ரேவதி விண்மீன் என்ற ஜீட்டா (ζ - Piscium) பிஸ்சியம்
மீனம் விண்மீன் கூட்டத்தின் ஆதி வரலாறு பாபிலோனியர்களிடமிருந்து தொடங்குகிறது.
பாபிலோனியர்களின் கண்களுக்கு இரு விண்மீன்கள் ஒரு கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைப் போல
தோன்றியிருக்கிறது.
ரோமானியர்களின் புராணத்தில் இது காதல் தேவதை வீனஸையும் (Venus) க்யூபிடையும் (Cupid) குறிக்கிறது.
டைபூன் (MonsterTyphon) என்ற அசுரனிடமிருந்து தப்பிக்க வேண்டி, ஒருவரின் காலோடு மற்றவர் தங்கள் கால்களைக் கயிற்றால் கட்டிக்கொண்டு, மீனாக உருமாறிக் கொண்டு கடலில் குதித்தனர் என்று குறிப்பிடப்படுகிறது.
விண்மீன் ஆல்பா பிஸ்சியம் (α - Piscium) அல்லது அல்ரெச்சா (Alrescha) என்பது (அரபு மொழியில் கயிறு) கயிற்றில் இடப்பட முடிச்சு (Knot) போன்று காட்சி தரும்.
![]() |
மீனம் விண்மீன் கூட்டம் |
ரோமானியர்களின் புராணத்தில் இது காதல் தேவதை வீனஸையும் (Venus) க்யூபிடையும் (Cupid) குறிக்கிறது.
Pompeo Batoni - Venus and Cupid.
Picture courtesy :
டைபூன் (MonsterTyphon) என்ற அசுரனிடமிருந்து தப்பிக்க வேண்டி, ஒருவரின் காலோடு மற்றவர் தங்கள் கால்களைக் கயிற்றால் கட்டிக்கொண்டு, மீனாக உருமாறிக் கொண்டு கடலில் குதித்தனர் என்று குறிப்பிடப்படுகிறது.
விண்மீன் ஆல்பா பிஸ்சியம் (α - Piscium) அல்லது அல்ரெச்சா (Alrescha) என்பது (அரபு மொழியில் கயிறு) கயிற்றில் இடப்பட முடிச்சு (Knot) போன்று காட்சி தரும்.
இந்த விண்மீன்
கூட்டம் குறித்து கிரேக்க புராணத்திலும் ரோமானிய புராணக் கதை போலவே கதை சொல்லப்பட்டுள்ளது.
ஒலிம்பிய கடவுள்கள் டைட்டன்களையும், அரக்கர்களையும் போரில் வென்ற பின் கைய்யா(Gaia)
(1) கைய்யா(Gaia) (2) டார்டரஸ் (Tartarus)
அல்லது ஜியா, போர்க் கடவுள் டார்டரஸுடன் (Tartarus) கூடியதில் பிறந்த அசுரப் பிறவிதான்
டைபூன் (Typhon).
படம் : டைபூன்(Typhon)
டைட்டன்களை பாதாள உலகத்தில் ஜீயஸ் சிறை வைத்திருந்திருந்த இடத்தில் தான் டைபூனும்
இருந்தது. டைபூன் உலகம் இதுவரை கண்டிராத ஆயிரம் தலைகளும், நெருப்பை கக்கும் கண்களும்
உடைய மிகவும் பயங்கரத் தோற்றம் கொண்ட புராண
கால யாளி போன்ற விலங்குகாகும். கைய்யா (Gaia) கடவுள்களை வெற்றி கொள்ள டைபூனை அனுப்பினாள்.
அதனை முதலில் பார்த்தது பான் (PAN) கடவுள்தான்.பான் கடவுள் பிற தெய்வங்களை எச்சரிக்கை
செய்தது. தான் தப்பிக்க வேண்டி ஆடு - மீன் வடிவம் எடுத்து யூப்ரடீஸ் நதியில் குதித்தது.
இதுவே வானில் காப்ரிகார்னஸ் (Capricornus
Constellation) விண்மீன் கூட்டம் என்று சுட்டப்படுகிறது.
பிஸ்சஸ் விண்மீன் கூட்டம் சுமார் 889 சதுர பாகை பரப்பு
கொண்ட வானில் காணப்படும் 14 வது பெரிய விண்மீன் கூட்டம். இதனை வவான் கோளத்தில் முதல்
காற் பகுதியில்(NQ1) +90o முதல் -65o வரையிலான அட்சங்களில் காண
முடியும். இதன்
அருகிலமைந்த பிற விண்மீன் கூட்டங்கள் ஆண்டிரமெடா,அக்வெரியஸ்,ஏரியஸ்,சீட்டஸ், பெகாசஸ்
மற்றும் டிரையாங்குலம் ஆகியன. மீனம் 12 இராசி வின்மீன் கூட்டங்களில் ஒன்று.பிஸ்சஸ்
விண்மீன் கூட்டத்தில் ஆழ் வான் பொருளாக காணப்படுவது மெஸ்ஸியர் 74 அல்லது NGC 628 என்னும்
சுருள் விண்மீன் திரளாகும் (Spiral Galaxy). இந்தவிண்மீன் கூட்டத்தில் 10 விண்மீன்களுக்கு
கோள்கள் உள்ளது என்றறியப்பட்டுள்ளது. இக் கூட்டத்தின் மிகப் பொலிவான விண்மீன் ஈட்டா
பிஸ்சியம் (η - Piscium) ஆகும். இதன் தோற்றப்பொலிவு எண் 3.62. பிஸ்சிட்ஸ் (Piscids)
என்ற விண்வீழ் கற்கள் பொழிவு இக் கூட்டத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. மீனம் விண்மீன்
கூட்டம் ராசி விண்மீன்கள் (Zodiac Family) குடும்பத்தை சேர்ந்தது.
ரேவதி விண்மீன் என்பது ζ - பிஸ்சியம் விண்மீன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. தமிழில் இந்த விண்மீனை இரவி நாள்,
கலம், தோணி, நாவாய், தொழு, பஃறி, ஆ நாள், கடை நாள், சூலம், பெரு நாள், பூடா நாள், கடை
மீன் என்ற பெயர்களால் குறிப்பிடுகின்றனர்.
ஜீட்டா பிஸ்சியம் ஒரு ஒளியியல்(optical)
மற்றும் நிறமாலையியல் (Spectroscopic) இரட்டை விண்மீன் (Binary star) ஆகும். இதில்
மொத்தம் மூன்று விண்மீன்கள் உள்ளன. ஜீட்டா பிஸ்சியம் A, ஜீட்டா பிஸ்சியம் B மற்றும்
ஜீட்டா பிஸ்சியம் C என்பன அவை. இதில் ஜீட்டா
பிஸ்சியம் B மற்றும் ஜீட்டா பிஸ்சியம் C யும் நிறமாலையியல் இரட்டை. இவ்விரண்டும்
ஜீட்டா பிஸ்சியம் A யுடன் சேர்ந்து ஒரு
ஒளியியல் இரட்டையாக விளங்குகிறது.
ஜீட்டா பிஸ்சியம் A யும் ஜீட்டா பிஸ்சியம்
B , ஜீட்டா பிஸ்சியம் C சோடிக்கும்இடையில் 23 வில் வினாடி விலக்கமே உள்ளது.
ஜீட்டா பிஸ்சியம்
A (Zeta Piscium A), சூரியனை விட 1.8 மடங்கு நிறை கொண்டது.
இது சூரியனிடமிருந்து சுமார் 147.5 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் மேற்பரப்பு
வெப்ப நிலை 7900 கெல்வின். தோற்றப்பொலிவெண் + 5.21 உடைய இது A7 IV நிறமாலை வகையைச்
சார்ந்த துணை அரக்க விண்மீன்.
ஜீட்டா பிஸ்சியம்
B (Zeta Piscium B), சூரியனை விட 1.3 மடங்கு நிறை கொண்டது.
இது சூரியனிடமிருந்து சுமார் 195.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் மேற்பரப்பு
வெப்ப நிலை 6400 கெல்வின். தோற்றப்பொலிவெண் + 6.44 உடைய இது F7 V நிறமாலை வகையைச்
சார்ந்த குள்ளன் (Dwarf) ஆகும்.
ஜீட்டா பிஸ்சியம்
C (Zeta Piscium C),ஜீட்டா பிஸ்சியம்B (Zeta
Piscium B) யின் வெள்ளை குள்ள (White
Dwarf) கூட்டாளியாகும்.
இறுதியாக மீனம் விண்மீன் கூட்டத்தில் நாம் காணும் ரேவதி விண்மீன் என்ற ζ - பிஸ்சியம் விண்மீன், அப்படி ஒன்றும் மிகப் பொலிவான விண்மீன் இல்லை. இருப்பினும் அதற்கு ஏன் சிற்ப்பிடம் தரப்படுகிறது என்றால் அது சூரியனின் தோற்ற இயக்கப்பாதையின் மிக அருகில் அமைந்திருப்பதுதான். கீழே தரப்பட்ட படத்திலிருந்து இதனை அறியலாம்.
ஆக கிட்டத்தட்ட
ஆறு மாதங்களில் அஸ்வினி தொடங்கி ரேவதி வரையிலான 27 விண்மீன்களை அவற்றின் புராணக் கதைகள்
மற்றும் விண்மீன் பற்றிய சில அறிவியல் தகவல்களை வலைதளங்களிலிருந்து திரட்டி உங்களுக்கு
அளித்தேன். பல இடங்களில் மொழிபெயர்த்தல் சற்று வேறுபட்டிருக்கும். அதனை நல்ல தமிழ்
கலைச் சொற்களாக மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு வாசகர்களான உங்கள் உதவியை கோருகிறேன். திரு. ஷாஜகான், திரு. ஜவாத் மரைக்காயர், திரு.
மகமதன் மாலி, திரு. சங்கம் செல்வா, திரு. காஞ்சீவரம் சதாசிவம் ரவீந்திரமணி திரு . லார்கோ விஞ்ச், திரு. கங்காதரன் இசக்கி, திரு. ஹரிக்குமார் பால கிருஷ்ணன், திரு. ஜெயசீலன், திரு. ஜெயகாந்தன் ஜெயவேலு, திரு. சுந்திரபாண்டியன் ராஜா, திரு. நிசாமுதீன், திருமதி. சுப்புலட்சுமி,திரு. வேத
நாயக், திரு. விஜயேந்திரா இப்படி பலர் எனக்கு
ஆக்கமும் ஊக்கமும் தந்ததால்தான் தொடர்ந்து எழுத முடிந்தது. ஒரு கட்டத்தில் அதாவது புனர்
பூசம் எழுதும் போது கை விட்டு விட முடிவு செய்திருந்தேன். திரு. அன்பழகன் D.V அவர்கள் இக்கட்டுரைகள் எழுத அதிக உற்சாகம் ஊட்டினார். நிறைய ஆலேசனைகளைத் வந்தவர்களில் அவர் மிக முக்கியமா பவர். எனக்கு வலைப்பூ(BLOG) தொடங்க
யோசனையும், அதில் மாற்றங்கள் செய்ய தொழில் நுட்ப உதவிகளையும் செய்த திரு. ஷாஜகான் சாருக்கு
என் நன்றிகள். ஷாஜி சாரை எனக்கு அறிமுகப்படுத்தியது திரு. தங்கவேல் ராஜேந்திரன் அவர்கள். திரு. சாமிநாதன் சுப்பராயன், திரு. முல்லைநாதன், திருமதி. நான் ராஜா மகள், லோகி ரஞ்சனி, திரு. சரவணன் தாவோ, திரு. ரமேஷ்கண்ணன், மதிப்பிற்குரிய பிரபாஅம்மா, கிட்டி அம்மா இப்படி பலரது அன்பை எனக்கு பெற்றுத்தர காரணமான
முகநூலுக்கும் நன்றி. தமிழ்மணம் வாசகர்களின் முகமும், பெயரும் நான் அறிய வாய்ப்பில்லை. அவர்கள் அனைவருக்கும் என் நன்றி.
இன்னும் பலரை
நான் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம். உங்களை மறக்கவில்லை. கண்டிப்பாக நீங்கள் பின்னூட்டம்
தரும் போது மீண்டும் எனக்கு நன்றி சொல்ல இன்னொரு வாய்ப்புக் கிடைக்கும். அப்போது கண்டிப்பாகச்
சொல்லுவேன். உங்களின் விமர்சனங்களை ஆவலோடு எதிர்பார்க்கும்,
பிரியங்களுடன்,
வெ.சுப்ரமணியன்.
Comments
Post a Comment