திருவோணம் என்ற அக்யுல்லா α, β மற்றும் γ ஆகிய விண்மீன்கள்
திருவோணம் (SRAVANA) என்ற விண்மீன் குழு
அடங்கியுள்ள அக்யுல்லா (AQUILA CONSTELLATION) பற்றி காண்போம்.
திருவோணத்தில் அக்யுல்லா
α, β மற்றும் γ ஆகிய விண்மீன்கள் உள்ளன.
அக்யுல்லா வடக்கு வான் அரை கோளத்தில்,
வான் கோள மத்திய கோடு (CELESTIAL
EQUATOR) க்கு அருகில் உள்ளது. இலத்தின் மொழியில்
இது கழுகு (EAGLE) என்று பொருள்படும்.
தமிழில் இதனை
முக்கோல், உலக்கை, மாயோன் நாள், முக்கோல், சிரவணம், சோணை, வயிரம் என்று அழைகப்படுகிறது. கிரேக்க புராணக்கதைகளில் இந்த விண்மீன் ரோமானியக்
கடவுள் ஜூபிடரின் கழுகுகைக் குறிப்பிடுகிறது.
இந்த விண்மீன் கூட்டம் தாலமியால் கிபி
2 ஆம் நூற்றாண்டில் வகைப்படுத்தப்பட்டது. அக்யுல்லா விண்மீன் கூட்டம் தன்னகத்தே முன்று
முக்கியமான விண்மீன்கள் ஆல்டெர் (ALTAIR), அல்ஷைன்(ALSHAIN) மற்றும் தாராஸெட்
(TARAZED) என்றழைக்கப்படும் ஆல்பா அக்யுல்லா, பீட்டா அக்யுல்லா மற்றும் காமா அக்யுல்லா
ஆகியவற்றையும் மற்றும் நிறைய ஆழ் வான் பொருட்களையும் (DEEP SKY OBJECTS) கொண்டுள்ளது.
வடக்கு வான் அரைக் கோளத்தில் அமைந்துள்ள விண்மீன் கூட்டங்களில் அக்யுல்லா 22வது பெரிய
வின்மீன் கூட்டம். 652 சதுர பாகைகள் பரப்பு கொண்டது. நான்காவது கால் பகுதியில்
(NQ4)அமையப் பெற்றது. இதனை -75o முதல் +90o வரையிலான அட்சங்களில்
காண முடியும். அருகில் அமைந்திருக்கும் விண்மீன்
கூட்டங்கள் காப்ரிகார்னஸ்(CARPICORNUS), டெல்பினஸ்(DELPHINUS), ஹெர்குலிஸ்(HERCULES)சஜிடேரியஸ்(SAGITTARIUS)
ஸ்கட்டம்(SCUTUM), செர்பென்ஸ்(SERPENS) மற்றும் கௌடா(CAUDA) ஆகியன ஆகும்.
அக்யுல்லாவில்
ஏழு விண்மீன்களுக்கு கோள்கள் உள்ளன. ஆல்டெர்(Altair) எனப்படும் ஆல்பா அக்யுல்லி,மிகவும்
பொலிவான விண்மீன்னாகும். வானில் காணப்படும் 12 வது பொலிவான விண்மீன். திருவோணத்துடன்(Aquila)
தொடர்புடைய இரு விண்கற்கள் பொழிவுகள் உள்ளன. அவை ஜூன் அக்யுலிட்ஸ்(June Aquilids)மற்றும்
எப்சிலன் அக்யுலிட்ஸ்(Epsilon Aquilids) என்றழைக்கப்படுகின்றன. இந்த விண்மீன் கூட்டம்
ஹெர்குலிஸ் விண்மீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை. இக் குடும்பத்தைச் சேர்ந்த பிற விண்மீன்
கூட்டங்களில் ஆரா(Ara), செண்டாரஸ்(Centaurus),
கரோனா(Corona) கோர்வஸ்(Corvus) கிரேட்டர்(Crater) ஹைட்ரா(Hydra) லூப்பஸ்(Lupus) செர்பன்ஸ்(Serpens)
போன்றவை குறிப்பிடத்தக்கவை.
கிரேக்க புராணக் கதைகளில் ஒன்றில்,அக்யுல்லா ஜீயஸ்(ZEUS)
கடவுளின் செல்லக் கழுகு. டிராயை தாய் நாடாகக் கொண்ட தெய்வீக நாயகன் கானிமெடெ(GANYMEDE).
கானிமெடெ டார்டானியா(DARDANIA) வின் டிராஸ்(TROS) க்கும் நதிக்கடவுள் ஸ்கமெண்டரின்(Scamander) மகளான காலிரோ(Callirrhoe) க்கும் பிறந்தவன்.
மற்றொரு
கதையில் அகியுல்லாவின் இருண்ட பக்கம் பற்றி சொல்லப்படுகிறது. இது பிரமீதீயஸ்(PROMETHEUS)யுடன்
தொடர்பு பெற்றது. பிரமீதீயஸ் மானிடர்கள் மீது பரிவு கொண்டவன். டைட்டன்களின் கடைசிக்
கடவுள். ஜீயஸுக்கு ஆலோசகன் ஆக இருந்தான்.
பூமியில் நெருப்பு இல்லாததால் மனிதர்களின்
இடர்களைக் கண்ட அவன் சூரியனின் கிரணங்களில் ஒன்றை திருடி வந்து ஒரு உள்ளீடற்ற ஒரு தண்டின் வழியாக அதனை பூமிக்கு கடத்தினான். இது
ஜீயஸுக்கு பிடிக்கவில்லை. அதனால் கோபம் கொண்டு அத்தகைய அரிய பரிசுக்கு மானிடர்கள் தகுதி
பெற்றவர்கள் இல்லை என்பதால், பிரமீதீயஸை நிர்வாணமாக்கி சங்கிலியால் மலையின் மறுபுறம்
பிணைக்கப்பட்டு, அகியுல்லா கழுகால் தொடர்ந்து கொத்த தண்டனை அளித்தது. ஆனால் அவன் சாகாவரம்
பெற்றவனாதலால், தினமும் மாலையில் அவனது காயங்கள் ஆறிவிடும். மறுநாள் காலையில் மீண்டும் அகியுல்லா கழகு கொத்தத் துவங்கும்.
இதை கண்ட ஹெர்குலிஸ்(HERCULES) மனித குலத்திற்கு பிரமீதீயஸ் செய்த நற்செயலுக்கு பிரதியாக
தனது வில் மற்றும் அம்பால் அகியுல்லாவைக் கொன்றான். அதன் பின் அகியுல்லாவிற்கு ஜீயஸ்
சொர்க்கத்தில் இடம் அளித்ததாக சொல்லப்படுகிறது.
இது தவிர வேறு கதைகளும் உண்டு.
(படம்: ஈராஸ் - காதல் தேவதை)
நமது
மன்மதன் போல கிரேக்க காதல் கடவுள் ஈராஸ்(EROS). ஈராஸின் பாணங்களுக்கு பாதுகாவலனாக அகியுல்லா
கழுகு இருந்தது. ஜீயஸ் கடவுளைத் தாக்கிய ஈராஸின் பாணங்கள் ஜீயஸை காதல் வயப்படச் செய்தது.
மற்றொரு
கதையில் லெடா மீது மையல் கொண்ட ஜீயஸ் அழகிய அன்னமாக உருவெடுத்தான். அவனை அக்கியுல்லா
கழுகுகாக வடிவெடுத்த அப்ரோடைட் தொடர்ந்து துரத்துவது
போல் நடித்தது. அன்னத்தின் மீது பரிதாபப்பட்டு கழுகிடமிருந்து காப்பாற்றி அடைக்கலம்
தந்த லெடா (LEDA) வை மயக்கி திருட்டுத்தனமாக ஜீயஸ் உறவு கொண்டான். பின்னால் தன் இச்சையை
நிறைவேற்றிக் கொள்ள உதவிய அன்னம், பருந்து இரண்டின் உருவங்களையும் விண்மீ்ன்களில் நிலைநிறுத்தி
அந்த செயலை நினைவு கூர வகை செய்தான் என்று சொல்லப்படுகிறது.
இந்த
வின்மீன் கூட்டத்தின் பொலிவான விண்மீன் ஆல்டெர்(ALTAIR), அரபி மொழியிலிருந்து பெறப்பட்டது.
இதன் பொருள் பறக்கும் பருந்து. டாலமி இந்த விண்மீனை இலத்தீன் மொழியில் கழுகு அல்லது
பருந்து என்று பொருள்படும் ஏட்டஸ் (AETUS) என்றழைத்தார். இதே போல பாபிலோனியர்களும்,
சுமேரியர்களும் இதனை பருந்து விண்மீன் என்றே அழைத்தனர்.
முதலில் வருவது ஆல்டெர் என்றஆல்பா
அகியுல்லி (ALTAIR - α AQUILAE)
ஆல்டெர், இது
+ 0.77 தோற்றப் பொலிவு எண்மதிப்பு கொண்டது. மேலும் இது ஒரு A வகைபிரதான வரிசை விண்மீன்.
இதற்கு மூன்று கட்புலனாகும் கூட்டாளிகள் உண்டு. புவிக்கு மிக அருகில், அதாவது வெறும்
16.8 ஒளி ஆண்டுகள் தொலைவிலேயே அமைந்துள்ளதால் வெறும் கண்களால் இதனைக் காண இயலும். ஆல்டெர்
விண்மீன் சூரியனைக் காட்டிலும் 1.8 மடங்க்கு நிறை கொண்டது. இது மிக அதிகமான 286 கிமீ/வி
என்ற வேகத்தில் சுழலுகிறது. இதன் காரணமாக இது கோளவடிவத்தைப் பெறாமல், துருவங்களில்
தட்டையாக உள்ளது. சுமார் 5000 ஆண்டுகளில் வானில் 1O கோணம் நகர்கிறது.
ஆல்டெர் விண்மீன்,
லைரா(LYRA) விண்மீன் கூட்டத்தில் உள்ள வேகா(VEGA) என்ற ஆல்பா லைரே(LYRAE) மற்றும் கைனஸ்(GYGNUS)
விண்மீன் கூட்டத்தில் உள்ள டெனப்(DENEB) என்ற ஆல்பா கைனி(CYGNI) ஆகிய விண்மீன்களுடன்
கோடை முக்கோணம் (Summer Triangle) என்ற வானவியல் தோற்றத்தை வடக்கு அரைக்கோள வானில்,
நடு அட்சங்களில் (45o) தலைக்கு மேல் ஏற்படுத்தும். இதில் அல்டெர் தெற்காகக்
காணப்படும்.
அடுத்து வருவது
அல்ஷயின் என்ற பீட்டா அகியுல்லி (ALSHAIN - β AQUILAE)
அல்ஷயின்
அக்கியுல்லாவில் காணப்படும் 7வது பொலிவான விண்மீன். 44.7 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த
இந்த விண்மீன் ஒரு G வகை துணை அரக்க விண்மீனாகும்.
இதன் தோற்றப் பொலிவெண் + 3.71. சூரியனை விட ஆறு மடங்கு பொலிவானது. இதற்கு கட்புலனாகக்
கூடிய பீட்டா அக்யுல்லி B என்ற 13 வில் வினாடிகள்
தள்ளி அமைந்துள்ள ஒரு கூட்டாளி விண்மீன் உள்ளது. அல்ஷயின் என்றால் அரபு மொழியில் வல்லூறு(Falcon)
என்று பொருள்படும்.
இறுதியாக
தாராசெட்(TARAZED) என்ற காமா அக்யுல்லி(γ - AQUILAE)
தாராசெட்,
அக்யுல்லாவில் காணப்படும் இரண்டாவதுபொலிவான விண்மீனாகும். இதன் பெயர் பெர்சிய மொழியில்
சாகின் தராசு (sahin tarazu) என்ற சொற்றொடரிலிருந்து மூலம் கொண்டுள்ளது. இதன் பொருள்
தராசுக்கோல் என்பதாகும். இது ஒரு K3 வகை விண்மீன்.
இதன் தோப்பப் பொலிவெண்+ 2.72. சுமார் 461 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. தாராசெட்,
சூரியனக் காட்டிலும் 2960 மடங்கு அதிகப் பொலிவானது. மேலும் இதன் ஆரம் சூரியனின் ஆரத்தைப்போல்
110 மடங்கு ஆகும். அதாவது சூரியனுக்கும் , புவிக்கும் இடையில் உள்ள தொலைவில் பாதி (1AU) இதன்
ஆரம் என்றால் அதன் பிரம்மாண்டத்தை உணரமுடியும். இது ஒரு X -கதிர் வெளியிடும் விண்மீன்.
இது சுமார் 100 மில்லியன் வயதுடையது. இதன் மையப்பகுதியில் ஹீலியம் எரிக்கப்பட்டு கார்பனாக
மாறும் வினை நடை பெற்று வருகிறது.
Comments
Post a Comment