsilon Aurigae) விண்மீன் - வெ.சுப்ரமணியன்.
விண்ணில் காணும் புதிரான பல விண்மீன்களில் எப்சிலன் ஆரிகே (Epsilon Aurigae) யும் ஒன்று. பொதுவாக நம் எதிர்பார்ப்புக்கு பொருந்தி வராத செயல்பாடு கொண்ட இது ஒரு கிரகண இருமை விண்மீன் (eclipsing binary star). இதன் பொலிவு மாற்றங்களான ஒளிர்தலும் மங்குதலும் சற்றே வினோதமானது. இதுவே பல தலைமுறைகளாக தொலைவாக உள்ள இந்த விண்மீனில் என்ன நடக்கிறது என்பது குறித்து பல்வேறு ஊகங்களுக்குக் காரணமாக இருந்தது. இன்று முதல் ஒரு வார காலத்திற்கு அதாவது 24.03.2017 முதல் 30.03.2017 வரையிலான ஏழு நாட்களும் புற உதவி எதுவுமின்றி வெறும் கண்களாலேயே இருள் கவியத் தொடங்கியதும் தலைக்கு மேலாக வானில் கேப்பெல்லா(Capella) விண்மீனைக் காணமுடியும். இதுதான் ஆரிகே என்ற தேரோட்டி (Charioteer) விண்மீன் கூட்டத்தின் மிகப் பொலிவான விண்மீன். இதற்கு அருகில் முக்கியத்துவம் வாய்ந்த முக்கோண வடிவத்தில் சிறு பிள்ளைகள் (The Kids) என்றழைக்கப்படும் மூன்று சிறிய விண்மீன்களைக் காணலாம். இம் மூன்றில் உச்சியில் ஒளிர்வதே எப்சிலன் ஆரிகே விண்மீன். அரபி மொழியில் இந்த விண்மீன் அல்மாஸ் (Almaaz) அதாவது ஆட்டுக்கிடா (he-goat) என்று பொருள்படும் பெயரால் ...