அவிட்டம் விண்மீன் கூட்டம் - டெல்பினஸ் ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா (DELPHINUS α, β, γ and δ)
அவிட்டம் விண்மீன் கூட்டத்தில் காணப்படும் நான்கு முக்கியமான விண்மீன்கள் டெல்பினஸ் ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா ஆகியனவாகும். டெல்பினஸ் (Delphinus) விண்மீன்
கூட்டம் வட வான் அரைக் கோளத்தில் காணப்படும் மிகச்சிறிய விண்மீன் கூட்டங்களில்
ஒன்றாகும். இலத்தீன் மொழியில் டால்பினஸ் என்றால் டால்பின் என்று பொருள்படும்.

கிரேக்க கடல் கடவுளான பொசிடன் (Poseidon) திருமணம் செய்ய விரும்பிய ஆம்ஃபிட்ரைட் (Amphitrite) என்ற கடல் மங்கையை (Nereid) தேட டால்பினை (Dolphin) அனுப்பியதாக கிரேக்க புரானங்களில் கூறப்படுகிறது.
நெரீயஸ்(Nereus) மற்றும் டோரிஸ்(Doris) ஆகியவர்களின் மகள்களான நெரீத்துகள் (Nereids) எண்ணிக்கையில் மொத்தம் ஐம்பது பேர். இவர்கள் ஏஜியன் கடலின் அடியாழத்தில் தங்கள் தந்தையுடன் இவர்கள் வசித்து வந்தனர். இவர்கள் கடற்பயணத்தில் மாலுமிகள் கடும் புயல்களில் சிக்கிக் கொள்ளும் போது, அவர்களை வழிநடத்தி காப்பாற்றுவார்கள் என்று நம்பப்பட்டது. அக்கிலிஸின் (Achilles) இன் தாயான திடிஸ்(Thetes) அதிகம் அறியப்பட்ட நெரீத் எனலாம்.
Picture courtesy: capetorio.wordpress.com

கிரேக்க கடல் கடவுளான பொசிடன் (Poseidon) திருமணம் செய்ய விரும்பிய ஆம்ஃபிட்ரைட் (Amphitrite) என்ற கடல் மங்கையை (Nereid) தேட டால்பினை (Dolphin) அனுப்பியதாக கிரேக்க புரானங்களில் கூறப்படுகிறது.
Amphitrite and Poseidon in a chariot
Courtesy : www.britannica.com
நெரீயஸ்(Nereus) மற்றும் டோரிஸ்(Doris) ஆகியவர்களின் மகள்களான நெரீத்துகள் (Nereids) எண்ணிக்கையில் மொத்தம் ஐம்பது பேர். இவர்கள் ஏஜியன் கடலின் அடியாழத்தில் தங்கள் தந்தையுடன் இவர்கள் வசித்து வந்தனர். இவர்கள் கடற்பயணத்தில் மாலுமிகள் கடும் புயல்களில் சிக்கிக் கொள்ளும் போது, அவர்களை வழிநடத்தி காப்பாற்றுவார்கள் என்று நம்பப்பட்டது. அக்கிலிஸின் (Achilles) இன் தாயான திடிஸ்(Thetes) அதிகம் அறியப்பட்ட நெரீத் எனலாம்.
Picture courtesy: capetorio.wordpress.com
டெல்பினஸ் தாலமியால் இரண்டாம்
நூற்றாண்டில் அட்டவணையிடப்பட்டது. இவ் விண்மீன் கூட்டம் NGC 6934 என்ற கால்டுவெல் 47( Caldwel 47),NGC 7006 என்ற கால்டுவெல் 42( Caldwel 42) போன்ற அண்ட மையத்தை (Galetic
Core) ஒரு துணைக் கோளைப் போல சுற்றிவரும் கோள வடிவ விண்மீன் கொத்துக்களையும் (Globular
clusters) மற்றும் கோள் நெபுல்லாக்கள் (Planetary nebulae) NGC 6891, NGC
6905 ஆகிய ஆழ் வான் பொருட்களின் (Deep sky
objects) இல்லமாகத் திகழ்கிறது.
டால்பினஸ் 69 ஆவது பெரிய விண்மீன்
கூட்டமாகும். இது 189 சதுர பாகை பரப்பளவு கொள்டது. வட வான் கோளத்தில் நான்காவது காற்
துண்டுப்பகுதியில்(NQ4) அமைந்துள்ளது. +90 பாகை முதல்-70 பாகைகள் வரையிலான அட்சங்களில்
கட்புலனாகும்.
செப்டம்பர் மாதம் இரவு
9.00 மணி அளவில் வடக்கு வானில் கட்புலனாகும்.
இந்த விண்மீன் கூட்டத்தை சுற்றியுள்ள பிற
விண்மீன் கூட்டங்கள். கும்பம்(Aquarius), திருவோணம்(Aquilla), பெகாசஸ்(Pegasus) தனுசு(Sagitta)
மற்றும் வல்பிகுலா(Vulpecula) ஆகியன.
டெல்பினஸின் ஐந்து விண்மீன்களுக்கு கோள்கள்
உண்டு.இதில் ரோட்டனெவ்(Rotanev) மற்றும் பீட்டா டெல்பினி ஆகிய இரண்டும் பொலிவான விண்மீன்கள்.
அவிட்டம் விண்மீன் கூட்டத்துடன் தொடர்புடைய விண்வீழ் கற்கள்(Meteor) பொழிவுகள் இல்லை.
டால்பினஸ், தேவலோக நீர்க் குடும்பத்தை (HEAVENLY
WATER FAMILY) சேர்ந்தது. இக் குடும்பத்தில் உள்ள பிற விண்மீன் கூட்டங்கள் கொலம்பா(Columba) கரினா(Carina), இகுயுலியஸ்(Equuleus),
எரிடானஸ்(Eridanus),பிஸ்சிஸ்
ஆஸ்டிரினஸ்(Piscis Austrinus),
பப்பிஸ்(Puppis),
பிக்ஸிஸ்(Pyxis)
, மற்றும் வெலா(Vela) ஆகியன.
.மொத்தம் விண்மீன் கூட்டங்கள் எட்டு குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1) பெருங்கரடிக் குடும்பம்
(URSA MAJOR FAMILY)
2) ராசிக் குடும்பம் (ZODIAC FAMILY)
3) பெர்சியஸ் குடும்பம் (PERSEUS FAMILY)
4) ஹெர்குலிஸ் குடும்பம் (HERCULES FAMILY)
5) ஓரியன் குடும்பம் (ORION FAMILY)
6) தேவலோக நீர்க் குடும்பம்
(HEAVENLY WATER FAMILY)
7) பேயர் குடும்பம் (BAYER FAMILY) மற்றும்
8) ல கெய்லி குடும்பம் (LA CAILLE) என்று பிரிக்கப்பட்டுள்ளது.
பெருங்கரடிக் குடும்பம் (URSA MAJOR FAMILY) முழுவதும் வட வான் அரைக்
கோளத்திலும், ராசிக் குடும்பம் (ZODIAC FAMILY) சூரியனின் தோற்ற இயக்கப்பாதையில் விரிந்தும், பெர்சியஸ் குடும்பம்
(PERSEUS FAMILY) பெரும்பாலனவை வட வான் அரைகோளத்திலும்,
ஹெர்குலிஸ் குடும்பம் (HERCULES FAMILY) வட, தென் வான் அரைக் கோளங்களில்
பிரிந்தும், தேவலோக நீர்க் குடும்பம் (HEAVENLY WATER FAMILY) பெரும்பாலும் தென் அரைக்
கோளத்திலும், ஓரியன் குடும்பம் (ORION FAMILY), பேயர் குடும்பம் (BAYER FAMILY) மற்றும்
ல கெய்லி குடும்பம் (LA CAILLE) ஆகிய மூன்றும் முழுவதும்
தென் வான் அரைக் கோளத்திலும் அமைந்திருக்கும்.
அவிட்டம் விண்மீன் கூட்டம்
வட மொழியில் தனிஷ்டா என்றும் பறவை, காக்கை, வசுக்கள் நாள், புள், ஆவணி என்றெல்லாம்
தமிழில் அழைக்கப்படுகிறது.
இரண்டு புராணக் கதைகள் இந்த
விண்மீன் கூட்டத்துடன் தொடர்புபடுத்தி கூறப்படுகிறது.
ஒன்று பொசிடன்(Poseidon), ஆம்ஃபிட்ரைட்டை(Amphitrite)
தேட டால்பினை அனுப்பியது. அதை முன்னரே பார்த்தோம். மற்றது லெஸ்பாஸ்(Lespos) தீவுகளைச்
சேர்ந்த கி.மு ஏழாம் நூற்றாண்டில் புகழ் பெற்ற சிறந்த கவிஞனும், லயர் இசைக் கலைஞனுமான
அரியானின்(Arion) உயிரைக் காப்பாற்றியதற்கு பாராட்டு முகமாக இசை மற்றும் கவிதைகளின்
கடவுளான அப்போலோ(Apollo) டால்பனை விண்மீனாக வானில் இலங்க வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
அரியான் தெற்கு இத்தாலிருந்து ஒரு இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு கிரீஸுக்கு திரும்பி
வரும் போது கப்பலில் இருந்த மாலுமிகள் அவனைக் கொன்று , அவந்து செல்வங்களைக் கொள்ளையிட
சதித்திட்டம் தீட்டி அவனைச் சூழ்ந்து கொண்டனர். அரியான் கடைசியாக ஒரே ஒரு பாடல் பாட
அனுமதி வேண்டினான். அதற்கு அந்த மாலுமிகளும் அனுமதித்தனர். அவன் தனது லைரா இசைக்கருவியை
இசைத்தபடி பாடத்துவங்கியதும் டால்பின்கள் கப்பலைச் சுற்றி குதிதோடியபடி வந்தன. அவைகள்
தன்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையுடன் கடலில் அரியான் குதித்தான். அவற்றுள் ஒரு
டால்பின் அவனை தன் மீது சுமந்தபடி பத்திரமாக கிரீஸில் கரை சேர்த்தது.
பிற்பாடு அரியான்
அந்த மாலுமிகளை எதிர்கொண்டு போரிட்டு சிறைப்பிடித்து மரண தண்டனை அளித்தான். இதன் காரணமாகவே
டால்பினையும், அரியானின் லைரா இசைகருவியையும் அப்போலோ கடவுள் வானில் விண்மீனாக நிலை
நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதன் நீண்ட பெட்டி போன்ற தோற்றம்
காரணமாக இந்த விண்மீன் கூட்டடத்தை சிலர் ஜாப்பின் சவப் பெட்டி(Job’s coffin) என்றழைப்பர்.
இந்தப் பெயர் இதன் பொலிவான ஆல்பா முதல் டெல்டா வரையிலான நான்கு விண்மீன்களுக்கு மட்டுமே
பொருந்தும்.
இனி டெல்பினஸ் விண்மீன் கூட்டத்தில்
காணப்படும் முக்கியமான நான்கு விண்மீன்களைக் காணலாம்.
ஆல்பா டெல்பினி (α - DELPHINI)
இந்த விண்மீ்ன்தான் மிகப் பொலிவான
விண்மீன். A யிலிருந்து G வரையான ஏழு கூட்டாளிகளைக் கொண்ட பல் விண்மீன் தொகுப்பான இதன்
ஒட்டு மொத்த தோற்றப் பொலிவு எண் +3.77 ஆகும். ஆல்பா டெல்பினி A முதல்ஆல்பா டெல்பினி
G வரையிலான விண்மீன்கள் அனைத்தும் சற்றேறத்தாழ 241 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த A
மற்றும் B9V வகை விண்மீன்கள். ஆல்பா டெல்பினி விண்மீன் சில சமயம் சுவலோசின்(SUALOSIN) என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பெயர் இத்தாலிய வானியலாளர் நிக்கோலோ காக்சியட்டோர் (NICCOLO CACCIATORE). இது அவரது இலத்தின் மொழியாக்கம்
பெற்ற பெயரான நிக்கோலஸ் (NICOLAUS) என்பதை கடைசி எழுத்திலிருந்து
முதல் எழுத்து என்று எழுதப்பட்ட பெயராகும்.
அடுத்து
வருவது பீட்டா டெல்பினி (β - DELPHINI)
பீட்டா
டெல்பினிக்கும் நிக்கோலோ காக்சியட்டோர் பெயர் கொடுத்துள்ளார். இலத்தீன் மொழியாக்கத்தில் வெனெட்டர்(VENATOR) என்ற அவரது குடும்பப் பெயருக்கு வேட்டைக்காரன் (HUNTER) என்று பொருள். இந்த VENATOR வார்த்தையை முன்போல கடைசி எழுத்து R ல் தொடங்கி
V யில் முடிவடையுமாறு ரோட்டானெவ்( ROTANEV) என்று எழுதப்படுகிறது. பீட்டா டெல்பினி இரு இருமை விண்மீன். இதனை 1873 ஆம்
ஆண்டு பர்ன்ஹாம் (S.W. BURNHAM) என்ற அமெரிக்க வானியலாளர்
கண்டறிந்தார். இந்த விண்மீன் அமைப்பு கிட்டத்தட்ட
1.8 பில்லியன் ஆண்டுகள் வயதுடையது. இந்த இரட்டையில் ஒன்ரு F5 III வகை அரக்க விண்மீன்
மற்றது F5 IV வகை துணை அரக்க விண்மீன். இவைகள் ஒன்றை ஒன்று 26.66 வருடங்களில் சுற்றி
வருகின்றன. இவை 0.44 வில் வினாடி தள்ளியே அமைந்துள்ளதால் தொலைநோக்கிகளால் பிரித்தறிவது
கடினம்.
காமா டெல்பினி விண்மீன் ( γ - DELPHINI)
காமா டெல்பினி மற்றுமொரு இரட்டை
விண்மீன். இது சுமார் 101 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இதன் முதன்மை விண்மீன்
மஞ்சள் - வெள்ளை நிற F7 V வகைக் குள்ளன் (Dwarf). கூட்டாளி விண்மீன் K1 IV ஆரஞ்சு நிற துணை அரக்க(Giant) விண்மீன். இவற்றின்
தோற்றப் பொலிவுகள் முறையே +5.14 மற்றும் +4.27 ஆகும். இதில் துணை விண்மீனை ஒரு கோள்
சுற்றி வருவதாக 1999 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
டெல்ட்டா டெல்பினி (δ - DELPHINI)
டெல்டா டால்பினி ஒரு A 7 III வகை அரக்க விண்மீன். இதன் தோற்றப் பொலிவெண்
+ 4.434. இது ஒரு பொலிவு மாறும் வகை விண்மீன்.
இந்த கட்டுரையில் பயன் படுத்தப்பட்ட எல்லா படங்களும் பல்வேறு இணையதளங்களிலிருந்து எடுக்கப்பட்டது. அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
Comments
Post a Comment