விருச்சிக விண்மீன்(Scorpius Constellation) கூட்டம் - அனுஷம், கேட்டை மற்றும் மூலம். (பகுதி 2 கேட்டை)
கேட்டை விண்மீன் குழு இதில் அடங்கியுள்ள விண்மீன்கள் ஆல்பா, சிக்மா, டவ் ஸ்கார்பி (α, σ and τ - Scorpii) ஆகியன. அண்டரெஸ் (Antares) என்ற α - ஸ்கார்பி விருச்சிகத்தில் உள்ள விண்மீன்களிலேயே மிகப் பொலிவானதும், இரவு வானின் பொலிவான விண்மீன் வரிசையில் 15 வதும் ஆக அமைந்துள்ளது. அண்டரெஸ் என்றால் தேளின் இருதயம்( Heart of the scorpion) என்று பொருள்படும். செவ்வாயின் எதிரி (Anti Ares) அல்லது செவ்வாயைப்போல் என்று பொருளில் மற்றொரு பெயர் காரணமாகக் கூறப்படுகிறது. இது செவ்வாயைப் போல் செந்நிறமாக இருப்பதால் மெசபடோமிய வானியலாளர்கள் அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம் என்றும் கருதப் படுகிறது. மற்றொரு கருத்து இசுலாத்திற்கு முன்பான (pre - Islamic) தங்க முல்லாக்யாத் (Golden Mu’ alla qat) ஏழு நீண்ட கவிதைகளில் போற்றப்படும் போர் வீரன் அண்டார் அல்லது அண்டரா - இபன் - ஷதாத்( Antar or Antarah - ibn- shaddad) நினைவைப் போற்றும் வகையில் சூட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. α - ஸ்கார்பி(Antares) , மகம்(Regulus), ஃபோமல்ஹெட்(α - Piscium) மற்றும் ரோகிணி(Aldebaran) இவை நான்கும் பாரசீகத்தின் அரச விண்ம...