அடிப்படை வானியல் பகுதி (3)

அடிப்படை வானவியல் பகுதி (3)
சென்ற பகுதியில் நாம் வான் கோளம் (Celestial Sphere) பற்றி அறிந்தோம். இந்தப் பகுதியில் மேலும் சில தகவல்களைக் காண்போம். 

முதலில் புவியின் மீது உள்ள நமக்கு காட்சிப்படுதலின் அடிப்படை உண்மைகள் பற்றிக் காணலாம். புவியிலிருந்து நோக்கும் போது சூரியன் கிழக்கில் உதித்து மேற்காக பயணித்து புவியைச் சுற்றி வருவதாகத் தெரிகிறதல்லவா. 

ஆனால் உண்மையில் புவிதான் சூரியனை தன் அச்சில் 23.5o சாய்ந்த நிலையில் மேற்கிலிருந்து கிழக்காக நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த இயக்கம் காரணமாகவே பருவ காலங்களும், சம இரவு நாட்களும் ஏற்படுகின்றன என்பதை அறிவோம். கீழ்க் கண்ட இயக்கக் காட்சிகள் இதனை விளக்கும்.

(1) Animation courtesy:www.meteo.gr

(2) Animation courtesy : http://www.lcsd.gov.hk/





வானத்தில் நாம் காணும் சூரியன், சந்திரன் மற்றும் கோள்கள் இவைதான் இயங்குவது போலத் தெரிகிறது. ஆனால் விண்மீன்கள் சலனமற்று இருப்பது போல தெரிகிறதே என்றால் அதுவும் ஒரு தோற்றம் தான்.

உண்மையில் விண்மீன்களும் இயங்குகின்றன. ஆனால் மிகத்தொலைவில் அவை இருப்பதால் அவற்றின் சலனம் தெரியவில்லை. உதாரணமாக ஒரு பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் போது வெளியில் தொலைவில் உள்ள மலை அல்லது குன்று மெதுவாக காட்சியை விட்டு அகலும். ஆனால் அருகில் உள்ள கட்டிடங்கள், மரங்கள், விளக்குத்தூண்கள் இவை மிக வேகமாக இயங்குவதாகத் தோன்றுகிறது. அதே போலத்தான் புவிக்கு அருகிலுள்ள கட்புலனாகும் ஐந்து(புதன்,செவ்வாய், வெள்ளி, வியாழன் மற்றும் சனி) கோள்களின் இயக்கம் வேகமாகவும் கோளின் பின்னணியில்  உள்ள விண்மீன்கள் சலனமின்றி இருப்பது போலவும் தோன்றுகிறது.





Animation Courtesy: http://www.uni.edu

வான் கோளத்தில் விண்மீன்கள் இயங்குகின்றன என்பதை ஒரு சிறிய சோதனை மூலம் அறியலாம். உதாரணமாக Astroviewer.com என்ற தளத்தில் இன்று மாலை 3.20 மணிக்கு வானில் நம் சென்னையின்(lon. 80.27 & lat.13.09 ) ல் விண்மீன்கள் மற்றும் கோள்களின் நிலையைக் காணலாம். பின்னர் மீண்டும் 7.42க்கு அவற்றின் நிலையை காணும் போது விண்மீன்களும், கோள்களும் சந்திரனும்கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்திருப்பதைக் காண முடியும்.  



இன்று இரவு 8.15 க்கு தலைக்கு மேல் ஒரு குறிப்பிட்ட விண்மீன் சித்திரை(Spica) இருந்தது. நாளை சரியாக இரவு 8.15 மணிக்கு வானில் பார்த்தால் இன்று தலைக்கு நேர் மேலாக காணப்பட்ட விண்மீன் சித்திரை  சற்று மேற்காக நகர்ந்து இருக்கும். 4 நிமிடங்கள் முன்பாகவே 8.11 மணிக்கே தலைக்கு மேல் வந்திருக்கும். இதை அவ்வளவு எளிதாக உணர இயலாது. ஆனால்  தினம் தினம் 4 நிமிடங்கள் நகரும் என்பதால் இதை 1 மாத இடைவெளியில் நன்கு உணர இயலும். காரணம்  ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் வீதம் 120 நிமிடங்கள். அதாவது ஜுலை 10 ஆம் நாள் மாலை 6.15 மணிக்கே தலைக்கு மேல் சித்திரை வந்துவிடும்.இதுவே மே மாதம் 9 ஆம் தேதி இரவு 10.15 மணிக்குத்தான் தலைக்கு நேராக வந்திருக்கும். இப்படியே 180 நாட்கள் அதாவதுஆறு மாதம் கழிந்தபின் காலை 8.15 க்கு நம் தலைக்கு மேலாக வரும். அப்போது பகல் பொழுது என்பதால் கட்புலனாகது. இப்படி மீண்டும் ஒரு ஆண்டிற்குப் பின் 2017ல் ஜூன் 10 ஆம் நாள் தலைக்கு மேல் சித்திரை விண்மீனைக் காண முடியும்.  




ஒரு விண்மீன் கூட்டம் தினம் கிழக்கில்அடிவானில் (Horizon) தோன்றி படிப்படியாக உச்சியை அடைந்து(Zenith) அடைந்து மேற்கில் மறையும் சலனம் ஒன்று. மற்றது அதே விண்மீன் கூட்டம் தினம் 1டிகிரி மேற்காக நகர்ந்து முற்றிலுமாக சிறிது காலம் மறைந்து பின்னர் மீண்டும் தோன்றுவது பிறிதொரு வகை இயக்கம்.   ஒரு விண்மீனின் கூட்டத்தின் தினப்படி சலனத்தை கீழ்க்கண்ட படத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.








Image Courtesy: www.astronomy.ohio-state.edu


தினப்படி இயக்கம் வான் நடுக்கோடிற்கு (Celestial Equator) க்கு இணையாக இருக்கும். பார்வையாளரின் அட்சக் கோட்டைப் பொருத்து வான் பொருட்களின் தோற்ற இயக்கப்பாதையின் சாய்வு அமையும். பார்வையாளரின் அட்சத்தை ஒட்டிய எல்லா விண்மீன்களும் கட்புலனாகும். ஆனால் கட்புலனாகும் காலம் மாறுபடும். 

நில நடுக்கோட்டில்(0o)நிற்கும் பார்வையாளருக்கு துருவ விண்மீன் தொடுவானில் அமையும். வான் பொருட்களும், விண்மீன்கள் செங்குத்தாக கிழக்கில் உதயமாகி தலைக்கு மேல் உச்சத்தை அடைந்து செங்குத்தாக மேற்கில் மறையும்.

இதுவே வட துருவத்தில்(90o N)இருக்கும் பார்வையாளருக்கு தலைக்கு மேல் துருவ விண்மீன்(Polaris) அமையும். வட அரைக் கோளத்தில் எல்லா வான் பொருள்களும் மறையாமல் துருவ விண்மீனைச் சுற்றிவருவதாகத் தோன்றும்.

45o N பாகை(Degree) அட்சத்தில் இருக்கும் பார்வையாளருக்கு 45o N அட்சத்தை விடக் குறைந்த அட்சமுள்ள சில வான் பொருட்கள் வானில் 12 மணி நேரத்திற்குக் குறைவாகவும், 
45o   N அட்சத்தைவிட அதிகமான அட்சமுடைய விண்மீன்கள் 12 மணி நேரத்திற்கு அதிகமாகவும்

சரியாக 45o N அட்சத்தில் அமைந்த வான் பொருள்கள் 12 மணி நேரமும், மிக அதிகமான அட்சத்தில் அந்த அரை கோளத்தில் வான் பொருள் மறைவது இல்லை. 0o N க்கும் குறைவான அட்சத்தில் அமைந்த வான் வான் பொருள்கள் வட அரைக்கோளத்தில் உதயமாவது இல்லை. 

வடக்கு நோக்கி நிற்கும் ஒரு ஆய்வாளருக்கு வான் பொருளின்  தோற்ற இயக்கம்

Animation courtesy : http://www.lcsd.gov.hk/




ஆய்வாளர் இரவு வானில் வான் பொருள்களின் தினப்படி தோற்றச் சலனத்தை பதிவு செய்ய விரும்பி பதிவு செய்தால் அதில் கீழ்க்கண்டவாறே இருக்கும். காரணம் எல்லா வான் பொருள்களும் சுற்றும் போது வரிவரியாக வட்டங்கள் தோன்றும்.

http://stlouis.cbslocal.com/











Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)