பூசம் - காமா,டெல்டா மற்றும் தீட்டா கேன் க்ரை ( γ , δ and θ Cancri)

பூசம் விண்மீன்

கடக (Cancer Constellation) ராசியில் உள்ள விண்மீன் கூட்டம் பூசம் ( γ , δ and θ Cancri)

 காமா,டெல்டா மற்றும் தீட்டா கேன் க்ரை என்ற மூன்று விண்மீன் கூறுகளைக் கொண்டது.கடகம் (Cancer) என்ற பெயர் இலத்தீன் மொழிலிருந்து பெறப்பட்டதாகும். கேன்சர்(Cancer) என்றால் (Crab) நண்டு என்பது பொருள். கடகராசியின் விண்மீன்களின் அமைப்பு நண்டைப் போல இருப்பதே காரணமாகும்.

தமிழில் இவ் விண்மீன் கொடிறு, வண்டு, காற்குளம், வியாழன் நாள் (புஷ்ய, திஷ்ய என்ற பெயர்கள் உண்டு), அண்டம், குருவின் நாள் என்ற பெயர்களைக் கொண்டுள்ளது.

அடுத்து படம்(1) ப் பாருங்கள்.


இந்த படத்தை எப்படிப் பார்க்க வேண்டுமென்றல் படத்தை தலைக்கு மேல் வடக்கு (N) என்று இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். அந்த நிலையில் கிழக்கும் மேற்கும் இடம் மாறி இருக்கும். இந்த நிலையில் கடகத்தின் எல்லைகளைக் குறிக்கலாம்.

தெற்கில் ஹைட்ரா(Hydra) எனப்படும் பாம்பு.
வடக்கில் லிங்க்ஸ்(Lynx) என்ற பூனை
மேற்கில் ஜெமினி(Gemini) என்ற மிதுனம்
கிழக்கில் லியோ(Leo) என்ற சிம்மம் என நமது கடகம் பெற்றுள்ளது.

நமக்கு ஒரு சந்தேகம் வரும். கேன் க்ரை ஆல்பா(α), பீட்டா(β)இவற்றுக்கு இல்லாத முக்கியத்துவம் காமா(γ),டெல்ட்டா(δ) மற்றும் தீட்டா(θ) களுக்கு ஏன் என்று. அதற்குக் காரணம் கேன் க்ரை காமா(γ),டெல்ட்டா(δ) மற்றும் தீட்டா(θ) என்ற பூசம் வீண்மீன் 

தொகுப்புதான் நண்டின் தலைப்பகுதியாக உள்ளது.படம் (2) ஐப் பாருங்கள் புரியும். 

என்ன இருந்தாலும் தலை தானே முக்கியம்.

வட அரைக் கோளத்தில் கடக விண்மீன் கூட்டத்தை மாலை வானில் காண குளிர் காலத்தின் இறுதியில்  தொடங்கி ஆரம்ப வசந்த காலம் வரையினான காலமே  சிறந்த காலமாகும். தெற்கு வானில் மார்ச் மாதம் இரவு 10 மணியளவில் உச்சத்திலிருக்கும். மாலை வானில் ஏப்ரல் , மே மாதங்களில் நன்கு காணமுடியும்.

தென் அரைக் கோளத்தில் கடக விண்மீன் கூட்டத்தை மாலை வானில் காண கோடைகாலத்தின் இறுதியில்  தொடங்கி ஆரம்ப இலையுதிர் காலம் வரையினான காலமே  சிறந்த காலமாகும். வடக்கு வானில் மார்ச் மாதம் இரவு 10 மணியளவில் உச்சத்திலிருக்கும். மாலை வானில் ஏப்ரல் , மே மாதங்களில் நன்கு காணமுடியும்.

நமது அடுத்த வேலை தனித்தனி விண்மீன்களின் பண்புகள் பற்றிப் பார்ப்போமா.

முதலில் காமா கேன் க்ரை(Gamma Cancri)


இது புவிலிருந்து சுமார் 181ஒளி ஆண்டுகள் தொலைவில் ஊள்ளது. இது ஒரு A1 வகை வெள்ளை நிற துணை அரக்க விண்மீன். இதன் தோற்றப் பொலிவு எண் + 4.67 . சூரியனைப் போல 35 மடங்கு பொலிவானது. இதற்கு இலத்தினில் வடதிசைக் கழுதை (Northern Donkey)  என்ற பொருள் படும் அசில்லஸ் பொரியலிஸ்(ASELLUS BOREALIS) என்ற மற்றொரு பெயரும் உண்டு. சந்திரனால் மறைக்கப்படும் வாய்ப்பு கொண்டது. இன்னும் 510 மில்லியன் வருடங்கள் உயிர் வாழும்

அடுத்து வருவது டெல்ட்டா கேன் க்ரை(Delta Cancri)


இதுவும் புவிலிருந்து சுமார் 180 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஊள்ளது. இது ஒரு K0 வகை ஆரஞ்சு நிற அரக்க விண்மீன். இதன் தோற்றப் பொலிவு எண் + 3.94 . சூரியனைப் போல 53 மடங்கு பொலிவானது. இதற்கு இலத்தினில் தென்திசைக் கழுதைக் குட்டி (Southern Donkey)  என்ற பொருள் படும் அசில்லஸ் ஆஸ்ட்ரலிஸ் (ASELLUS AUSTRALIS) என்ற மற்றொரு பெயரும் உண்டு. சந்திரனால் மறைக்கப்படும் வாய்ப்பு கொண்டது.

கடைசியில் வருவது தீட்டா கேன் க்ரை(Theta Cancri)


இதுவும் புவிலிருந்து சுமார் 494 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஊள்ளது. இது ஒரு K வகை ஆரஞ்சு நிற அரக்க விண்மீன். இதன் தோற்றப் பொலிவு எண் + 5.33 . சந்திரனால் மறைக்கப்படும் போது ஏற்படும் ஒளி வளைவு விளைவு, இது ஒரு நெருக்கமான இரட்டை விண்மீன் என்பதை உறுதி செய்கிறது. தனித்தனி விண்மீன்களின் பொலிவு தலா + 6.4ஆகும்.
இறுதியாக டெல்டா கேன் க்ரை (Delta Cancri) க்குத்தான் விண்மீன்களிலேயே மிக நீண்ட 
பண்டைய பாபிலோனிய மொழிப் பெயர் Arkushanangarushashutu உள்ளது. 

இராமாயணத்தில் பரதன் பிறந்த விண்மீன். உலகம் முழுவதும் வாழும் தமிழ் குல மக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரே முக்கியமான நாள் தை பூசம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)