Posts

Showing posts from November, 2019

மனிதனின் பாசுரம் (The hymn of man) - கலீல் ஜிப்ரான்

Image
மனிதனின் பாசுரம் நான் இருந்தேன், இருக்கிறேன் ஆகவே நான் காலத்தின் இறுதிவரை இருப்பதாலேயே முடிவில்லாமல் இருக்கிறேன். எல்லையற்ற பரந்த வெளிகளைப் பிளந்தும் கற்பனை உலகில் சஞ்சரித்தும் நான், தெய்வீகப் பேரொளியை நெருங்கிவிட்டேன் கன்பூசியஸின் போதனைகளைச் செவிமடுத்து, பிரம்ம ஞானத்தை உற்றுக் கவனித்து போதி மரத்தின் கீழ் புத்தனின் அருகில் அமர்ந்துள்ளேன் ஆனாலும் அறியாமையும் அவநம்பிக்கையும் என்னைச் சிறைப்பிடித்திருப்பதை இப்போது காணுங்கள். மோசசுக்கு கர்த்தர் காட்சி தந்தபோது சினாய் மீதிருந்தேன் நசரேயனின் அற்புதங்களை ஜோர்டானில் கண்டுள்ளேன் அரேபிய இறைத்தூதர் வார்த்தைகளை மதீனாவில் கேட்டேன் இப்போது சந்தேகத்தின் கைதியாக நானிருப்பதைக் காணுங்கள் பாபிலோனின் பலத்தையும் எகிப்தின் மகிமையையும் கிரேக்கத்தின் மகத்துவத்தையும் கண்டிருக்கிறேன். அவர்களது செயல்களின் சிறுமையும் வறுமையும் கண்டு என் கண்கள் நிலைக்குத்தி நிற்கப் போவதில்லை. எண்டோரின் சூனியக்காரியுடனும் அசீரியாவின் குருமார்களோடும் பாலஸ்தீனத்தின் தீர்க்கதரிசிகளோடும் அமர்ந்துள்ளேன் உண்மையை ஓதுவதை நா...

ஆன்மாவின் பாடல் (Song of the soul) - கலீல் ஜிப்ரான்

Image
என் உள்ளத்தின் விதைக்குள் உயிர்த்திருக்கும் கீதமாக சொற்களற்ற பாடலொன்று என் ஆன்மாவின் ஆழத்தில் உள்ளது வரைதோலின் மீதெழுத அது மையுடன் உருகிட மறுக்கிறது. என் உதடுகளின் மீதின்றி ஆனால் ஒளிபுகுமோர் மேலங்கிக்குள் என் நேசத்தை விழுங்கிப் பாய்கிறது அது. நான் எப்படி அதை நெட்டுயிர்ப்பேன்? அஞ்சுகிறேன், அது சங்கமித்து விடுமோ புவியின் விசும்போடென்று. யாருக்கென நானதைப் பாடுவேன்? கடூரமான செவிகளுக்கு அஞ்சி அது என் ஆன்மாவின் இல்லத்துள் வசிக்கிறது. என் அகக் கண்ணுக்குள் நோக்க அதன் நிழலின் நிழலைக் காண்கிறேன். என் விரல் நுனியைத் தீண்டிட நான் அதன் அதிர்வை உணர்கிறேன். மினுக்கும் உடுக்களை பிரதிபலிக்கும் நீர்நிலை ஒத்து என் கரங்களின் செயல்கள் அதன் இருப்பில் அக்கறை கொள்கின்றன. வாடிக் கொண்டிருக்கும் ரோஜாவின் ரகசியத்தை வெளிப்படுத்தி ஒளிரும் பனித்துளிகள் என என் கண்ணீர் அதை வெளிப்படுத்துகிறது. தியானத்தால் இயற்றப்பட்ட மௌனத்தால் வெளியிடப்பட்ட ஆரவாரத்தால் தவிர்க்கப்பட்ட உண்மையால் பொதியப்பட்ட கனவுகளால் மீளும் அன்பால் புரிந்து கொள்ளப்படும் விழிப்புணர்வால் மறைக்கப்படும் ஆன்மாவால் பாடப்படும் பாடலது. க...

கொழுப்பைக் குறைக்கும் TLC திட்ட உணவு

Image
கொழுப்பைக் குறைக்கும் TLC திட்ட உணவு எனும் Therapeutic Lifestyle Changes (TLC) diet பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?  டாக்டர் கிளாடியா தாம்ஸன் நமது கொழுப்பு எண்களை ஒட்டு மொத்தமாக நாம் உண்ணும் உணவு முடிவு செய்வதில்லை  என்பது இப்போது நாம் அனைவருமே அறிந்த தகவல்தான். சொல்லப்போனால் உண்மையில் உணவுக்கும் கொழுப்புக்கும் உள்ள தொடர்பே சற்றுச் சிக்கலானதுதான். இருப்பினும் நாம் உட்கொள்ளும் உணவு இதில் ஒரு முக்கியப் பங்கை வகிப்பதால், சில வகை உணவுகள் ஆரோக்கியமான வரம்புக்குள் நம் உடற்கொழுப்பின் அளவை வைத்திருக்க உதவ இயலும் . இந்த கட்டத்தில்தான் சிகிச்சை சார் வாழ்க்கை முறை மாற்றத்  திட்ட உணவு என்ற TLC Diet  நம் கட்டுரையின் உள் நுழைகிறது. பெயரின் நீளம் கருதி கட்டுரையின் இனிமேல் சுருக்கமாக TLC டயட் என்றோ அல்லது TLC திட்ட உணவு என்றோ குறிப்பிடப்படும்.   கட்டுரையில் இங்கு நாம் திட்ட உணவு அதாவது டயட் எப்படி வேலை செய்கிறது, நமது உணவில் எத்தகைய உணவுகளைச் சேர்க்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் ஒரு நாளிற்குரிய TLC திட்ட உணவின் மாதிரி உணவு வகைப் பட்டியலையும் பற்றியும் காண...