வாஸ்துப் பிரச்சனை
என் வீட்டருகில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. அதில் ஒரு வீட்டின் ஒரு அறையின் சன்னல் என் இல்லத்தின் மாடி அறைக்கு நேர் எதிரில் உள்ளது. என் வீட்டில் அந்த அறையின் சன்னலில் பத்தாண்டுகளுக்கு முன்பு சன்னல் குளிர் பதனி ( window AC) பொருத்தியிருந்தேன். அப்புறம் 2016 ல் அதை மாற்றி பிரிக்கப்பட்ட குளிர்பதனி (Split AC) பொருத்தினேன். இந்த பணியை ஒரு ஒப்பந்தக்காரர் என் வீட்டை புதிப்பிக்கும் போது ஒரு அவரது செலவில் செய்து தந்தார். அப்போது சன்னல் குளிர்பதனி எடுத்த பின்னர் அந்தத் திறப்பை மூடத் தேவையான இரும்புக் கிரில் மற்றும் கண்ணாடி ஆகியவற்றையும் மாற்றினார். வீட்டில் பெரும்பாலும் நானும் மனைவியும் மட்டுமே. அதனால் மாடியில் அதிகம் நாங்கள் புழங்குவதும் இல்லை. பொதுவாக விருந்தினர்கள் அல்லது என் மகன்/மகள் வீட்டுக்கு வரும் போது மட்டுமே பயன்படுகிறது அந்த மாடி அறை என்பதால் சன்னலைத் திறப்பதே அபூர்வம். சன்னலுக்கு அதிக வெளிச்சம் காரணமாகவும் புறாக்கள் தொந்தரவு காரணமாகவும் சன்னல் திரை எப்போதும் போட்டே இருக்கும். பணிகள் முடிந்த பின்னர் நானும் அது என்ன வகைக் கண்ணாடி என்று பார்க்கவில்லை....