விருச்சிக விண்மீன் கூட்டம் அனுஷம், கேட்டை மற்றும் மூலம் விண்மீன் குழு ( பகுதி -3 )

மூலம் விண்மீன் குழுவில் அடங்கியுள்ள பத்து விண்மீன்கள்

 ε, ζ, η, θ, ι, κ, λ, μ, υ  and ν ஸ்கார்பியனிஸ் ஆகும்.






(1) எப்சிலன் ஸ்கார்பி [Epsilon (ε) Scorpii]


63.7 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன எப்சிலன் ஸ்கார்பி விண்மீன் +2.310 தோற்றப் பொலிவெண் கொண்ட
 K1 III வகை விண்மீன். இது சூரியனைப் போல  சுமார் 13 மடங்கு ஆரம் கொண்டது. பொலிவுமாறும் விண்மீன் வகையைச் சேர்ந்த இதன் பொலிவு 0.01 முதல் 0.02 வரை மாறக் கூடியது.

(2) ஜீட்டா ஸ்கார்பி [Zeta (ζ) Scorpii]
ஜீட்டா ஸ்கார்பி என்ற பெயரை ஒன்றுகொன்று 7 வில்வினாடி தள்ளி அமைந்த இரு விண்மீன்கள் பகிர்ந்து கொள்கின்றன. உண்மையில் இந்த இரு விண்மீன்களும் புவியிலிருந்து வெவ்வேறான தொலைவுகளில் அமைந்த தொடர்பற்ற தனித்தனி விண்மீன்கள். ஆனால் வெறும் கண்ணால் பார்க்கும் போது வானில் மிக அருகே அமைந்த இரட்டை விண்மீன்கள் போலப் பார்வைக் கோட்டில் (Asterism) புலனாகிறது. 


ஜீட்டா -1 ஸ்கார்பி சுமாராக 2600 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த +4.705 தோற்றப் பொலிவெண் கொண்ட B1.5lae வகை விண்மீன்.இதன் தோற்றப் பொலிவு  4.66 முதல் 4.86 வரை  மாறக் கூடியது. நாம் அறிந்த  மிகப் பொலிவான விண்மீன்களில்  இதுவும் ஒன்று. சூரியனை விட மில்லியன் மடங்கு பொலிவானது. NGC 6231 என்ற திறந்த விண்மீன் கொத்தில் (Open Cluster) அமைந்துள்ளது.
ஜீட்டா - 2 ஸ்கார்பி சுமார் 515 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த K4 III வகையான ஒரு ஆரஞ்ச் அரக்க விண்மீன். இதன் தோற்றப் பொலிவு எண் + 3.59 முதல் 3.65 வரையில் மாறுபடக் கூடியது..
(3) ஈட்டா ஸ்கார்பி [Eta (η) Scorpii ]
ஈட்டா ஸ்கார்பி 73.5 ஓளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த அரக்க நிலைக்கு மாற்றம் பெறும் நிலையில் உள்ள  வெளிர் மஞ்சள் சிற்றரக்க(Sub giant) விண்மீன். இது 1.1 மில்லியன் வயதானது. சூரியனை விட 1.75 மடங்கு நிறையுள்ளது மற்றும் 18 மடங்கு பொலிவானது. இது F5 IV வகையிலான தோற்றபொலிவு எண் +3.33 கொண்ட விண்மீன். ஈட்டா ஸ்கார்பி மிக வேகமாகச் சுழலும் விண்மீன் இதன் சுழற்சி வேகம் 150 கிமீ வினாடிக்கு என்று அமைகிறது. இது எக்ஸ் கதிர்களை வெளியிடுகிறது. மேலும் இதன் நிறமாலையில் அதிக அளவு பேரியம்(Barium) இருப்பது தெரியவருகிறது.
(4) சர்காஸ் (Sargas) என்ற  தீட்டா ஸ்கார்பி [Theta(θ) Scorpii]
300 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன தீட்டா ஸ்கார்பி விண்மீன் +1.87 தோற்றப் பொலிவெண் கொண்ட
 F0 II வகை விண்மீன். இது சூரியனைப் போல 5.7 மடங்கு நிறையும், 1834 மடங்கு பொலிவு மற்றும்  சுமார் 26 மடங்கு ஆரமும் கொண்டது. இதற்கு ஒரு கூட்டாளி விண்மீன் உள்ளது. அதன் தோற்றப் பொலிவு எண் +5.36. கூட்டாளி விண்மீன் 6.470 வில் வினாடிகள் முதன்மை விண்மீனிலிருந்து தள்ளி அமைந்துள்ளது. சர்காஸ் என்ற பெயர் சுமேரியர்களால் சூட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பெயருக்கான பொருள் அறியப்படவில்லை.

(5) அயொடா ஸ்கார்பி [Iota(ι) Scorpii]
அயொடா ஸ்கார்பி என்ற பெயரை இரு விண்மீன்கள் பகிர்ந்து கொள்கின்றன. பேரரக்க நிலைக்கு மாறும் தறுவாயில் உள்ள F2 la வகை விண்மீன். சூரியனை விட 12 மடங்கு நிறையும் 35070 மடங்கு பொலிவும் கொண்டது.37.5 வில்வினாடி தள்ளி அமைந்த கூட்டாளி விண்மீன் ஒன்றை உடையது. அப்போலியான்(Apollyon) என்ர பெயராலும் அழைக்கப்படுகிறது.
அயொடா - 2 ம் ஒரு பேரரக்க விண்மீன். இது A6 lb வகையான விண்மீனான இதன் தோற்றப் பொலிவு எண் +4.78. சுமார் 3700 ஒளி  ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இதற்கும் ஒரு கூட்டாளி விண்மின் 32.6 வில்வினாடி தள்ளி அமைந்துள்ளது.
(6) கிர்டாப்(Girtab) என்ற கப்பா ஸ்கார்பி [Kappa(κ) Scorpii]
கப்பா ஸ்கார்பி ஒரு நிறமாலையியல் இருமை விண்மீன். இந்த இரு விண்மீன்களை சாதாரணமாக தொலை நோக்கியால் பிரித்தறிய முடியாது. இவற்றின் சுற்றுக்காலம் 196 நாட்கள். விண்மீன் தொகுப்பு B1.5 III வகையைச் சேர்ந்தது. ஒரு அரக்க விண்மீன் உருவாகும் கடைசித்தருணங்களில் இருப்பதை இதனால் உணர முடிகிறது. 



அமைப்பின் முதன்மை உறுப்பு விண்மீன் ஒரு பீட்டா செஃபீ வகை பொலிவு மாறும் விண்மீன். விண்மீனின் பரப்பில் ஏற்படும் துடிப்பின் காரணமாக பொலிவு மாறுபடுகிறது.விண்மீனானது சூரியனை விட 17 மடங்கு நிறையும், 7 மடங்கு ஆரமும் கொண்டது. துணை உறுப்பு விண்மீனும் சூரியனைக் காட்டிலும் 12 மடங்கு நிறையும் 6 மடங்கு ஆரமும் கொண்டது. சுமேரியர்கள் தேள்(Scorpion) என்று பொருள்படும் கிர்டாப்(Girtab) என அழைத்தனர்.
(7) ஷவுலா(Shaula) என்ற  [Lambda ( λ) Scorpii]
ஷவுலா என்பதுதான் விருச்சிக விண்மீன்கள் கூட்டத்தில் மூலம் விண்மீன்கள் குழுவில் உள்ள இரண்டாவது பொலிவான விண்மீன்.இரவு வானில் காணப்படும் இருபத்தைந்தாவது பொலிவான் வின்மீனும் ஆகும். சூரியக் குடும்பத்திலிருந்து சுமார் 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.





லாம்டா ஸ்கார்பி ஒரு பல விண்மீன் அமைப்பு. கட்புலனாகக் கூடிய மூன்று உறுப்பினர்களைக் கொண்டது. அதாவது லாம்டா ஸ்கார்பி A,  லாம்டா ஸ்கார்பி B,  லாம்டா ஸ்கார்பி C என்ற மூன்று விண்மீன்கள். இதில் லாம்டா ஸ்கார்பி A ஒரு மூன்று விண்மீன் அமைப்பு. அவற்றில் இரண்டு B வகை விண்மீன்கள் மற்றும் பிறிதொன்று பிரதான வகை விண்மீனுக்கு முந்தைய நிலையில் (Pre Main Sequence) உள்ள விண்மீன். லாம்டா ஸ்கார்பி B மற்றும் Cஆகியன முறையே லாம்டா ஸ்கார்பி A லிருந்து 42 வில் வினாடி தள்ளியும், 95 வில் வினாடிகள் தள்ளியும் அமைந்துள்ளன. லாம்டா ஸ்கார்பி A ஒரு பீட்டா செஃபி வகை ( β -Cephei) பொலிவு மாறும் விண்மீன். இதன் வயது சுமார் 10லிருந்து 13 மில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. லாம்டா ஸ்கார்பி யின் பாரம்பரியப் பெயரான அல் ஷவுலா என்றால் உயர்த்திய வால் அதாவது கொடுக்கு என்று பொருள்படும்.
(8) ம்யூ ஸ்கார்பி என்ற Mu Scorpii -(μ - ஸ்கார்பி)
ம்யூ ஸ்கார்பி என்ற பெயர் இரு விண்மீன் அமைப்புகளால் (System) பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இவ் விரு விண்மீன் அமைப்புகளும்0.1o தள்ளி வானில் அமைந்துள்ளன.ம்யூ1 ஸ்கார்பி ஒரு இருமை விண்மீன் ஆகும். புவிலிருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள இந்த தொகுப்பின் ஒட்டு மொத்த தோற்றப்பொலிவு எண் +3.04. இது ஒரு பீட்டா லைரா (β - Lyrae) வகையான ஒன்றை ஒன்று மறைக்கும் விண்மீன்கள்.

Video Courtesy : https://en.wikipedia.org/wiki/Binary_star





 முதன்மை கூட்டாளி பிரதானவகை B1.5 V வகையானது. சூரியனை விட 8.5 மடங்கு கனமானதும், சூரியனின் ஆரத்தைப் போல் சுமார் 4.1 மடங்கு ஆரமும் கொண்டது. துணை விண்மீனும் ஒரு B6.5 V வகை விண்மீன். இதுவும் சூரியனைப் போல் 4.4 மடங்கு ஆரமும் 5.3 மடங்கு நிறையும் கொண்டது.   
ம்யூ 2 ஸ்கார்பி ஒரு துணை அரக்க விண்மீன். இது B2 IV  நிறமாலை வகையானது. சூரியக் க்டும்பத்திலிருந்து 517 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த இந்த விண்மீன்சூரியனைக் காட்டிலும் ஏழு மடங்கு ஆரத்துடன் +3.56 தோற்றப்பொலிவையும் கொண்டது.
(9) லீசத்(Lesath) என்ற  υ ஸ்கார்பி (Upsilon Scorpii)
அப்சிலன் ஸ்கார்பி ஒரு துணை அரக்க (SubGiant) விண்மீன். 2.70 தோற்றப் பொலிவெண் கொண்ட இந்த விண்மீன் புவியிலிருந்து சுமார் 580 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு B2 IV நிறமாலை வகை விண்மீன்.சூரியனுடன் ஒப்பிட 12,300 மடங்க்கு பொலிவு, 11 மடங்கு நிறை மற்றும் 6.1 மடங்கு ஆரமும் உடையது. இதன் பாரம்பரியப் பெயரான லீசத் என்பது அரபு மொழி வழிவந்தது. இது விஷப் பிராணியின் கொட்டுவாய் என்ற பொருள்படும். இது ஸ்கார்பியோவின் கொட்டுவாயில் அமைந்துள்ளது. பொலிவான லாம்டாஸ்கார்பி(λ - Scorpii) க்கு மிக அருகில் சோடியாக இருப்பது போல் காணப்படுவதால் இவற்றை பூனையின் கண்கள்(Cats eyes) என்று அழைப்பதும் உண்டு. 
(10) ந்யூ ஸ்கார்பி (ν Scorpii) என்ற ஜப்பா(Jabbah)
ந்யூ ஸ்கார்பி என்பது மற்றொரு பல விண்மீன்கள் அமைப்பு ஆகும். கிட்டத்தட்ட புவிலிருந்து 437 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. 41 வில்வினாடிகள் தள்ளி அமைந்த இரு விண்மீன் குழுக்களைக் கொண்டது. இதுல் பொலிவான குழு விண்மீன்கள் B2 வகை துணை அரக்க விண்மீன்கள். பொலிவு குறைந்தவையில் B0 வகையும் B8 வகையான பிரதான வரிசை விண்மீன்களைக் கொண்டது.







Comments

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)