கதிரவன் - பகுதி (7)
வானில் மாறும் வண்ணக் கோலங்களான “அரோரா போரியலீஸ்” அதாவது “வடக்கின் சிவப்பு விடியல்” என்று வியாழனின் சந்திரன்களைக் கண்டறிந்த கலிலீயோ கலிலீ யால் பெயர் சூட்டப்பட்டது. கதிரவத்துகள்கள் புவியின் வளி மண்டலத்தில் காணப்படும் வாயுக்களுடன் வினையாற்றுவதால் விண்ணொளிகள் ஏற்படுகின்றன. புவியின் காந்தப்புலம் ஒரு புனல் (Funnel) போல் செயல்பட்டு புவியின் வட மற்றும் தென் துருவங்களில் கதிரவத்துகள்கள் விழும்படி செய்கின்றன எனலாம். அவ்வாறு மின்னூட்டமுள்ள துகள்கள் புவி காந்தப்புலத்தில் விழும் போது அவற்றுடன் தொடர்பு கொள்ளும் வளிமண்டல வாயு மூலக்கூறுகளைப் பொருத்து சிவப்பு முதல் மஞ்சள், பச்சை முதல் நீலம் மற்றும் ஊதா நிற ஒளியை வெளியிடுகின்றன. வானில் மாறிமாறி பல நிற ஒளிகள் தோன்றுவது, வானின் குறுக்கே அரோரா தனது அங்கி காற்றில் பின்புறம் படபடக்க தேரில் வேகமாக செல்லும் போது பின்புலத்தில் ஒளித்திரையை அல்லது திரைச்சீலையை ஒரு நாடகத்தில் மாற்றுவதை ஒத்திருக்கிறது. நம் புவிக் கோளில் காணப்படும் உயிரினங்களின் வாழ்விற்கு ஆதாரமாக விளங்குவது கதிரவக் குடும்பத்தின் மையத்தில் உள்ள மஞ்சள் நிற கதிரவன் தான். கதிர...