மனிதனின் பாசுரம் (The hymn of man) - கலீல் ஜிப்ரான்
மனிதனின் பாசுரம் நான் இருந்தேன், இருக்கிறேன் ஆகவே நான் காலத்தின் இறுதிவரை இருப்பதாலேயே முடிவில்லாமல் இருக்கிறேன். எல்லையற்ற பரந்த வெளிகளைப் பிளந்தும் கற்பனை உலகில் சஞ்சரித்தும் நான், தெய்வீகப் பேரொளியை நெருங்கிவிட்டேன் கன்பூசியஸின் போதனைகளைச் செவிமடுத்து, பிரம்ம ஞானத்தை உற்றுக் கவனித்து போதி மரத்தின் கீழ் புத்தனின் அருகில் அமர்ந்துள்ளேன் ஆனாலும் அறியாமையும் அவநம்பிக்கையும் என்னைச் சிறைப்பிடித்திருப்பதை இப்போது காணுங்கள். மோசசுக்கு கர்த்தர் காட்சி தந்தபோது சினாய் மீதிருந்தேன் நசரேயனின் அற்புதங்களை ஜோர்டானில் கண்டுள்ளேன் அரேபிய இறைத்தூதர் வார்த்தைகளை மதீனாவில் கேட்டேன் இப்போது சந்தேகத்தின் கைதியாக நானிருப்பதைக் காணுங்கள் பாபிலோனின் பலத்தையும் எகிப்தின் மகிமையையும் கிரேக்கத்தின் மகத்துவத்தையும் கண்டிருக்கிறேன். அவர்களது செயல்களின் சிறுமையும் வறுமையும் கண்டு என் கண்கள் நிலைக்குத்தி நிற்கப் போவதில்லை. எண்டோரின் சூனியக்காரியுடனும் அசீரியாவின் குருமார்களோடும் பாலஸ்தீனத்தின் தீர்க்கதரிசிகளோடும் அமர்ந்துள்ளேன் உண்மையை ஓதுவதை நா...