கண்டதும் களித்ததும் - பகுதி 11 ( புனே பயணக் கட்டுரைகள்)
பல்லால்லேஷ்வர் என்றால் பல்லாலின் கடவுள் (Ballal's Lord) என்று பொருள். எட்டு அஷ்டவினாயகர் திருத்தலங்களில் இத்தலத்தில் மட்டும்தான் வினாயகரின் அவதாரம் பக்தனின் பெயரால் வழங்கப்படுகிறது. வினாயகர், அந்தணரைப் போன்ற உடையலங்காரத்தில் காட்சியளிப்பதும் இங்கு மட்டுமே. இத்திருத்தலம் ராஜ்காட்(Raigad) மாவட்டத்தில் கர்ஜாட்(Karjat)லிருந்து ஐம்பத்தெட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலி(Pali) என்னும் கிராமத்தில் சரஸ்காட்(Sarasgad fort) கோட்டைக்கும், அம்பா(Amba) நதிக்கும் நடுவில் அமைந்துள்ளது. ஆலயத்தை 1640 ஆம் ஆண்டில் மோரேஷ்வர் விட்டல் சிந்த்கர் கட்டினார். இவர் சத்ரபதி சிவாஜியின் ஸ்வராஜ்யம் அமைக்கும் செயல்களில் நிறையப் பங்கு எடுத்துக் கொண்டவர். ஸ்ரீ கணபதியின் பக்தரான இவர் ஆலயத்தின் வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதி கொடுத்துள்ளார். மரத்தாலான மூல ஆலயம் 1760 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் ஆலயம் மொரோதாபாத்தைச் (Moradabad) சேர்ந்த ஸ்ரீ ஃபட்னிஸ் (Shri Fadnis) என்பவரால் வடிவமைக்கப்பட்டு கல்லால் ஆன ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. சிமிண்டும் ஈயமும் க...