ரிஷபராசி விண்மீன்கள் - கார்த்திகை மற்றும் ரோகிணி




இந்த ரிஷப ராசி கொஞ்சம் விசித்திரமானது. மூன்று உறுப்பினர்கள் கொண்ட இந்த குழுமத்தில். 1) கார்த்திகை 2) நண்டு நெபுல்லா 3) ரோகிணி என்று ஒரு விசித்திரமான உறுப்பினர்கள்.
கார்த்திகை - துள்ளும் இளமையோடு இருக்கும் விண்மீன்கள் கூட்டம், அதனால் தான் மேஷத்தின் அசுவினி கார்த்திகையை ரசிப்பது போல் இருக்கிறதோ என்னமோ. அடுத்தது ரோகிணி - தொண்டு கிழம், அதாவது சிவப்பு அரக்கன் நிலையில் வாழ்க்கை கிட்டத்தட்ட முடியும் தருவாயில்
ஹயடெஸ் - இவையும் வலுவற்ற பிணைப்பு கொண்ட (Open Cluster) இளமையான சில நூறு விண்மீன்கள்.


நண்டு நெபுல்லா -  இது வெடித்துச் சிதறிய விண்மீன் ஒன்றின் எச்சங்கள். மண்டையை போட்ட பின் புதுப் பிறவி எடுக்க காத்திருப்பவை.
இவற்றுக்குத் தமிழில் வழங்கிடும் பெயர்கள் :
கார்த்திகை :
அறுமீன், அழல், ஆரல், அளக்கர், எரி, அங்கி, ஆல், ஆறாமீன், அறுவாய், நாவிதன், அளகு, இறால், நாடன், வாணன், தழல்
ரோகிணி :
பண்டி, மாட்டு வண்டி, உருள், வையம், ஊறல், பிரமநாள், சதி, அயன் நாள், தேர், விமானம், சகடம்
கார்த்திகை எனப்படும் பிளையேட்ஸ் (Pleiades) 

ஏழு சகோதரிகள் (Messier45 அல்லது M45) ஒரு திறந்த விண்மீன் கொத்து ஆகும். ரிஷப ராசி (TARUS CONSTELLATION) யிலமைந்த இவை அனைத்தும் நடுத்தர வயதுடைய
 B - வகை விண்மீன்கள். இரவு வானில் வெறும் கண்ணுக்குக்கூட புலப்படக் கூடிய புவிக்கு அருகே அமைந்த விண்மீன் கொத்துக்களில் கார்த்திகையும் ஒன்றாகும். மிக அதிகமான ஒளிர்வு கொண்ட  வெப்பமான நீல நிற விண்மீன்களை மிக அதிகமாகக் கொண்டது. இந்த விண்மீன் கொத்து சமீப காலத்தியதாக, அதாவது சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு உள்ளாக உருவானது. வானியலாளர்கள் கூற்றுப்படி இவை இன்னும் 250 மில்லியன் ஆண்டுகள் வரை பிழைத்திருக்கும். அதன் பின்னர் அருகில் உள்ள பிற விண்மீன் கூட்டங்களால் ஈர்க்கப்பட்டு கலைந்து விடும். கிட்டத்தட்ட 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

ரோகிணி எனப்படும் அல்டிபரான் (Aldebaran) 
65 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ரோகிணி விண்மீன் ஒரு மாபெரும் சிவப்பு அரக்கன் விண்மீன். இது டாரஸ் கண்(TARUS EYE) அதாவது ரிஷபத்தின் கண் என்று குறிப்பிடப்படும் 14 வது பொலிவான விண்மீனாகும். எருதின் முகத்தை ஹயடெஸ்(Hyades) என அழைக்கப்படும் வி-வடிவ உறுதியாக பிணக்கப்படாத இளமையான சில நூறு விண்மீன்களின் தொகுப்பு (Open cluster) உருவாக்குகிறது.ஆரஞ்சு நிறமுடைய விண்மீன் ரோகிணி ,அதற்கு தென்மேற்கே அமைந்துள்ள வேட்டைக்காரன் ஓரியன்(Orion) விண்மீன் கூட்டத்தைப் நோக்கியபடி உள்ளது.

நண்டு நெபுல்லா (Crab nebula):

ரோகிணி விண்மீன் மற்றும் பிளீயட்ஸ் தவிரகண்ணுக்குத் தெரிகின்ற ஒளிரும் பொருட்கள் காளையின் வடமேற்கு பகுதியில் வெடித்துச் சிதறிய சூப்பர்நோவா மெஸ்ஸியர் 1, எச்சங்கள் ஆகும். காளையின் கீழ் கொம்பு முனைக்கு மேலே அமைந்துள்ளது. பொதுவாக இது நண்டு நெபுலா, என குறிப்பிடப்படுகிறது.



நெபுல்லா என்பது இலத்தீன் மொழியில் மேகம்.  வாயுக்களும் பிளாஸ்மா,ஹைட்ரஜன்,ஹீலியம்,தூசி அடங்கிய மேகம். இது புதிய விண்மீங்களின் நாற்றங்கால் என்று சொல்லலாம். நியூட்டனின் ஈர்ப்பு விசை காரணமாக ஒன்றிணைந்து புதிய விண்மீன்கள் உருவாகும். அதனால் தான் முன்னர் குறிப்பிடும் போது மறு பிறவி எடுக்கக் காத்திருக்கும் பொருட்கள் என்று குறிப்பிட்டேன்.  நண்டு நெபுல்லாவிற்கும் கடக ராசிக்கும் எந்த சம்பந்தமும் இலை.

காணக்கூடிய காலம்:
ரிஷப ராசியை வெறும் கண்ணால் வட மற்றும் தென் அரைக் கோளங்களில் (Northern and Southern hemispheres) காண இயலும்.வட அரைக் கோளத்தில் டோபர் முதல் நவம்பர் வரையில் சூரியன் மறைந்ததும் கீழ்வானில் தோன்றும். டிசம்பர் மற்றும் ஜனவரியில் தலைக்கு மேல் உச்சத்திலும்,மார்ச் மற்றும் ஏப்ரலில் மேற்கு தொடுவானின் அருகே இறங்கியும் காணப்படும்.ஆக ரிஷப ராசியினைக காணச் சிறந்த காலம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களே. தென் அரைக் கோளத்தில் டாரசை வசந்த காலம் மற்றும் கோடை காலம்   முழுவதும்காண இயலும். டாரஸ் தான் இரவு வானின் மிகப் பெரிய விண்மீன் கூட்டமாகும்.    கற்கால மனிதனின்  குகை ஓவியங்களில் டாரஸ் விண்மீன் கூட்டம் காணக்கிடைப்பதால் 10000 ஆண்டுகளுக்கு முன்னரே அவன் அறிந்திருந்தது உறுதியாகிறது. சிவப்பு அரக்கன் ரோகிணி சூரியனை விடவும் 500 மடங்கு பொலிவு கொண்டது. நண்டு நெபுலாவும் கார்த்திகை விண்மீன்களும் ரிஷப இராசியின் எல்லைக்குள்ளாவே அமைந்துள்ளது. அந்த காலத்தில் நம் தமிழ் நாட்டில் இளவட்டக் கல்லைத் தூக்கி இளமையையும் வலிமையையும் திருமணத்துக்கு முன் நிரூபித்துக் காட்டுவார்கள். அதே போல் தென் அமெரிக்க பழங்குடிகள் கார்த்திகையில் குறைந்தது 10 விண்மீன்களையாவது காட்டுபவனையே மணமுடிக்கத் தகுதி படைத்தவன் என்பார்களாம்.
        .
டாரிட்ஸ் விண் வீழ்கற்கள் :
டாரிட்ஸ் விண் வீழ் கற்கள் பொழிவு ஒரு வருடாந்திர நிகழ்வு. இது என்க்கீ (ENCKE) என்ற வால் மீனுடன் தொடர்பு பெற்றுள்ளது. இது சாதாரணமாக அக்டோபர் கடைசியிலும்  நவம்பர் தொடக்கத்திலும் நடைபெறுவதால்  ஹலொவீன் நெருப்புப் பந்துகள் (Halloween Fire Balls)  என்று அழைக்கப்படுகின்றன.
என்க்கீ வால் மீன் மற்றும் விண்வீழ் கற்களும்  சுமார் 20000 - 30000 ஆண்டுகளுக்கு முன்  ஏற்பட்ட  ஒரு பெரிய வால்மீனின் இயல்பான சிதைவின்  எச்சங்கள் என்று நம்பப்படுகிறது.. புவி மற்றும் இதர கோள்களின் ஈர்ப்பு காரணமாகவோ உட் சூரியக் குடும்பத்தில்  நுழைந்து விட்டவை என்று கருதப்படுகிறது. விண் வீழ் பொருட்கள் விண்வெளியில் அதிகம் பரவிக் கிடப்பதால்  புவி இவற்றைக் கடக்க அதிகக் காலம் பிடிக்கிறது.  டாரிட்ஸ் விண்வீழ் கற்களின் பொழிவுப் புள்ளி ரிஷப ராசியிலிருந்து விண்வெளியில் வருவதாகத் தோன்றுகிறது.




Comments

  1. What a mind blowing thoughts u r having. Hands up. U r so so great personality. May God bless you abundant in all walks of life

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)