பிறந்த மண் வாசம் - (6) திரு. கோமதி சங்கர தீட்சிதர்
தாமிரபரணித்
தாயின் மரியாதைக்கு உரிய பல பிள்ளைகளில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் திரு. கோமதிசங்கர
தீட்சிதர். தன் வாழ்நாள் முழுவதும் உண்மையான காந்தியன் ஆக வாழ்ந்து மறைந்தவர். 1957
இல் பிறந்த எனக்கு காந்தி, நேரு இவர்களை நேரில் காண வாய்ப்பு கிட்டவில்லை. அந்தக் குறையை திரு. காமராசர், திரு. தீட்சிதர் போன்ற பண்பட்ட தலைவர்கள் தீர்த்து வைத்தனர்.
திரு.
தீட்சிதரின் சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சிதான் என்றாலும் அவர் அருகில் உள்ள சேரன்மகாதேவியில்
தான் வசித்து வந்தார்.
விடுதலைப் போராட்டத்தில் இளம் வயதிலேயே ஈடுபட்டு, காந்தியடிகளின்
போதனைகளில் மனம் ஒன்றியதால் எளிய வாழ்வு என்பது அவருக்குஉரித்தானது. வெள்ளைக் காதி
கதர் வேட்டியும், சட்டையும் அவரது உடை. அதிலும் பெரும்பாலான நேரம் மேல்சட்டை கூட அணிவது
கிடையாது. வெறும் கதர் துண்டுதான். போக வேண்டிய இடம் பக்கமாக இருந்தால் கால்நடையாகவேதான்
செல்வார். அதிகத் தொலைவிற்கு பொது மக்கள் பயன்பாட்டில் இருக்கும் பேருந்து அல்லது மூன்றாம்
வகுப்பு புகைவண்டியில் மட்டுமே மக்களோடு மக்களாகப் பயணிப்பார்.
திரு. காமராசர் தலைமையில்
1957 தேர்தலிலும், 1962 மற்றும் 1967 ஆகிய மூன்று பொதுத் தேர்தல்களில் திரு. பக்தவச்சலம்
அவர்கள் தலைமையிலும் அம்பாசமுத்திரம் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்
சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால்
1967 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையாக வெற்றி
பெற்ற போதும் அம்பாசமுத்திரம் தொகுதி மக்கள் திரு. தீட்சிதரையே அவரது நேர்மைக்கும்,
எளிமைக்கும், அரசியல் தூய்மைக்கும் பரிசாக தேர்ந்தெடுத்தனர்.
சிறு
வயதில் அவரது சகோதரியுடன் விளையாடும் போது ஏற்பட்ட சிறு விபத்தில் ஒரு கண் பார்வையை
இழந்தவர். சட்ட மன்றம் இல்லாத நாட்களில் அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தின் அருகே
ஊள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இராட்டையில் நூல் நூற்றபடி அவர் இருப்பதை பல
முறை நான் சிறுவனாக இருந்த போது கண்டிருக்கிறேன்.
திரு.
தீட்சிதர் வாழ்நாள் முழுவதும் எளிய தவ வாழ்க்கையே வாழ்ந்து வந்தவர். தனது குழந்தைகள்
உட்பட எந்த உறவினருக்கும் எந்த சலுகையையும் அரசாங்கத்தில் பெற்றதில்லை. அவர்களும் தங்கள்
பாட்டனாரை போலவே தங்கள் முயற்சியில் எளிய வாழ்வையே இன்றும் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அவரது
மகன்களில் ஒருவரான திரு மகாதேவன் சேரன்மகாதேவியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதியில்
காப்பாளராகப் பணியாற்றினார். அந்த விடுதியை திரு. தீட்சிதர் தன் சொந்த செலவில் நடத்தி வந்தார். விடுதி தற்போது ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தால் பரத்வாஜ
ஆசிரமம் என்ற பெயரில் இயங்குகிறது.
திரு
தீட்சிதர் அவர்களைப் பற்றி திரு பீட்டர் அல்போன்ஸ் இவ்வாறு கூறுகிறார்.
“அம்பாசமுத்திரத்தில் கோமதி சங்கர தீட்சிதர் என்றொரு எம் எம் ஏ
இருந்தார். அவருக்குப் பின்னால் சங்குமுத்துத்தேவர் இருந்தார். கடையநல்லூரில் எஸ்.எம்.ஏ.
மஜீத் இருந்தார். இவர்கள் பொதுவாழ்வுக்காக பெரும் பணத்தை இழந்தவர்கள். தீட்சிதர் கடுமையான
வறுமையில் இருந்தார். அவரை ஒருவர் தன் மகனுக்கு மருத்துவப் படிப்புக்கு இடம் வேண்டி
ஒரு சிபாரிசுக்காக அணுகினார். அவரிடம் ரயில் ஏறி சென்னைக்குச் செல்ல காசு கிடையாது.
அவருக்கு 200 ரூபாய் கொடுத்தார்கள். தீட்சிதர் ரயிலேறி சென்னை வந்து, அந்த பையனுக்கு
மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்தார். பின்னர் ஊருக்குத்திரும்பி வந்து,
அந்த ஆளைக் கூப்பிட்டு, இந்தாப்பா.. செலவானதுபோக மீதிப்பணம் என்று 85 ரூபாயைத் திருப்பித்
தந்தார்.
மஜீத் சாயபு, தன் வீட்டில் அறுவடை செய்யப்பட்டு வந்த நெல்லை விற்று, தன்னைத்
தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளராக நின்ற ஒருவருக்குச் செலவு செய்ய அளித்தார். ஏ.ஆர்.சுப்பையா
முதலியார் எம் எல் ஏவாக இருந்தபோது, இரண்டாம் வகுப்பில்தான் பயணம் செய்வார். ஒரு நாளும்
தனக்கென்று எந்த கோரிக்கையும் வைத்ததில்லை. இவர்களைப் பார்க்கையில் ஒரு மரியாதை
இருந்தது. ஒருவேளை இப்படிப்பட்ட மனிதர்கள் எம்.எல்.ஏக்களாக இருந்ததால் மிக அருமையான
தொண்டர்கள் இருந்தார்களா, அல்லது நல்ல தொண்டர்கள் இருந்ததால் இதுபோன்ற அருமையான மனிதர்கள்
எம்.எல்.ஏக்கள் ஆனார்களா என்று எனக்குத் தோன்றுவது உண்டு”. என்று அந்திமழை இணைய
இதழில் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார்.
திரு. சங்குமுத்துத்தேவர் அவர்களுக்கு தீட்சிதருடனான உறவு ஒரு குருவுக்கும்
சீடனுக்குமுள்ள அற்புதமான உறவாகும். தீட்சிதரின் எண்பதாவது பிறந்தநாளை அவரது எளிமையின்
காரணமாக கொண்டாடவில்லை. மேலும் அன்று சட்ட மன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. அதனால் தீட்சிதர் சட்ட மன்ற ந்டவடிகைகளில் பங்கு பெற வந்திருந்தார். இதனை அறிந்த அப்போதைய முதல்வரான திரு. கலைஞர். மு. கருணாநிதி
அவர்கள் சட்ட மன்றத்திலேயே அவரது சதாபிஷேகத்தை நடத்தியது வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும்.
ஆங்கிலத்தில் “VOX POPULI VOX DEI” என்பார்கள். அதாவது மக்கள் குரலே மகேசன்
குரல் என்பது இதன் பொருள். திரு. தீட்சிதரிடம் அடுக்கு மொழி மேடைப் பேச்சோ, அழகிய
தோற்றமோ அல்லது பெரும் செல்வமோ கிடையாது. இருப்பினும் அவரை மக்கள் விரும்பி தேர்ந்தெடுத்தது
அவரது வாழ்வின் அடிநாதமான எளிமைகும் , நேர்மைக்குமே. மக்களிடமிருந்து பெறப்பட்ட எந்த
ஒரு மனுவையும் எந்த பலனும் எதிர்பாராமல், தன் முழு சக்தியையும், கவனத்தையும் செலுத்தி
அதற்காக பாடுபடுவார். தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பல பாலங்களையும், தாம்போதிகளையும்
கட்டி பல கிராமங்களை பக்கத்து நகரங்களுடன் இணைத்த பெருமைக்குரியவர்.
A
few samples of the adjournment motions brought by Shri. Dikshitar in the
assembly:
a)
To discuss about the Land Grab Movement in Tamil Nadu and the consequences
thereon. (25 Aug 1970)
b)
The inconvenience caused to the students from 6th to 11th Standards due to the
non-availability of text-books and also due to defects and mistakes in the
text-books and the need to take immediate steps to make available to all
students properly printed text-books in time. (29 Aug 1970)
c)
The closure Hindu National College at Sirugalathur following the Madras
University's announcement that the approval given to the College for running
the Pre - University Course had lapsed. (29 Aug 1970)
d)
The inconvenience caused to the travelling public due to the inadequacy of
State Transport buses in the City of Madras and the need to introduce more
buses especially during peak hours and relieve the hardship caused to the
public. (2 Sep 1970)
e)
To discuss about the situation created by students strike and the lathi charge
by the police at Madras on 27 Jan 1969. (28 Jan 1969)
A
few samples of the statements made by the concerned ministers for questions
raised by Shri Dikshitar, under Rule 41 of the Assembly:
a)
Statement by Tirumathi Satyavanimuthu -- The grave water shortage likely to
arise in the City of Madras this year. (26 Feb 1969)
b)
Statement by S. Madhavan -- The non-payment of salaries to the teachers working
in Panchayat Union Schools of Udankudi, Radhapuram, Sankarankoil and
Ambasamudram in Tirunelveli District. (1 Mar 1969)
c)
Statement by S. Madhavan -- The plight of Sanskrit teachers in the State
consequent on the adoption of the two language formula.(5 Mar 1969)
d)
Statement by A. Govindaswamy -- The delay in the distribution of new ration
cards and the consequences thereof. (11 Mar 1969)
Ref:
http://www.assembly.tn.gov.in/archive/Resumes/04assly/04_04.pdf
http://www.assembly.tn.gov.in/archive/Resumes/04assly/04_08.pdf
மக்கள்
மனதில் திரு . கோமதி சங்கர தீட்சிதர் இன்றும் வாழ்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக கடந்த
இருபத்தியாறு ஆண்டுகளாக 1984 ஆம் ஆண்டு முதல் கல்லிடைக்குறிச்சியில் கோமதி சங்கர தீட்சிதர்
நினைவு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தை “சரணாலயா” என்ற அமைப்பையும் எந்தவித லாப நோக்கும் இன்றி சேவையாக நடத்திவரும் ஆசிரியர் புலவர். திரு. முருகேசன் அவர்கள் பணியை தலை சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம். திரு முருகேசன் அவர்களைப் பற்றியும் அவரது தன்னலமற்ற பொதுச் சேவை குறித்த மேல் தகவல்களை கீழ்கண்ட இணைய தளத்திலிருந்து
பெறலாம்.
http://www.charanalaya.com/
இவர் எனது பாட்டனார், எனது பாட்டனார் மகாதேவன் அவர்களுடைய தந்தை. இவரின் வாரிசு என்பதில் நான் என்றும் பெருமை கொள்கிறேன்
ReplyDelete🙏🙏🙏💐🇮🇳 இணையற்ற தேச பக்தருக்கு வணக்கங்கள் 🇮🇳💐🙏🙏🙏
Delete🌼🌻💐 பெருமைக்குரிய வாரிசுகளுக்கு வாழ்த்துக்கள் 🌼🌻💐