பிறந்த மண் வாசம் - (8) திரு. கல்லிடைகுறிச்சி வெங்கட்ராமன் வெங்கடாச்சலம்.
வெங்கடாச்சலம் கல்லிடைக்குறிச்சி வெங்கட்ராமன் 1960 ஆம் ஆண்டு ஜூலை
மாதம் 3 நாள் நெல்லை மாவட்டம் களக்காட்டில் பிறந்தவர். இவரது தந்தை
திரு . கல்லிடைக்குறிச்சி வெங்கட்ராமன். தாயார் திருமதி.வசந்தலட்சுமி அவர்கள். இவர்
ஒரு அமெரிக்க உயிர் வேதியியலாளர் (Bio Chemist), அறிவியலாளர்
மற்றும் ஆராய்ச்சியாளர். கிரேட் லேக்ஸ் சூழலியல் 2000 ஆராய்ச்சி செய்தவர். ( Research Grantee, Great Lakes Ecology 2000) . ஹூஸ்டன் இந்திய கலாச்சாரக் கழகத்தின் செயலர் , துணைத் தலைவர், தலைவர்
பொறுப்புகளில் செயல்பட்டவர்.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளநிலைப்பட்டம் பெற்றபின்
வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைகழகத்தில் முதுநிலைப் பட்டம். பின்னர் 1990 இல் டெக்ஸாஸ் விவசாயம்
மற்றும் இயந்திரவியல் பல்கலைக்கழகத்தில் (Texas Agriculture and mechanical university) முனைவர் பட்டமும் பெற்றவர். 1990 முதல் 1993 வரையில் ஹூஸ்டன்,பேலோர்
மருத்துவக் கல்லூரியில் (Baylor college of medicine) சக ஆராய்ச்சியாளர் (Post doctoral fellow) ஆகப் பணியாற்றினார். 1993 முதல் 1999 வரையில் பெதெஸ்தா, மெரிலாண்ட்டின்
தேசிய ஆரோக்கிய கழகத்தில் (Scientist -
National institute of Healath) ஆராய்ச்சி அறிஞர்.
1996 - 1999 இல் FAES( Foundation for
Advanced Education in the Sciences) உயிர் வேதியல் பிரிவில் ஆசிரிய உறுப்பினர் பணி. 1999 முதல் நோவா தெங்கிழக்கு
மாநில பல்கலைகழகத்தில்(Nova SoutheasternUniversity,
Fort Lauderdale, Florida) உயிர் வேதியல் பிரிவில் பேராசிரியர் பணி.
மேலும் இவர் அமெரிக்க அறிவியல் முன்னேறக் கழகம்(American Association for the Advancement of
Science), உயிர்வேதியியல் மற்றும்
மூலக்கூறு உயிரியல் சங்கம்(American
Society Biochemistry and Molecular Biology) மற்றும் அமெரிக்க வேதியல் சங்கம்(American Chemical Society - chair South Florida chapter 2006) ஆகிய அமைப்புகளின் உறுப்பினராகத் திகழ்கிறார். இவரது மனைவி திருமதி. உஷா சங்கர நாராயணன் ஆவார்.
நாற்பது ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கும் மேல் வெளியிட்டுள்ளார். முக்கியமாக
புற்று நோய்( Cancer) மருந்து குறித்த ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பை அறிவுசார் கண்டுபிடிப்பாக[United
States Patent and Trademark Office (USPTO)] வில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.
கர்நாடக இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். யூ டியூப்(U Tube) இல் பல பாடல்களை
பதிவு செய்து வலையேற்றியுள்ளார். அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பினும் தனது சொந்த
ஊரை மறக்காமல் தன் பெயருடன் இணத்து இன்று வரை பதிவிட்டு வரும் அறிவியலாளருக்கு என்
ஊர் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
இக்கட்டுரையில் தரப்பட்ட த்கவல்கள் அனைத்தும் இணையதளத்தில் பல தளங்களில் இருந்து திரட்டப்பட்டவை. அவற்றில் பிழைகள் இருப்பின் என் கவனத்திற்குக் கொண்டு வர பணிவுடன் வேண்டுப்படுகிறது.
Comments
Post a Comment