Posts

Showing posts from September, 2016

வசீகரிக்கும் வானமும் வசப்படும் - பகுதி (4)

Image
"தங்களது நாட்டை முற்றாக அழிக்க சீட்டஸ் அனுப்பிவைக்கப்பட்ட செய்தியை அறிந்த செஃப்பியஸும், காஸியோப்பியாவும் மனக்கலக்கம் அடைந்தனர். என்ன செய்வது என்றறியாமல் திகைத்தனர். பொதுவாக நமக்கு மனக்கலக்கமும், குழப்பமும் வரும் போது கோவில்களுக்கு குழப்பம் தீர்ந்து மனநிம்மதி வேண்டி கோவிலுக்கு செல்வதில்லையா, அது போல அந்தக் காலத்தில் ஆப்பிரிக்க நாடான லிபியாவில் (Libiya) , நுபியா (Nubia) மற்றும் எகிப்தில் (Egypt)  வணங்கப்பட்ட தெய்வம், அம்மோன் அல்லது அமுன்  (Ammon or Amun) . மாசிடோனியாவின் அரசன் மகா அலெக்ஸாண்டர் இந்த தெய்வத்தின் சந்நதியில் தேவ ஆரூடம் (Oracle) கேட்பதற்காகவே சுற்று வழியில் வந்ததால் புகழ் பெற்றது.  இந்த அம்மோன் கோவில் பண்டைய எகிப்து நாட்டின் தலை நகரான மெம்ஃப்பிஸ் (MEMPHIS) க்கு 500 கிமீ மேற்கில்  சிவா பாலைவனச் சோலை (SIWA OASIS) என்ற இடத்தில் அமைந்துள்ளது. படம்: Oracle of Ammon, Egypt. Picture courtesy : tripadvisor.com இந்த அம்மோன் கோவிலில் ஆரூடம் கேட்ட செஃப்பியஸ் மற்றும் காஸியோப்பியா இருவருக்கும், சொல்லப்பட்ட தீர்வு ஆண்டிரமெடாவை சீட்டஸுக்கு பல...

வசீகரிக்கும் வானமும் வசப்படும் - பகுதி (3)

Image
குழந்தைகள் காலையில் எழுந்தலிருந்தே, “தாத்தா எப்போது வானவியல் தொலைநோக்கி செய்வோம்” என்று ஆரம்பித்து விட்டனர். காலையில் தினப்படி கடமைகளை முடித்த பின்னர் பத்து மணிக்கு  செய்யலாம். கடைகள் பத்து மணிக்கு மேல்தான் திறக்கும் என்று சொல்லி விட்டார். பசங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். இருந்தாலும் மறைத்துக் கொண்டு குளித்து, சிற்றுண்டி சாப்பிட்டு கடைக்கு போக தயாராக இருந்தனர். மணி பத்தானது. குப்புசாமி குழந்தைகளுடன் நெல்லைக்கு தொலைநோக்கி செய்ய தேவையான பொருட்கள் வாங்க காரில் புறப்பட்டார். வேலு காரைச் செலுத்த பின் இருக்கையில் அமர்ந்து போகும் வழியில் உள்ள முக்கியமான இடங்களை சுட்டிக்காட்டிய வண்ணம் வந்தவரை, ராகுலும், சுகன்யாவும் , “தாத்தா கதையை தொடருங்க, இரவு நட்சத்திரம் பார்க்க வேண்டும் என்பதால் கதை சொல்ல முடியாதே” என்றனர். அதுவும் சரிதான் என்று நேற்று இரவு விட்ட இடத்திலிருந்து தொடர ஆரம்பித்தார். ஆனால் முன்னிருக்கையில்  அமர்ந்திருந்த குமரேஷ் தனக்கு சரியாக காதில் விழவில்லை என்று சொன்னதால் , சரி, இரவில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார். முதலில் ஒரு ஆய்வுக்கூடத்திற்குத் தேவையான பொருட்களை விற்க...

வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (7)

Image
பன் நெடுங்காலமாக மனிதன் விண்மீன்கள் நிலையானவையாக இருப்பதைப் பார்த்து வந்ததால், அவை தொடக்கமும் , முடியும் அற்றவை என்றே கருதினான்.வானியலாளர்கள் கூட , பல நூற்றாண்டு காலங்களாக இத்தகைய கருத்தையே கொண்டிருந்தனர்.ஆனால் எப்போது விண்மீன்கள் ஒளிப் புள்ளிகள் இல்லை என்பதும் உண்மையில் அவைகள் அனைத்தும் மிகப் பெரிய நெருப்பாய் பற்றி எரிந்தபடி ஒளிரும் வெப்பமான வாயுக் கோளங்கள் என்பதும் தெரிய வந்ததும் மேற் சொன்ன கருத்து பிழையானதென முடிவானது. ஏனெனில் விண்மீன்கள் வெப்பமான ஒளிரும் கோளங்கள் என்பது உண்மையானால் அவை எதையோ எரித்தே ஆற்றலை வெளித்தருகின்றன.அப்படி எதையோ எரித்து ஆற்றலைத் தரும் பட்சத்தில், எப்போது எரியத் தொடங்கியது?அதாவது எரியத் தொடங்கியதுதான் அதன் தொடக்கம் என்றாகிறது.அதே போல் எரி பொருள் முற்றிலுமாக எரிந்து தீர்ந்த பின்பு, எப்படி விறகு அடுப்பில் எரிந்து சாம்பல் மிஞ்சுகிறதோ அது போல விண்மீனில் என்ன மிஞ்சும்?எரி பொருள் முற்றிலுமாக எரிந்து தீர்ந்த நிலையை விண்மீன்களின் முடிவு என்று கூறலாமா? நெடு நாட்களாகவே விண்மீன் எப்படி ஒளி தருகிறது என்பதை புரிந்து கொள்ள பூமியில் அவன் அறிந்த முறைகளில் வெப்பத்தையும்,ஒ...

வசீகரிக்கும் வானமும் வசப்படும் - பகுதி (2)

Image
ஆண்டிரமெடா, காஸியோப்பியா,செஃப்பியஸ் பெர்சியஸ், பெகாசஸ், சீட்டஸ் ஆகிய ஆறு நட்சத்திரக் கூட்டங்களின் கதை. நேற்றிலிருந்தே குப்புசாமிக்கு இருப்புக் கொள்ளவில்லை. மகன் தேவநாதனின் குழந்தைகள் குமரேஷ், காவ்யா இருவரும் கான்பூரிலிருந்து நாளைக்கு  சேரன்மகாதேவிக்கு வரப்போகிறார்கள். இந்த மாதம் முழுவதும் தங்களுடன் கழிக்கப் போகிறார்கள் என்ற நினைப்பே அதற்குக் காரணம். அப்புறம் அடுத்த நாள் மகள் தர்ஷணா வயிற்றுப் பேரன் ராகுலும், பேத்தி சுகன்யாயும் வேறு சென்னையிலிருந்து வரப் போகிறார்கள். ஆக இன்னும் ஒரு மாதம் வீடு கலகல என்றிருக்கும். பக்கத்து வீடு, எதிர் வீடு என்று எல்லாரிடமும் சொல்லியாகி விட்டது. பாட்டி ராஜத்திற்கு தின்பண்டங்கள் செய்வதிலேயே கடந்த வாரத்தில் பாதி நாள் கழிந்து விட்டது. பெரிய கிராமத்து எட்டுப்பத்தி வீடு, அதற்குப் பின்னால் நூற்றம்பது அடியில் தென்னந்தோப்பு. தோப்பு முடியும் இடத்தில் வாய்க்கால் படித்துறை. அதைத்தாண்டி பச்சைப் பசேல் என்று வயல் வெளி அதன் பின் தாமிரபரணி.  எப்படியும் எட்டரை மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் வந்தாலும் ஜானகிராம் ஹோட்டலில் டிபன் சாப்பிடாமல் தேவநாதன் வரமாட்ட...

வசீகரிக்கும் வானமும் வசப்படும் - பகுதி (1)

உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட 88 விண்மீன் கூட்டங்களின் பெயர்கள் மிகவும் தயக்கமாகவே இருந்தது. நமது நகரத்து அடுக்கக இயந்திர வாழ்வில் அடுத்த வீட்டுக்காரர் பெயரையே தெரிந்து கொள்ள யாரும்  ஆர்வம் காட்டுவதில்லை. அப்படி இருக்க வானத்தை பார்க்க யாருக்கு முதலில் நேரம் இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் நகரத்தின் தூசு காரணமாக விண்ணில் விண்மீன்கள் கட்புலனாவது கொஞ்சம் சிரமம்தான். ஆக இரவு வானை ரசிப்பதற்கு நேரம் ஒதுக்கும் நிலையில் நமது அலுவலகங்களில் பணி நேரம் அமைவதும் இல்லை. இருப்பினும் புதுக்கட்டுரைத் தொடர் ஒன்றை ஆரம்பிக்க எண்ணினேன். முதலில் இராசி விண்மீன் கூட்டத்தில் காணப்படும் 27 விண்மீன்கள் பற்றிய தொடர் எழுதினேன். அதிக வரவேற்பு இல்லை என்று சொல்ல முடியாது. காரணம் பல ஆயிரக்கணக்கான வலைப்பூக்களை  இதுவரையில்  படித்தவரோ அல்லது பார்வையிட்டவரோ இல்லை என்பது ஆச்சரியப்படத்தக்க உண்மை.  இப்போது எதற்கு இதை எல்லாம் சொல்கிறேன் என்றால், என்னுடைய கட்டுரைகளை சராசரியாக குறைந்தது 50 பேர்களாவது படிக்கிறார்கள் அல்லது பார்வையிடுகிறார்கள் என்பதே பெரிய விஷயம். 1930 களில் கூட  மக்கள்...