வசீகரிக்கும் வானமும் வசப்படும் - பகுதி (1)
உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட
88 விண்மீன் கூட்டங்களின் பெயர்கள்
மிகவும் தயக்கமாகவே இருந்தது. நமது நகரத்து அடுக்கக இயந்திர வாழ்வில்
அடுத்த வீட்டுக்காரர் பெயரையே தெரிந்து கொள்ள யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படி இருக்க வானத்தை பார்க்க
யாருக்கு முதலில் நேரம் இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் நகரத்தின் தூசு காரணமாக
விண்ணில் விண்மீன்கள் கட்புலனாவது கொஞ்சம் சிரமம்தான். ஆக இரவு வானை ரசிப்பதற்கு நேரம்
ஒதுக்கும் நிலையில் நமது அலுவலகங்களில் பணி நேரம் அமைவதும் இல்லை. இருப்பினும் புதுக்கட்டுரைத்
தொடர் ஒன்றை ஆரம்பிக்க எண்ணினேன். முதலில் இராசி விண்மீன் கூட்டத்தில் காணப்படும்
27 விண்மீன்கள் பற்றிய தொடர் எழுதினேன். அதிக வரவேற்பு இல்லை என்று சொல்ல முடியாது.
காரணம் பல ஆயிரக்கணக்கான வலைப்பூக்களை இதுவரையில் படித்தவரோ அல்லது பார்வையிட்டவரோ இல்லை என்பது
ஆச்சரியப்படத்தக்க உண்மை. இப்போது எதற்கு இதை எல்லாம் சொல்கிறேன் என்றால், என்னுடைய கட்டுரைகளை சராசரியாக குறைந்தது 50 பேர்களாவது படிக்கிறார்கள் அல்லது பார்வையிடுகிறார்கள் என்பதே பெரிய விஷயம்.
1930 களில் கூட மக்கள் பெரும்பாலும் கால்நடையாகவே பயணம் மேற் கொண்டனர். அறிவியல் கண்டுபிடிப்புகள் காரணமாக நடப்பது குறைந்து போய் பல உடல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தியதால் அலுவலகத்திற்கு இன்று BMW சொகுசு காரில் வந்து பந்தாவாக இறங்கினாலும், உடல் நலம் பேண அதிகாலை வேளைகளில் குரைக்கும் நாய்களை விரட்ட கைத்தையுடனும் அரை டிராயருடன் நடக்கும் பெரிய மனிதர்களைக் காண்கிறோம்.
இதனுடைய தொடர்ச்சியாக நினைத்துப் பார்த்தேன். அலுவலக அழுத்தங்கள், வெளியில்
பகிர்ந்து கொள்ள முடியாத, சொல்ல முடியாத சோகம் என்ற நிலை அடுத்த தலைமுறைக்கு கண்டிப்பாக
ஏற்படும். காரணம் சிறிய ஒற்றைக் குழந்தை குடும்பங்கள். மன அமைதியைப் பெற மருத்துவரை
நாடும் அவல நிலை உருவாகும். அப்போது மருத்துவர்கள் எப்படி இன்று நடைபயிற்சி செய்யச்
சொல்கிறார்களோ அது போல் வான் நோக்கும் பயிற்சியை தினமும் அரை மணி நேரமாவது செய்யச்
சொல்லும் காலம் தொலைவில் இல்லை.
அப்போது வான் நோக்கும் பயிற்சி செய்யப் போகும் தலைமுறைக்கு விண்மீன் கூட்டம்,
அவற்றின் பெயர்கள் பற்றிய அடிப்படை அறிய இப்போதே தயாராக இருக்கச் செய்யவே இக் கட்டுரை
எழுதப்படுகிறது.
ஆகவே இளைஞர்களே உங்களுக்கு பிற்காலத்தில் நல்ல மனநலத்துடன் உங்கள் குழந்தைகள்
வளர அவர்களுக்கு வானத்துடன் நட்பை ஏற்படுத்துங்கள். அவர்களாவது மன அழுத்தத்தில் உங்களைப்
போல் வாழாமல் இயற்கையுடன் ஒன்றுபட்டு வாழட்டும். ஆக இந்தத் தொடர் இன்றைய மற்றும் நாளைய
இளயோருக்காக நிறைய கதைகளுடன் எழுதப் பட உள்ளது.
அன்பு நண்பர் திரு. சுந்தரபாண்டியன் சொல்லுவார், “ஒரு நல்ல ஆசிரியனின் வேலை எழுதுவது மட்டுமே . கண் உள்ளவன் படிப்பான்”. அதை வேத வாக்காகக் கொண்டு இத் தொடரை பிள்ளையார்
சுழி போட்டுத் துவக்குகிறேன். இதில் அடிப்படை வானவியல் அறிவு இல்லாதவர்களும் படிக்க
வேண்டி எளிய விஷயங்கள், அதிகம் தொடர்புடைய கதைகள் என்றே எழுதப் போகிறேன். காரணம் இன்றைய குழந்தைகளுக்கு
கதை சொல்ல வேண்டிய பல தாத்தா, பாட்டிகள் முதியோர் இல்லத்தில். பெற்றோருக்கு அவர்களின்
அலுவலகம் மற்றும் குழந்தைகளின் வீட்டுப்பாடம் தாண்டிய உலகம் இல்லை. ஆகவே ஒரு விண்மீன்
கூட்டத்தை ஒரு நாள் இரவில் சுட்டிக்காட்டி ஒரு கதை சொல்லுங்கள். அப்புறம் உங்கள் பிள்ளைகள்
அதை விரும்புவது புரியும். அப்புறம் அவர்கள் வீடியோ விளையாட்டில் பொழுதைக் கழித்து
மனச் சோர்வெய்தமாட்டார்கள் என்பது திண்ணம். நீங்களும் பின்னாளில் முதியோர் இல்லத்தில்
காலம் தள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படாது.
நிறைய பேசி விட்டேன். இனி கட்டுரைக்கு போவோமா?
வானவியல் குறித்த செயல்பாடுகளில் பொதுவாக விண்மீன்கூட்டங்களின் இலத்தீன்
மொழிப் பெயர்களே பயன்படுத்தப்படுகின்றது. இந்த வின்மீன் கூட்டங்களை மூன்று பகுதிகளாக
பிரிக்கலாம்.
(1) இராசி விண்மீன் கூட்டங்கள் (Zodiac constellations).
இந்த விண்மீன் கூட்டங்கள் சூரியனின் தோற்ற இயக்கப்பாதையில்(Ecliptic path of the sun) அமைந்தவை.
(2) இராசி விண்மீன் கூட்டங்களின் வடக்காக
அமைந்த விண்மீன் கூட்டங்கள்
(3) இராசி விண்மீன் கூட்டங்களின் தெற்காக அமைந்த விண்மீன் கூட்டங்கள்
வரிசை எண்
|
இலத்தீன்
மொழிப் பெயர்
|
அமைவிடம்
|
தமிழாக்கப்பட்ட
பெயர் மற்றும் ஆங்கிலப் பெயர்
|
1
|
ஆண்டிரமெடா (Andromeda)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
எத்தியோப்பிய இளவரசி ஆண்டிரமெடா
(Andromeda)
|
2
|
அன்ட்லியா
(Antlia)
|
இராசிக்கு தெற்கே (South
of Zodiac)
|
காற்றடைப்பான்
(Air pump)
|
3
|
ஏப்பஸ்
(Apus)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
சொர்க்கத்தின் பறவை
(Bird of Paradise)
|
4
|
அக்வேரியஸ்
(Aquarius)
|
இராசி
(Zodiac)
|
நீர் சுமப்பவர்
(Water Bearer)
|
5
|
அக்கியுல்லா
(Aquila)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
கழுகு
(Eagle)
|
6
|
அரா
(Ara)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
பீடம்
(Altar)
|
7
|
ஏரீஸ்
(Aries)
|
இராசி
(Zodiac)
|
ஆட்டுக்கிடா
(Ram)
|
8
|
அரிகா
(Auriga)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
இரத சாரதி
(Charioteer)
|
9
|
பூட்டெஸ்
(Boötes)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
மந்தை மேய்ப்பவன்
(Herdsmen)
|
10
|
சீலம்
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
சிற்பியின் ஆயுதம்
(Sculptor's Tool)
|
11
|
காமிலோபார்டாலிஸ்
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
ஒட்டகச் சிவிங்கி
(Giraffe)
|
12
|
கேன்சர்
|
இராசி
(Zodiac)
|
நண்டு
(Crab)
|
13
|
கேன்ஸ் வெனசிசே
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
வேட்டை நாய்
(Hunting Dogs)
|
14
|
கேனிஸ் மேஜர்
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
பெரிய நாய்
(Great Dog)
|
15
|
கேனிஸ் மைனர்
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
சிறிய நாய்
(Little Dog)
|
16
|
காப்ரிகார்னஸ்
|
இராசி
(Zodiac)
|
மலை ஆடு அல்லது கடல் ஆடு
Goat (or Sea Goat)
|
17*
|
கரினா
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
கப்பலின் அடிப்பலகை
(Keel of Argo) 1
|
18
|
காஸியோப்பியா
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
எத்தியோப்பிய அரசி காஸியோப்பியா
Cassiopeia
|
19
|
செண்டாரஸ் (Centaurus)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
செண்டார்
(Centaur)
|
20
|
சிஃபியஸ்
(Cepheus)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
எத்தியோப்பிய அரசன் சிஃபியஸ்
(Cepheus)
|
21
|
சீட்டஸ்
(Cetus)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
திமிங்கிலம்
(Whale)
|
22
|
கெமிலியான்
(Chameleon)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
ஓணான்
(Chameleon)
|
23
|
சிர்சினஸ்
(Circinus)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
கவராயம்
(Compasses)
|
24
|
கொலம்பா
(Columba)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
புறா
(Dove)
|
25
|
கோமா பெரினைஸஸ்
(Coma Berenices)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
பெரினைசின் முடி
(Berenice's Hair)
|
26
|
கரோனா ஆஸ்டிரலீஸ்
(Corona Australis)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
தெற்கு மகுடம்
(Southern Crown)
|
27
|
கரோனா போரியலிஸ்
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
வடக்கு மகுடம்
(Northern Crown)
|
28
|
கோர்வஸ்
(Corvus)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
அண்டங்காக்கை
Crow (Raven)
|
29
|
கிரேட்டர்
(Crater)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
கோப்பை
(Cup)
|
30
|
க்ரக்ஸ்
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
தெற்கு சிலுவை
(Southern Cross)
|
31
|
சிக்னஸ்
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
அன்னம்
(Swan)
|
32
|
டால்பினஸ்
(Delphinus)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
டால்பின்
(Dolphin)
|
33
|
டுராடொ
(Dorado)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
வாள் மீன்
Swordfish (Goldfish)
|
34
|
டிராகோ
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
யாளி
(Dragon)
|
35
|
ஈக்குலியஸ்
(Equuleus)
|
இராசிக்கு வடக்கே
(North
of Zodiac)
|
பெண் குதிரை
(Filly)
|
36
|
எரிடானஸ்
(Eridanus)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
ஆறு
Eridanus (river)
|
37
|
ஃபார்னக்ஸ்
(Fornax)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
உலை
(Furnace)
|
38
|
ஜெமினி
|
இராசி
(Zodiac)
|
இரட்டையர்
(Twins)
|
39
|
ஜீரஸ்
(Grus)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
கொக்கு
(Crane)
|
40
|
ஹெர்குலஸ்
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
ஹெர்குலஸ்
(Hercules)
|
41
|
ஹொரொலோஜியம்
(Horologium)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
கடிகாரம்
(Clock)
|
42
|
ஹைட்ரா
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
கடல் பாம்பு
(Sea Serpent)
|
43
|
ஹைட்ரஸ்
(Hydrus)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
நீர்ப்பாம்பு
(Water Snake)
|
44
|
இண்டஸ்
(Indus)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
இந்தியன்
(Indian)
|
45
|
லாசெர்ட்டா
(Lacerta)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
பல்லி
(Lizard)
|
46
|
லியோ
|
இராசி
(Zodiac)
|
சிம்மம்
(Lion)
|
47
|
லியோ மைனர்
(Leo Minor)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
சிறிய சிம்மம்
(Little Lion)
|
48
|
லீபஸ்
(Lepus)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
முயல்
(Hare)
|
49
|
லிப்ரா
|
இராசி
(Zodiac)
|
தராசு
(Scales)
|
50
|
லூப்பஸ்
(Lupus)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
ஓநாய்
(Wolf)
|
51
|
லிங்க்ஸ்
(Lynx)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
காட்டுப் பூனை
(Lynx)
|
52
|
லிரா
(Lyra)
|
இராசிக்கு வடக்கே
(North
of Zodiac)
|
U வடிவ கிரேக்க இசைக்கருவி
Lyre (Harp)
|
53
|
மென்சா
(Mensa)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
தெற்கு ஆப்ரிகாவில் உள்ள மேசை மலை
Table (mountain)
|
54
|
மைக்ரோஸ்கோப்பியம்
(Microscopium)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
நுண்னோக்கி
(Microscope)
|
55
|
மோனோசெரோஸ்
(Monoceros)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
ஒற்றைக் கொம்புள்ள குதிரை
(Unicorn)
|
56
|
மஸ்கா
(Musca)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
தெற்கு ஈ
(Southern Fly)
|
57
|
நார்மா
(Norma)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
மட்டக் கோல்
Rule (straight edge)
|
58
|
ஆக்டன்ஸ்
(Octans)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
கோணமானிக் கருவி
Octant
|
59
|
ஒஃபியாகெஸ்
(Ophiuchus)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
பாம்பைக் கையில் பிடித்திருப்பவர்
(Serpent-Bearer)
|
60
|
ஓரியன்
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
வேட்டைக்காரன்
(Orion)
|
61
|
பாவோ
(Pavo)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
மயில்
(Peacock)
|
62
|
பெகாசஸ்
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
பறக்கும் வெள்ளைக் குதிரை
(Pegasus)
|
63
|
பெர்சியஸ்
(Perseus)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
கிரேக்க வீரன் பெர்சியஸ்
(Perseus)
|
64
|
பீனிக்ஸ்
(Phoenix)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
பீனிக்ஸ் பறவை
(Phoenix)
|
65
|
பிக்டர்
(Pictor)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
ஒவியர் அல்லது ஓவியரின் தாங்கி
Painter (or his Easel)
|
66
|
பிஸ்செஸ்
|
இராசி
(Zodiac)
|
மீன்கள்
Fishes
|
67
|
பிச்சிஸ் ஆஸ்டிரினஸ்
(Piscis Austrinus)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
தெற்கு மீன்
(Southern Fish)
|
68*
|
பப்பிஸ்
(Puppis)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
கப்பல் பின்புறக் கூரை
Poop (of Argo)1
|
69
|
பிக்ஸிஸ்
(Pyxis)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
மாலுமி திசைகாட்டி
Mariner's Compass
|
70
|
ரெட்டிக்குலம்
(Reticulum)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
வலை
Net
|
71
|
சஜிட்டா
(Sagitta)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
அம்பு
Arrow
|
72
|
சஜிடேரியஸ்
|
இராசி
(Zodiac)
|
வில்லாளி
Archer
|
73
|
ஸ்காபியஸ்
|
இராசி
(Zodiac)
|
விருச்சிகம்
Scorpion
|
74
|
ஸ்கல்ப்டர்
(Sculptor)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
சிற்பி
Sculptor
|
75
|
ஸ்கட்டம்
(Scutum)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
கேடயம்
Shield
|
76
|
செர்பன்ஸ்
(Serpens)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
பாம்பு
Serpent
|
77
|
செக்ஸ்டென்ஸ்
(Sextans)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
கோணம் அளவிடும் கருவி
Sextant
|
78
|
டாரஸ்
(Taurus)
|
இராசி
(Zodiac)
|
காளை
Bull
|
79
|
டெலிஸ்கோப்பியம்
(Telescopium)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
தொலை நோக்கி
Telescope
|
80
|
டிரையாங்குலம்
(Triangulum)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
முக்கோணம்
Triangle
|
81
|
டிரையாங்குலம் ஆஸ்டிரலி
(Triangulum Australe)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
தெற்கு முக்கோணம்
Southern Triangle
|
82
|
டுகானா
(Tucana)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
Toucan
|
83#
|
உர்சா மேஜர்
(Ursa Major)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
பெரிய கரண்டி
Big Dipper 3
|
84#
|
உர்சா மைனர்
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
சிறிய கரண்டி
Little Dipper 3
|
85*
|
வேலா
(Vela)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
Sail (of Argo)1
|
86
|
விர்கோ
(Virgo)
|
இராசி
(Zodiac)
|
கன்னி
Virgin
|
87
|
வோலன்ஸ்
(Volans)
|
இராசிக்கு தெற்கே
(South of Zodiac)
|
பறக்கும் மீன்
Flying Fish
|
88
|
வெல்பெக்கூலா
(Vulpecula)
|
இராசிக்கு வடக்கே
(North of Zodiac)
|
நரி
Fox
|
17*, 68*, 85* - ஆரம்பத்தில் விண்மீன் கூட்டத்தின் அசல் பெயர் ஆர்கோ
நேவிஸ் (Argo Navis) என்பதாகும். இதன் பொருள் ஆர்கோவின் கப்பல் என்பது. இது பின்னர் கரினா (Carina), பப்பிஸ்
(Puppis)
மற்றும் வேலா (Vela)
என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டது.
பொதுவாக ஒரு விண்மீன் கூட்டத்தில் பொலிவினைப்
பொருத்து விண்மீன்களை கிரேக்க எழுத்துக்களில் அவற்றின் விண்மீன் கூட்டத்தின் பெயருடன்
ஆல்பா, பீட்டா, காமா, .....(α, β,
γ,....) என்று பெயரிட்டு அழைப்பது வழக்கம். உதாரணமாக லியோ விண்மீன் கூட்டத்தில் மிகப்
பொலிவான விண்மீன் ஆல்பா லியோனிஸ் (α
-Leonis) என்று கிரேக்க முதல் எழுத்து சேர்த்து
அழைக்கப்படும்.
83# -
பெரும் கரண்டி அல்லது கலப்பை (Big dipper or plough) என்பது தனி விண்மீன் கூட்டம் இல்லை.
இது பெரும் கரடி (Great Bear) விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.
84# -
அதே போல சிறிய கரண்டி அல்லது கலப்பை (Small dipper or plough) என்பது தனி விண்மீன்
கூட்டம் இல்லை. இது பெரும் கரடி (Little Bear) விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.
அடுத்த பகுதியில் ஆண்டிரமெடா கதையுடன்
சந்திக்கிறேன்.
good
ReplyDeletegood
ReplyDeleteவாழ்க வளமுடன் ஐயா ,
ReplyDelete