சுவாதி விண்மீன் - ஆல்பா பூட்டெஸ் (α - Bootes) என்ற அக்குரஸ் (Arcturus)
நமது விண்மீன்கள் வரிசையில்
அடுத்து வருவது சுவாதி
சுவாதி விண்மீன்
வட அரைக் கோளத்தில் அமைந்த இரவு வானில் காணப்படும் நான்காவது பொலிவான விண்மீன் ஆல்பா
பூட்டெஸ் (α -
Bootes) என்ற அக்குரஸ் (Arcturus) ஆகும். இந்த பூட்டெஸ் விண்மீன் கூட்டம் 0o முதல் + 60o வரையில் Declination
ஐயும் 13 முதல் 16 மணிக் கால Right Ascension ஐயும் பெற்றுள்ளது.
வட அரைக்
கோளத்தில் வசந்த மற்றும் கோடை காலங்களில் அதாவது டிசம்பர் முதல் ஜூன் வரை நன்கு கட்புலனாகும்
விண்மீன் கூட்டம் கரடி வேட்டைக்காரன் எனப்படும் பூட்டெஸ் (Bootes)விண்மீன் கூட்டம்.
முதல் முதலில் இது பற்றிய பதிவு ஹோமரின் (Homer)
இன் ஒடிஸி (Odyssey) புத்தகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டுள்ளது.
அக்குரஸ் (Arcturus) என்ற சுவாதி விண்மீன் இக் கூட்டத்தில் மிகவும் பொலிவானது. (படம்)
கிரேக்க
புராணங்களில் பூட்டெஸ் யாரைக் குறிக்கிறது என்பது பற்றிய தெளிவான தகவல் இல்லை. ஒரு
பதிப்பில் டிமீட்டர் (Demeter) என்ற வேளாண் மற்றும் அறுவடைக் (Goddess of Agriculture and
Harvest) கடவுளின் மகங்களான ஃபிலோமெனஸ் (Philomenus) புளுட்டஸின் (Plutus) இரட்டை சகோதரர்களில்
ஒருவர் எனக் கூறப்படுகிறது.
பூட்டெஸ்,
ஒரு கையில் இரு நாய்களின் கழுத்துப் பட்டைதோல் வார்களையும் ஒரு அரிவாளையும், மறு கையில்
ஒரு தொரட்டி வேல்கம்பையும் வைத்துக் கொண்ட உழவனாக அல்லது மாட்டுப்பண்ணைக்காரன் போல பாரம்பரியமாக சித்தரிக்கப்படுகிறான்.
அவன்
தன் இரண்டு நாய்களும் பின் தொடர பெருங்கரடி என்ற உர்சா மேஜர் ( Ursa Major) விண்மீன்
கூட்டத்தில் உழவுமாடுகளை ஓட்டிக்கொண்டு வந்து அந்த உழவு கருவிகளை
(Big Dipper) துருவ அச்சில் கட்டி விட்டதால் தான் அவை தொடர்ந்து வானில் துருவத்தைச் (North Pole) சுற்றிச் சுற்றி வருகின்றன என்று கதையும் உண்டு. அதாவது பெருங்கலப்பை ஆண்டு முழுவதும் வானில் தெரியும். அது உதயமாகி மறைவது இல்லை. எல்லா பருவங்களிலும் துருவ விண்மீன் (Pole Star) ஐ சுற்றிச் சுற்றி வரும்.
பொதுவாக பூட்டெஸ் (Bootes), ஆர்கஸை(Arcas) குறிப்பிடுவதாக கொள்ளப்படுகிறது. ஜீயஸுக்கும் (Zeus), அர்காடியனின் (Arcadian) பகுதியின் மன்னனான லைகெயானின் (Lycaon) மகள் காலிஸ்டொ (Callisto)விற்கும் பிறந்தவன்.
ஆர்கஸ் அவனது பாட்டனாரான லைகெயானால் வளர்க்கப்பட்டான். ஜீயஸை சோதிக்க நினைத்த லைகெயான் ஜீயஸை விருந்துக்கு அழைத்து அவரது மகன் ஆர்கஸை கறி சமைத்து விருந்து படைத்திருந்தான். இதை அறிந்த ஜீயஸ் கொடூரமான லைகெயானை ஓநாயாக மாற சபித்தார். இடியை அனுப்பி அவனது எல்லா பிள்ளைகளையும் அழித்து ஆர்கஸை மீண்டும் உயிர்ப்பித்தார்.
கணவன் ஜீயஸின் துரோகத்தைக் கேள்விப்பட்ட jஜீயஸின் மனைவி ஹீரா (Hera), காலிஸ்டொவை ஒரு கரடியாக மாற்றி விட்டாள். காட்டில் பலகாலமாக அலைந்து திரிந்த காலிஸ்டொ ஒரு நாள் தன் மகன் ஆர்கஸை காட்டில் சந்தித்த போது ஆர்கஸ் கரடி உருவில் இருந்த தாயை அடையாளம் தெரியாமல் போனதால் வேட்டையாட துரத்த ஆரம்பித்தான்.
காலிஸ்டொ அவனிடமிருந்து தப்பி ஒரு கோவிலில் மறைந்து கொண்டாள். ஒரு புனிதமான இடத்தில் கடவுளுக்குப் பிடிக்காத உயிர்க் கொலை செய்தால் மரணதண்டனை கிடைக்கும் என்பதால் ஆர்கஸ் துணிய மாட்டான் என்று கருதினாள்.
அதற்குள் ஜீயஸ் கடவுள் இருவரையும் விண்மீன்களாக மாற்றி அமரத்துவம் அளித்தார். காலிஸ்டொவை பெருங்கரடி (Ursa Major) ஆகவும் ஆர்கஸை மாட்டுப்பண்ணைக்காரன் (Bootes) ஆகவும் மாற்றியதாகக் கூறப்படுகிறது.
பிறிதொரு புராணக்கதையில் கலப்பையைக் கண்டுபிடித்த பூட்டெஸை கௌரவப்படுத்து முகமாக சிரெஸ் (Ceres) என்ற பெண் தெய்வம் விண்மீனாக்கியது என்று சொல்லப்படுகிறது.
தமிழில் இவ் விண்மீன், விளக்கு, வீழ்க்கை, வெறுநுகம், மரக்கால், காற்றினாள், முத்து, பவள, சோதி, அனில், காற்று என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சுவாதி என்ற அக்குரஸ் விண்மீன் வட அரைக் கோளத்தில் இரவு வானில் காணப்படும் நான்காவது பொலிவான விண்மீன். இதனுடைய தோற்றப் பொலிவெண் -0.05. புவிலிருந்து 36.7 ஒளி ஆண்டுகள் தொலைவிலேயே அமைந்திருப்பதால் புவிக்கு அருகில் உள்ளது என்று சொல்லலாம். சுவாதி ஒரு K0 வகை ஆரஞ்சு அரக்க விண்மீன். சுவாதி விண்மீன் வானியல் நடுக்கோட்டிற்கு (Celestial equator) 19o வடக்கில் அமைந்திருப்பதால் இரு வானவியல் அரைக் கோளங்களிலுமே கட்புலனாகும். சூரியனின் நிறையைப்போல் 1.5 மடங்கு நிறையைப் பெற்றிருந்த போதிலும் இதன் ஆரம் சூரியனின் ஆரத்தைப் போல் 24.5 மடங்கு பெரியது. சூரியனை விட கிட்டத்தட்ட 170 மடங்கு பொலிவானது.இருப்பினும் சுவாதி சூரியனை விடவும் குறைந்து வெப்பநிலையில் உள்ளது. காரணம் அதிக வெப்ப ஆற்றலை வெளியிடுவதே. கிட்டத்தட்ட சூரியனைவிட 215 மடங்கு ஆற்றலை அதிக பட்சமாக வெளியிட்டு இருந்திருக்கிறது. மிகவும் வயதான வாழ்நாளின் இறுதிக் கட்டத்திலலுள்ள விண்மீன். இதன் வயது 6.5 பில்லியன்(Billion) ஆண்டுகள் முதல் 8.0 பில்லியன் ஆண்டுகள் ஆக இருக்கக் கூடும்.

சுவாதி விண்மீன் ஹைட்ரஜன் இணைந்து ஹீலியம் ஆக மாறும் நிலையை முற்றிலுமாகக்
கடந்து ஹீலியம் இணைந்து கார்பனும் ஆக்ஸிஜனும் மற்ற சில கனத்த தனிமங்களின் அணுக்கரு
வினைகள் நடக்கும் நிலைக்கு நகர்ந்து விட்டது.
சுவாதி என்ற அக்குரஸ் விண்மீனை வானில் கண்டறிய முதலில் பெருங்கரடி(Ursa
Major constellation) கூட்டத்தில் உள்ள பெரிய கரண்டி(Big Dipper) விண்மீன்களை அடையாளம்
காண வேண்டும். பின்னர் கரண்டியின் கைப்பிடியான முன்று விண்மீன்களின் வளைவில் தொடர்ந்து கீழ் நோக்கி
வர சுவாதியை அடைய முடியும்.
(படங்கள்: நன்றி Earthsky.org)
புனைவுகளில் அக்குரஸ்
அக்குரஸ் விண்மீனை
எந்த ஒரு கோளும் சுற்றிவருவதாக இந்நாள் வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் அக்குரஸ்
குறித்த புனைவுகளுக்கு பஞ்சமில்லை. 1920 இல் டேவிட் லிண்ட்சே (David Lindsay) எழுதிய
“அக்குரஸை நோக்கி ஒரு பயணம்”(A Voyage to Arcturus) என்ற புத்தகத்தில் கதாநாயகன், டோர்மான்ஸ்(Tormance)
என்ற அக்குரஸை சுற்றிவரும் கோளுக்கு பயணம் மேற் கொள்வதாக புனையப்பட்டது. அதேபோல அக்குரஸ்
என்ற பெயரில் ஒன்று விண்மீனோ அல்லது கோளோ பல அறிவியல் புனைவுக்கதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஐசக் அசிமோவின்
(Isaac Asimov) அடிப்படை வரிசையில், “Doctor who”,
“star Trek” மற்றும் “Aliens” போன்ற திரைப்படங்களும்
அடங்கும்.
Comments
Post a Comment