இதயம் திறந்த அனுபவங்கள் - பகுதி (4)
அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மீட்பு அறைக்கு (recovery room) மாற்றப்படுவார். ஒரு அறுவை சிகிச்சைக்கோ அல்லது செயல்முறைக்கோ மயக்க மருந்து (anesthesia) செலுத்தப்பட்டதால் நோயாளி உணர்வற்ற நிலையில் இருப்பார். உணர்விழந்த நிலையிலிருந்து விழித்தெழுவதற்காக, நோயாளி மயக்கநிலைக்குப் பின்னரான பராமரிப்பு பிரிவுக்கு (Post Anesthesia Care Unit - PACU ) மாற்றப்படுவார். சில மருத்துவமனைகளில் இப்பிரிவு இல்லாமலும் இருக்கலாம். கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற ஊழியர்களைக் கொண்ட இப்பகுதி பெரும்பாலும் மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சை அரங்கங்களுக்கு (operation theatres) அருகிலேயே அமைந்திருக்கும் . Picture courtesy: https://www.venturemedical.com/blog/choosing-patient-monitor/ இந்தக் கண்காணிப்புக் கருவியில் இதய மின் வரைவி (ECG) இதயத் துடிப்பு வீதம் (Heart rate), இரத்த அழுத்தம் (NIBP) , மற்றும் தெவிட்டிய ஆக்ஸிஜன் நிலை (SpO2) போன்றவை கண்காணிக்கப் படுகின்றன. சில மருத்துவமனைகளில், இது பல நோயாளிகள் பகிர்ந்து கொள்ளும் இடமாகவோ (Dormitory) அல்லது ஒரு தனி நபர் பயன்படுத்தும் அறையாகவோ (Sing...