Posts

Showing posts from August, 2021

*UNIVERSAL PASS CUM CERTIFICATE*

நமது இந்திய அரசு கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸும் போட்டவர்களுக்கு ஒரு பாஸ் கம் சர்டிபிகேட் ஐ ஆன்-லைன் மூலமாகவே பெற ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த பாஸ் & சர்டிபிகேட் ஐ பெறுவதால் நீங்கள் அரசு போக்குவரத்து, பொது இடங்கள், பேருந்து - ரயில் - விமான நிலையம் மற்றும் மால் போன்ற அனைத்து இடங்களிலும் உங்களது புகைப்படத்துடன் கூடிய இந்த பாஸை வைத்து எந்த தடங்கலின்றியும் நுழையலாம் - பயணிக்கலாம். கீழே நான் தந்துள்ள லிங்க் ஐ க்ளிக் செய்து உங்களது பதிவு செய்த மொபைல் எண் ஐ தந்து OTP பெற்று Enter செய்தால் உங்களது பாஸ் & சர்டிபிகேட் அடுத்த 30 நிமிடங்களுக்குள் டவுன்லோடு ஆகும். Link ஐ க்ளிக் செய்வதற்கு முன்னர் உங்களது போனில் உங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை தயார்நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இல்லாதிருந்தால் ஷோக்கா ஒரு செல்ஃபி எடுத்தும் அனுப்பலாம். உங்களது சர்டிபிகேட் ஐ  வெளிநாடு செல்வதற்குக் கூட PASS ஆக பயன்படுத்தலாம். பொதுமக்களுக்கான தகவலை தமிழாக்கம் செய்து வெளியிடுபவர் : _கோவை ரவீந்திரன்_. கிளிக் செய்ய வேண்டிய லிங்க்👇 https://epassmsdma.mahait.org

அறுபதுக்கு மேல்...

  அறுபதுக்கு மேல் எங்களது கல்லூரி  நண்பர்களின் "வாட்ஸ்அப்" குழுவில் கீழ்க்கண்ட பதிவை ONGC நிறுவனத்தில் பண்யாற்றி ஓய்வு பெற்ற பால்ய நண்பர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிட்டிருந்தார். பதிவு ஆங்கிலத்தில் இருந்தது. "பேஸ்புக்" நண்பர்களில் திரு. தங்கவேல் ராஜேந்திரன் போல் சிலர் அத்தகைய பதிவுகளைத் தமிழாக்கம் செய்து பதிவிடச் சொல்லிக்  கேட்பதுண்டு. ஆகவே முடிந்தவரை பதிவின் பொருள் சிதையாமல் பதிவைத் தமிழில் தந்துள்ளேன். அறுபது வயதைக் கடந்த நண்பர் ஒருவரிடம் தற்போது உங்களிடம் என்ன மாதிரியான மாற்றங்களை உணர்கிறீர்கள் என்று வினவினேன். அதற்கு விடையளிக்கும் வகையில் கீழ்க்கண்ட வரிகளை எனக்கு அனுப்பியிருந்தார். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் (1) முதலில் என் பெற்றோர் மீதும் அப்புறம் பின்னாட்களில் என் உடன் பிறந்தோர், மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்கள் மீதும் அன்பு செலுத்தி வந்தேன். இப்போதுதான் என்மீது நான் அன்பு செலுத்தத் துவங்கியுள்ளேன். (2) அட்லஸைப் போல இந்த உலகத்தை நான்னொன்றும் எனது தோளில் தூக்கிச் சுமக்கவில்லை என்ற பேருண்மையை இப்போது உணர்ந்து விட்டேன். (3) காய்கறிகள், பழங்கள்...

தக்ளியும் நானும்

Image
 கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ஆவணி அவிட்டம் தொடர்பாக ஒரு பதிவு இட்டிருந்தார். அந்தப்பதிவு, என் பள்ளிக்கூட நாட்களின் இனிய நினைவுகளைக்  கிளறி விட்டது. கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா பள்ளியில் படித்த காலத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை கைவினை (Craft) வகுப்பு உண்டு. அங்கு கைவினை வகுப்பில் நெசவு கற்றுத்தரப் பட்டது. அந்த வகுப்பறையில் இரண்டு பெரிய தறிகளும் ஏழெட்டு  நாடா தயாரிக்கும் சிறு தறிகளும் உண்டு.  நெசவு ஆசிரியர் பக்கத்தூர் வெள்ளங்குளியிலிருந்து வருவார். வெள்ளங்குளி நிறைய சௌராஷ்டிர இன நெசவாளர்களைக் கொண்ட ஊர். அவர் சௌராஷ்டிர மொழியுடன் தமிழைக் கலந்து வா, போ என்பதை வால்னி, போல்னி என்று சொல்வது வேடிக்கையாக இருக்கும். நெசவு வகுப்பிற்குக் கண்டிப்பாக தக்ளியும் பஞ்சும் கொண்டு போக வேண்டும். தக்ளியும் பஞ்சும் பாரதி நியூஸ் மார்டில் (ரங்கசாமி கடை) கிடைக்கும்.  குச்சி மிட்டாய் மாதிரி அரையடி நீளத்தில் பஞ்சு நடுவிரல் கனத்திலிருக்கும். 1966 ஆண்டு திலகர் வித்யாலயாவில் ஐந்தாம் வகுப்பு சேர்ந்த போது இந்தத் தக்ளியும் பஞ்சும் அறிமுகமாயின. இப்போது1990களுக...
Image
மாயச் சதுரங்கள் (Magic squares) என்பவை1 முதல் n^2 வரையிலான வெவ்வேறு நேர்க்குறி எண்களின் சதுர அடுக்கு வரிசை. இந்த வரிசையின் தனித்தனியான நிரைக்கட்டங்கள்,  நிரல் கட்டங்கள் மற்றும் முக்கிய மூலைவிட்டக் கட்டங்களின் கூட்டுத்தொகைகள் சமமான மதிப்பைப் பெற்றிருக்கும்.  மாயச் சதுரத்தின் நிரைக்கட்டங்கள்,  நிரல் கட்டங்கள் மற்றும் முக்கிய மூலைவிட்டக் கட்டங்களின் கூட்டுத்தொகை மாய மாறிலி எனப்படும்.  மாய மாறிலியின் மதிப்பு (S) = n (n^2)/2 இங்கு n = 3 என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  ஆகவே n^2 = 9 கட்டங்களைக் கொண்ட  3X3 சதுரத்தைக் குறிக்கும். 3X3 மாயச் சதுரத்தில் R1, R2, R3 என்ற மூன்று நிரைகளும் (Rows)  C1, C2, C3 என்ற மூன்று நிரல்களும் (Columns) D1, D2 என்ற இரண்டு முக்கிய மூலைவிட்டங்களும் (Diagonals) இருக்கும்.  மாயச் சதுரங்களைப் பாதி மாயச் சதுரங்கள் ( Semi Magic squares), இயல்பு மாயச் சதுரங்கள் (Normal Magic squares), உடைந்த மூலைவிட்ட மாயச் சதுரங்கள் (Pan Diagonal Magic squares) மற்றும் மிகச் சரியான மாயச் சதுரங்கள் (Most perfect Magic squares) என்று நான்கு ...