திருவாதிரை (BETELGEUSE) - ஆல்பா ஓரியனிஸ் விண்மீன்

திருவாதிரை விண்மீன் புவியிலிருந்து 640 ஒளி ஆண்டுகள் தொலவில் அமைந்த இரவு வானில் தெரியக் கூடிய ஒன்பதாவது (9) பொலிவான விண்மீன் ஆகும்.
ஓரியன் கூட்டத்தில் இது ஆல்பா ஓரியனிஸ் (α orionis) என்றழைக்கப்படும் இரண்டாவது பொலிவு மிக்க விண்மீன். இது ஒரு பொலிவு மாறும் சிவப்பு நிற விண்மீன். இதன் தோற்றப் பொலிவு எண் - 6  மதிப்புள்ளது. இதன்தோற்றப் பொலிவு எண் பொலிவு 0.0 முதல் 1.3 வரை மாறுகிறது. குளிர்கால அறுகோணத்தை உருவாக்கும் பொலெக்ஸ் (Pollux), கேப்பெல்லா (Capella) ,அல்டிபெரன் (Aldebaran), ரீகல் (Rigel), சிரியஸ் (Sirius) மற்றும் புரோசியான் (Procyon) விண்மீன்களின் மையமாக திருவாதிரை (Betelgeuse) விளங்குகிறது. (படம்1)



விண்மீனின் பெயர் அரபு மொழியில் எத்-அல்-ஜூஸ் (Yed-al-Jauza) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் “ஓரியனின் கை” என்பதாகும்.
திருவாதிரையின் வேறு தமிழ் பெயர்கள் செங்கை,  சடை, (வடமொழியில் ஆருத்ரா), மூதிரை, ஆகியன. சிவபெருமான் அவதரித்த விண்மீன் என்ற பெருமையுடையது இந்த விண்மீன். திருவாதிரை விண்மீன் ஒரு பேரரக்க சிவப்பு விண்மீன். நிறமாலைவகையில் M1-2 வகையில் அடங்கும். ஒரு வேளை சூரியனுக்குப் பதில் நமது குடும்பத்தில் திருவாதிரை இருந்திருந்தால் அது புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் வரையிலான சுற்றுப்பாதை வரை அதன் பரப்பு உள்ளடக்கி இருந்திருக்கும். 8 முதல் 8.5  மில்லியன் ஆண்டுகள் வயதுடையது. இருப்பினும் இதன் அதிக நிறையால் விரைவில் வளர்ந்து  அழிவடைகின்றது.



பொதுவாகவே விண்மீன்களின் ஆயுளுக்கும் அவற்றின் நிறைக்கும் தொடர்புள்ளது. அதிக நிறையுள்ள, நிறை குறைந்த விண்மீன்களை விட விரைவில் இறந்து போகின்றன. திருவாதிரை விண்மீன் அதன் பிறப்பிடமான ஓரியன் OB1கூடுதலில் (ஓரியன் கச்சில் உள்ள விண்மீன்களும் அடங்கிய) இருந்து வெளித்தள்ளப்பட்டு வினாடிக்கு சுமார் 30 கிமீ வேகத்தில் விண்வெளியில் பயணிக்கிறது. இதனால் அதிர்ச்சி வில்(Bow Shock) கிட்டத்தட்ட 4 ஒளி ஆண்டுகள் அளவிற்கு உருவாக்கப் படுகிறது. விண்மீன் பரிணாம வளர்ச்சியின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் திருவாதிரை விண்மீன்  இரண்டாம் வகை சூப்பர் நோவா (Type II Super Nova) ஆக வெடித்துச் சிதற முன்னேறியபடி உள்ளது. திருவாதிரை விண்மீன் அதன் தனித்துவமான சிவப்பு- ஆரஞ்சு நிறத்தால் வெறும் கண்ணால் கூட எளிதில் அறியப் படுகிறது.

புவி வட அரைக் கோளத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் ஜனவரி மாதம் தொடங்கி கிழக்கு வானில் சூரியன் மறைவுக்குப்பின் , மெல்ல உயரத் தொடங்கும். செப்டம்பர் நடுவிலிருந்து மார்ச் நடுவரை (டிசம்பர் நடுவில் மிகச் சிறப்பு) திருவாதிரை விண்மீன் கட்புலனாகும் காலமாகும்.
திருவாதிரை கிட்டத்தட்ட 10 மடங்கு சூரிய நிறை (M☉  - Solar mass) கொண்டது.
M☉ = (1.98855±0.00025) ×1030 kg மதிப்புடையது.இந்துக்களின் நம்பிக்கையில் திருவாதிரை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த விண்மீன் என்று குறிப்பிடப் படுகிறது.

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)