வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (3)
அண்டத்தின் அளவு கோல் விண்மீன்கள் பொலிவாகவும்,பொலிவு குன்றி மங்கலாகவும் தோன்றுகின்றனவே அதற்குக் காரணம் என்ன? இவ்வினாவிற்கு ஒரே பதில் தூரம் என்பதே.புவியிலிருந்து காணும் விண்மீன்களின் பொலிவு அவை புவியிலிருந்து அமையும் தொலைவைச் சார்ந்து அமைகிறது.இப் பொலிவு தோற்றப் பொலிவு ( Apparent Brightness ) என்று அழைக்கப் படுகிறது.ஆனால் அதன் மெய்யான பொலிவு ( Absolute Brightness ) என்பது வேறாகும். எடுத்துக்காட்டாக சற்று அதிகத் தொலைவிலிருந்து பெறப்படும் அதிகப் பொலிவுள்ள ஒளியை விட, மிக அருகிலிருந்து பெறப்படும் பன் மடங்கு பொலிவு குறைந்த ஒளி, பொலிவு மிக்கதாகத் தோன்றுவதைக் குறிப்பிடலாம். எதிர் விகித இருமடி விதிப்படி, ஒளிச் செறிவு (I), தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவில் அமையும். இதனைக் கீழ்க்காணும் படத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். எனவே அதிகப் பொலிவான விண்மீன்,புவியிலிருந்து மிகத் தொலைவில் இருப்பின் பொலிவு குன்றியும்,குறைந்த பொலிவு கொண்ட விண்மீன் புவிக்கு அருகிலிருப்பதால் மிகப் பொலிவாகவும் தோன்றும் என்பதே சரியாகும். எனவே நாம் காணும் ஏதேனும் இரு ...