பிறந்த மண் வாசம் (1) - திரு. ரா.பத்மநாபன்
பொதுவாகவே எந்த ஒரு மனிதனுக்கும் அவனது சொந்த ஊர் பற்றி ஒரு தேடலும், பெருமையும் அதன் மீது ஆழமான காதலும் இருக்கும். நானும் அதற்கு விதிவிலக்கில்லை. என்னுடைய மூதாதையர் பல தலைமுறைகளாக வாழ்ந்து மறைந்த என் சொந்த ஊரின் சிறப்புகளைத் தேடும் போது, இதுவரை அதிகம் அறியப்படாமல் குடத்துள் இட்ட விளக்காக இருந்து என் ஊருக்குப் பெருமை தேடித்தந்த பலரை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. என்னுடைய ஊர் தமிழ்நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிற்றூர்களில் ஒன்று. பிற மாவட்டங்களில் அதிகம் பிரபலமாகாத ஊர்களில் ஒன்று.இந்த கட்டுரை தொடர்களின் நோக்கம் என்னைப்போல உங்கள் ஊரிலும் சரித்திர, இலக்கிய, கலைவாணர்கள் பலர் அடையாளம் தெரியாமல் எளிய வாழ்வு வாழ்ந்திருக்கலாம். அவர்களை அனைவருக்கும் தெரியச் செய்ய நீங்களும் முயல வேண்டும் என்பதே. முகநூலில் என்னுடன் தொடர்பு கொண்ட என் ஊரைச் சேர்ந்த நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்த அறிஞர்கள் பற்றிய தகவல்கள் தந்தால் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களின் பெருமையை எடுத்தியம்புவதை கடமையாகச் செய்ய விரும்புகிறேன். நான் பிறந்த மண்ணுக்கு என்னால் ஆன சிறிய கௌரவமாகவும் பாக்கியமாகவும் இப்பணியைக் கருதுகிறேன். இந்...