இருண்ட ஆற்றல் (Dark Energy) தேவையா? - பகுதி (2)
இந்த இடத்தில்தான் ஈன்ஸ்டீன் கட்டுரையின் உள்ளே காலடி எடுத்து வைக்கிறார். ஈன்ஸ்டீன் சார்பியல் என்பது பொதுவானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தார். குமாரும் சங்கரும் தங்களின் அவதானிப்புகளில் உடன்படவில்லை என்பதன் பொருள் அவர்களின் அனுமானத்தில் எங்கோ தவறு செய்துள்ளனர் என்பதே. சிறப்பு சார்பியலில் தவறான கருத்து என்பது அறுதியான வேகம் (absolute speed) என்பதாகும். நமது இந்த நிகழ்வில் எது தவறானது? இயங்கும் பொருட்கள் திசை மாற்றங்களைப் பெற்றால் நிச்சயமாக விசைகள் அவற்றின் மீது செயல்பட்டிருக்க வேண்டும் என்பதே தவறான அனுமானமாக இருந்திருக்க வேண்டும். இயங்கும் பொருட்கள் திசை மாற்றங்களுக்கு விசை செயல்பட்டிருக்க வேண்டும் என்பது பல நேர்வுகளில் உண்மையாக இருந்தாலும் ஈர்ப்பு விசையைப் பொறுத்தவரை அவ்வாறில்லை. இது எப்படி சாத்தியம் என்பதை விளங்கிக் கொள்ள நாம் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு செல்லும் விமானத்தின் பாதை குறிக்கப்படுவதைக் கருதுவோம். இத்தகைய பயணத்தில் விமானம் மேற்காகப் பறந்து செல்வதில்லை. மாறாக வட துருவப்பகுதியின் மேலாகப் பறந்து...