1960 - 80 காலகட்டத்தில் எங்கள் ஊரான கல்லிடைக்குறிச்சி கடைத் தெருவில் "நித்திய கல்யாணி தகரக்கடை" , "நித்திய கல்யாணி பூக்கடை" என்று இரண்டு கடைகள் அடுத்தடுத்து இருந்தன. இரண்டு கடைகளையும் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஒருவர் நடத்தி வந்தார். கல்லிடைக்குறிச்சியில் அதிகமாக அனைவராலும் அறியப்பட்ட தையற் கலைஞர்கள் இருவர். ஒருவர் விடுதலைப் போராட்டத் தியாகி யக்ஞேஸ்வர சர்மாவின் புதல்வர் ராஜ் மாமா. முன்பு திரு. யக்ஞேஸ்வர சர்மாவின் பேராலேயே கடை வீதி சர்மாஜி ரோடு என்றழைக்கப்பட்டது. இப்போது அது மெயின் ரோடாகிப் போய் விட்டது. மற்றவர் திரு. நாகூர். உள்ளூர் கம்யூனிஸ்ட் தொண்டர். மிகப் பணிவானவர். அக்ரஹாரத்தில் பலரது வீடுகளுக்கு குடும்ப டெய்லர் இவர்கள் இருவரில் யாராவது ஒருவராகத்தான் இருப்பார்கள். எங்கள் குடும்பத்திற்கு ஆஸ்தான டெய்லர் திரு. நாகூர்தான். திரு.நாகூர் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தொண்டர். இப்போது சொல்ல வந்தது திரு. நாகூரைப் பற்றி இல்லை. நித்ய கல்யாணி தகரக்கடை பற்றியே. இந்தக் கடை நாகூரின் தையல் கடைக்கு எதிரில் இருக்கும். அப்போதெல்லாம் முகப் பௌடர் டப்பாக்கள் ந...
Posts
Showing posts from June, 2021
திரு. இரா. செழியன்
- Get link
- X
- Other Apps
இன்று திரு. இரா செழியன் அவர்களின் நினைவு நாள். மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர் . 1923 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் திருக்கண்ணபுரத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் இராஜகோபால். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1964 ஆண்டு இந்து பத்திரிகை வெளியிட்ட நாடாளுமன்றம் குறித்த கட்டுரையில் (Parliament Gallery) படிக்கும் காலத்தில் கணிதத்திலும் புள்ளியியலும் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார் என்று குறிப்பிடுகிறது. இவரது இயற் பெயர் ஸ்ரீனிவாசன். இது வட மொழிப் பெயர் என்பதால் இரா.செழியன் என்று தூய தமிழ்ப் பெயராக மாற்றிக் கொண்டார். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரான மறைந்த திரு. நெடுஞ்செழியன் அவர்களின் இளைய சகோதரர். 1952 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டுவரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர். 1962 முதல் 1967 வரை பெரம்பலூர் தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர். 1967 முதல் 1977 வரையில் கும்பகோணம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். 1978 முதல்1982 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என்று இரண்டு ...
வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த கோவிட் -19
- Get link
- X
- Other Apps
சுய தனிமை நாட்களின் அனுபவங்கள் இதை ஆங்கிலத்தில் யாரோ ஒருவர் எழுதியிருக்கிறார். அது எனக்கு வாட்ஸ்அப் நண்பரொருவர் மூலம் கிடைத்தது. அதைப் படித்து ரசித்த எனக்கு உடனே மொழி பெயர்த்துத் தமிழில் தர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்தப் பதிவிற்கு நீங்கள் தரும் பாராட்டுகள் அனைத்தும் ஆங்கில மூலத்தை எழுதிய பதிவருக்கே உரியது. 1) மார்ச் 11 அன்று என்னுடைய முகநூல் பக்கத்தில் எனக்கு மேற் கொள்ளப்பட்ட கோவிட் சோதனையின் முடிவு நேர்மறை (Positive) என்ற செய்தியைப் பதிவிட்டிருந்தேன். அதற்குமே அடடா உடனே என்னவொரு ஆதரவு பாருங்களேன். அடுத்த இருபது நிமிடங்களுக்குள் 60 பேர் விருப்பக்குறி👍 (LIKE) இட்டிருந்தார்கள். ☺ 2) அதற்குப்பின் விரைந்து குணமடைய நான் ஏதோ தயக்கம் காட்டுவது மாதிரியாக, "விரைவில் குணமடையுங்கள்" , என்று கருத்துப் பதிவுகள் வந்து குவிய ஆரம்பித்தன. 3) நண்பர்கள் பலரிடமிருந்தும் எனக்கு தகவலை மறுஉறுதி செய்து கொள்ளச் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதில் ஒன்றில் "உனக்கு கோவிட் நேர்மறை (Positive) என்று கேள்விப்பட்டேன். சீக்கிரமே எதிர்மறையான செய்தியைக் (Negative news) கேட்க ஆவ...