விருச்சிக விண்மீன்(Scorpius Constellation) கூட்டம் - அனுஷம், கேட்டை மற்றும் மூலம். (பகுதி 1 அனுஷம்)

விருச்சிகம் விண்மீன் கூட்டம்(Scorpius Constellation) என்பது தென் அரை வான் கோளத்தில் அமையப்பெற்றது. தேள் வடிவத்தில் அமைந்துள்ளது என்பதால் விருச்சிகம் என்றழைக்கப்படுகிறது.  கிரேக்க புராணங்களில் இது  ஓரியனுடன் விண்மீன் கூட்டத்துடன் (Orion Constellation) தொடர்பு படுத்தப்படுகிறது.





முதல்முதலில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் தாலமி (Ptolemy) யால் வகைப்படுத்தப்பட்ட இந்த விண்மீன் கூட்டம் பன்னிரு ராசிகளில் ஒன்று. கிரேக்கர்களுக்கும் ஐய்யாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக சுமேரியர்கள் இதனை அறிந்திருந்தனர். 



வானில் மிக எளிதாக சுட்டக் கூடிய விண்மீன் கூட்டங்களில் இதுவும் ஒன்று. வடக்கு வான் அரை கோளத்தில் தெற்குத் தொடுவானின் அருகில் அமைந்திருக்கும். தென் அரைக் கோளத்தில் கிட்டத்தட்ட நடுவில் , நம் பால்வழிக்கூட்டத்தின் மையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. 


 விண்மீன் கூட்டத்தின் வலது உயர் கோணம் ( Right  Ascension) 17 மணி, நடுவரைக் கோணம்(Declination) - (மைனஸ்) 400 .
+ 40o முதல் (மைனஸ்) - 90o வரையிலான அட்சங்களில் கட்புலனாகும். ஜூலை மாதம் இரவு 9.00 மணிக்கு தெளிவாகக் காணலாம். முன்னர் கூறியது போல கிரேக்கர்கள் துலா ராசியை விருச்சிகத்தின் கூரான நகங்கள் என்று கொண்டிருந்தனர்.




இதில் அனுஷம் , கேட்டை மற்றும் மூலம் விண்மீன் குழுக்கள் அடங்கியுள்ளன.

விருச்சிகத்தில் பல பொலிவான விண்மீன்கள் காணக்கிடக்கின்றன.



 α-Sco, β1-Sco,δ- Sco, θ-Sco, λ-Sco,ν-Sco,ξ-sco,π-Sco, σ-Sco, τ- Sco மற்றும் υ-sco இப்படிப் பல பொலிவான விண்மீன்கள்.


இவற்றில் β1-Sco,δ- Sco மற்றும் π-Sco அனுஷத்திலும், 


α-Sco, σ-Sco கேட்டையிலும் மற்றும் 




θ-Sco, λ-Sco,ν-Sco,ξ-sco,τ- Sco மூலத்திலும் அடங்குகின்றன.



கிரேக்க புராணங்களில் விருச்சிகமும் ஓரியனும் தொடர்புடயதாக சொல்லப்பட்டது.ஓரியன் பூமியில் உள்ள எல்லா விலங்குகளையும் வேட்டையாடி அழிப்பேன் என்று சபதமிட்டதாகவும் , மற்றொரு வேட்டைக்கார பெண் கடவுளான ஆர்திமிஸ்(Artemis) மற்றும் அவளது தாயாரான லெடொ(Leto) இருவரும் ஒரு தேளை ஓரியனுடன் போரிட்டுக் கொல்ல அனுப்பினர். போரில் ஓரியன் வென்றதும் ஜீயஸ் கடவுள் அதனை விண்மீன் ஆக சொர்கத்தில் இடமளித்தார். 



ஒரு கதையில் ஓரியன் ஆர்திமிஸை விட தானே பெரிய வேட்டைக்காரன் என்று சொல்லியதில் ஓரியன் மீது கோபமான ஆர்திமிஸின் இரட்டைச்சகோதரன் ஆன அப்பல்லோ(Apollo) ஓரியனை (Oroion) அழிக்க தேளை (Scorpion) அனுப்பினதாகவும், ஆனால் இரண்டையும் ஜீயஸ் கடவுள் வானில் விண்மீனாக மாற்றி வெவ்வேறான காலங்களில் தோன்றுமாறு செய்ததாகக் கூறப்படுகிறது..

உதாரணமாக சென்னையில் ஜூன் மாதம் 14ஆம் தேதி இரவில் 9.00 மணிக்கு தென் கிழக்கு வானில் தொடுவானத்திற்கு சற்று மேல் விருச்சிக ராசி கட்புலனாகிறது. அப்போது ஓரியன் புலனாவது இல்லை. மறுநாள் பகலில் 9.00 மணிக்கு,  ஓரியன் முன்தினம் இரவில் விருச்சிகம் இருந்த இடத்திற்கு கிட்டத்தட்ட அருகில்  இருக்கும் ஆனால் பகலானதால் கட்புலனாகாது. அதாவது இரண்டும் எதிர் எதிராக வான் கோளத்தில் இடம் பெற்றுள்ளது எனலாம். அதாவது சென்னக்கு நேர் எதிரில் இரவுப்பொழுதாக உள்ள இடத்தின் வானில் விருச்சிகம் இருக்கும்.






 இது பரப்பு அடிப்படையில் 33 வது பெரிய விண்மீன் கூட்டம்.இதன் பரப்பளவு 497 சதுர பாகைகள்.

இவ்விண்மீன் கூட்டத்தின் அருகில் காணப்படும் பிற விண்மீன் கூட்டங்கள் ஆரா(Ara), கொரொனா ஆஸ்டிரலிஸ் (Corona Australis), லிப்ரா(Libra), லூபஸ்(Lupus), நார்மா(Norma), ஓஃபியாகெஸ்(Ophiuchus), தனுசு(Sagittarius) ஆகியன. 


அனுஷம் என்ற அனுராதா விண்மீன் குழு:
முதலில் நாம் விருச்சிக விண்மீன்(Scorpius Constellation) கூட்டத்தில்அனுஷம் குழுவில் உள்ள பீட்டா ஸ்கார்பி (Beta Scorpii) விண்மீனை எடுத்துக் கொள்வோம். இந்த விண்மீண் ஒரு பல் விண்மீன்(Multiple Star System) அமைப்பாகும். சாதாரண தொலை நோக்கியால் பார்க்கும் போது இருமை விண்மீன் (Binary Star) ஆக காட்சியளிக்கிறது.
β 1, β 2  என்றழைக்கப்படும் இந்த இருமை விண்மீன்கள் 13.5 வில்வினாடிகள் தள்ளி அமைந்துள்ளது எனத்தெரிகிறது. இந்த இருமை விண்மீன்களில் β 1 விண்மீன் அதிகப் பொலிவுள்ள விண்மீன்னாகும்.  
β 1 மேலுமொரு இருமை விண்மீனாக( B மற்றும் A)  காணப்படுகிறது. A பிறிதொரு நிறமாலையியல் இருமை விண்மீன்கள் (Aa மற்றும் Ab)களைக் கொண்டு  91.42 மில்லி(10-3) வில்வினாடிதொலைவில் அமைந்து, 6.82 நாட்களில் ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. மற்றொரு கட்புலனாகும் உறுப்பு விண்மீன் β 2   இரு உள் உறுப்புகளைக் (C மற்றும் E) கொண்டது. அந்த இரு உள் உறுப்புகள் அவற்றிற்கிடையே 0.1328 வில்வினாடிகள் தள்ளி அமைந்து 39 ஆண்டு சுற்றுக் காலத்தை பெற்றுள்ளது. இதில் சற்று பொலிவு குறைந்து உள்ளுருப்பு (E) 10.7 நாட்கள் சுற்றுக் காலம் கொண்ட பிறிதொரு நிறமாலையியல் இருமை (Ea மற்றும் Eb) விண்மீன்களாகும். அமைப்பின் இரண்டு நிறை மிகுந்த விண்மீன்களும் B வகையானவை. ஒவ்வொன்றும் சூரியனைப்போல் 10 மடங்கு நிறை கொண்டவை. இவை இற்க்கும் போது இரண்டாம் வகை சூப்பர் நோவா (Type II Supernova) ஆக வெடித்துச் சிதறும். இதன் பாரம்பரியப் பெயரான அகிராப் (Acrab) என்பது அரபு மொழியில் தேள் எனப் பொருள்படும். அதன் மற்றோர் பெயரான கிராஃப்பியாஸ்(Graffias) என்பது கூர்நகங்கள்(Claws) என்று பொருள்படும். 
அனுஷம் விண்மீன் குழுவில் அடுத்து வருவது டெல்ட்டா ஸ்கார்பி
( δ Scorpii)

டெல்ட்டா ஸ்கார்பி ஒரு B0 IV  வகை விண்மீன். இது +2.307 தோற்றப் பொலிவு எண்ணுடன் நம்மிடமிருந்து 490 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. சூரியனைப் போல் 5 மடங்கு நிறையும் 14000 மடங்கு பொலிவும் கொண்டது. இதன் மற்றொரு கூட்டாளி சற்றே குறைந்து வெப்ப நிலை கொண்ட, 10 நாட்களில் சுற்றிவரும்  B வகை விண்மீன். டிஜுபா(Dschubba or Dzuba) என்றால் அரபியில் நெற்றி என்பது பொருளாகும்.

 மூன்றாவதாக வருவது பை ஸ்கார்பி(π Scorpii )
பை ஸ்கார்பி ஒரு மூன்று விண்மீன் அமைப்பு. இவ்வமைப்பின் ஒட்டு மொத்த தோற்றப்பொலிவு எண் +2.9. இது தோராயமாக 590 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் பொலிவான விண்மீன் ஒரு மறைக்கும்(Eclipsing) இரட்டையாகும். மிக அருகில் அமைந்த ஒன்றை ஒன்று மறைக்கும் பொலிவு மாறு விண்மீன் பீட்டா லைரெ (β Lyrae) வகையைச் சார்ந்தது.
Image Courtesy: https://fr.wikipedia.org/wiki/Isaac_Newton

இந்த இரண்டும் பிரதான வகை B வகை விண்மீன்கள்.இரண்டுமே மிக வேகமாகச் சுழலும் (Projected velocities 108 km/s and 87 km/s). இரண்டிற்கும் இடையில் தொலைவு சுமார் 15 மடங்கு சூரியனின் ஆரமாக உள்ளது. இவற்றின் மூன்றாவது கூட்டாளி விண்மீன் முதன்மை இருமை விண்மீன்களிடமிருந்து சற்று தொலைவாகவே உள்ளது. கிட்டத்தட்ட 7000 வானியல் தொலைவு(Astronomical distance) தூரம் தள்ளியுள்ளது. தோற்றப் பொலிவு எண் +12.2 என்பதால் அதிகம் பொலிவில்லாதது.முதன்மை விண்மீன் 21900 மடங்கு சூரியனை விடப் பொலிவாகவும் 12லிருந்து 13 மடங்கு நிறையுடையதாகவும் உள்ளது. 

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)