மிருகசிரீஷம் - λ, ϕ1, ϕ2 ஒரியன் விண்மீன்கள்



 மிருகசிரீஷம்


மிருகசிரீஷம் இது நம் வரிசையில் ஐந்தாவது (5) விண்மீன்.மிருகசிரீஷம் விண்மீன்கள் மூன்று (3) அவை λ, ϕ1, ϕ2  ஒரியன் ஆகியன வாகும்.
 இந்த விண்மீன் தொகுப்பின் தமிழ் பெயர்கள் மான் தலை, மாழ்கு, மும்மீன், நரிப்புறம், பாலை வெய்யோன் என்பன.

தமிழ் ராசிகள் ரிஷபதிலும் (Tarus), மிதுனத்திலும் (Gemini) மிருகசிரீஷம் அமைவதாகக் கூறப்படுள்ளது. ஆனால் உண்மையில் இந்த விண்மீன் கூட்டம் வேடன் (Orion)ல் அமைந்துள்ளது.கிட்டத்தட்ட எங்க பக்கத்து சுடலை மாட சாமி மாதிரி தோற்றம் கொண்டது ஓரியன். 

  ஓரியன் λ, ஒரு அதிகம் பொலிவற்ற வெள்ளை மற்றும் ஊதா நிற இரட்டை விண்மீனாகும். ஒரியன் என்றால் வேடன். வேடனின் உடம்பில் பல பொலிவான விண்மீன்கள் இருந்தாலும், அவன் தலைப் பகுதியில்

 λ, ϕ1, ϕ2 என்ற இந்த மூன்று விண்மீன்கள் தான் இடம் பெற்றுள்ளன. (படம் 2) ஓரியன் λ “மெய்ஸ்சா”(MEISSA) என்றும் அழைக்கப்படுகிறது. அரபி மொழியில் “மெய்ஸ்சா” என்றால் வெள்ளைபுள்ளி எனப் பொருள்படும். இது உண்மையில் ஒரு இரட்டை விண்மீன். கூட்டாளி விண்மீன்
4.41 வில்வினாடி (Arcsecond) கோணபிரிகையில் உள்ளது. மங்கலான விண்மீன் B0.5 வகையைச் சேர்ந்தது.  இது மிக வெப்பமான இளமையான மிகப் பெரிய விண்மீன். மிக வெப்பமாக இருப்பதால் இது வெளியிடும் புற ஊதா கதிர்கள் (Ultra Violet Rays) விண்மீனுக்கு 100 ஒளி ஆண்டுகள்  சுற்றளவில் உள்ள ஹைட்ரஜன் முழுவதையும் அயனி ஆக்கும் அளவு ஆற்றல் உடையது. எனவே மிருகசிரீடம் மிகக் குறைந்து அளவு ஹைட்ரஜன் அணுக்களையே உடைய பெரிய வளையத்தைப் (The Meissa Ring) பெற்றுள்ளது (படம்3). மிருகசிரீடம் விண்மீன் சூப்பர் ஜெயண்ட் விண்மீன். புவியிலிருந்து 1000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதன் பொலிவு சூரியனைக்காட்டிலும் 4000 மடங்கு அதிகம். மேல் பரப்பு வெப்ப நிலை 60000 கெல்வின் அதாவது சூரியனின் மேல் பரப்பு வெப்ப நிலையைப் போல் 10 மடங்கு அதிகம். சூரியனைக் காட்டிலும் 25 மடங்க்கு பெரியது.

ஓரியன் விண்மீன் கூட்டத்தில் பல பொலிவான விண்மீன்கள் கிட்டத்தட்ட மிருகசிரீஷம் அமைந்துள்ளன தொலைவில் அமைந்துள்ளன். உதாரணமாக ஓரியனின் கச்சு (Orion belt) பகுதியில் உள்ள மூன்று விண்மீன்கள். வானியலாளர்கள் மிருகசிரீஷம் மற்றும் பிற விண்மீன்களும்  ஓரியன் கூட்டத்தில் இருக்கும் மூலக்கூறு மேகத்திலிருந்து உருவாகி இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். 

மெய்ஸ்சா வளையத்திற்கு (The Meissa Ring)  வெளியே உள்ள பிற விண்மீங்கள் ஓரியன் λ, அதாவது மிருகசிரீடம் உருவான பிறகு மிஞ்சிய எச்சத்தில்  தோன்றியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. மிருகசிரீஷ விண்மீனின் அடைத்து வைக்கப்பட்ட ஆற்றல்  தான் உருவாக காரணமான மூலக்கூறு மேகத்தை உடைத்து பரவச் செய்யப் போதுமானதாக இருந்துள்ளது. மெய்ச விற்கு தெற்கே மேலும் இரு விண்மீன்கள் (ϕ1, ϕ2  ஒரியன்) உள்ளன. மெய்ஸ்சா வுடன் இவையும் சேர்ந்து ஒரு சாய்ந்த  ஒழுங்கற்ற முக்கோணத்தை ஏற்படுத்துகிறது. ϕ1 ஒரியன் ஒரு B0* வகை விண்மீன் புவியிருந்து 985 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ϕ2  ஒரியன் G8* வகை விண்மீன் கொஞ்சம் நமக்கு அருகில் 116 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது தவிர மெய்ஸ்சா C என்ற F8 வகை நிறை குறைவான  பிரதான வரிசை பழுப்புக் குள்ளன் (BROWN DWARF) விண்மீனும் உள்ளது. 


வட அரைக் கோளத்தில் ஓரியன் விண்மீன் கூட்டத்தைக் காணச்சிறந்த மாதங்கள் நவம்பர்முதல் பிப்ரவரி வரையிலான காலம். அனைத்துப் படங்களும் இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டவை.


*விண்மீன்களின் வெப்பநிலை மற்றும் தன்மை அட்டவணை படம் காண்க.

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)