புதியதோர் உலகம் - வெ.சுப்ரமணியன்
தனித்த விண்மீன் ஒன்றைச் சுற்றி இயங்கும் புவியை ஒத்த ஏழு கோள்களைக் கொண்ட அமைப்பை முதன் முதலாக நாசாவின் (NASA) ஸ்பிட்செர் (Spitzer) விண்வெளித் தொலை நோக்கி காட்சிப்படுத்தியது. இந்தக் கோள்களில் மூன்று சர்வ நிச்சயமாக உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற மண்டலத்தில் அதாவது பாறைகள் நிறைந்த திரவ நீர் கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. நமது கதிரவக் குடும்பத்திற்கு அப்பால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே தனித்த விண்மீன் ஒன்றுக்கான உயிர்வாழ் சூழலைக் கொண்ட அதிகபட்ச கோள்களின் கண்டுபிடிப்பு என்ற புதிய சாதனையை இது ஏற்படுத்தியுள்ளது. இந்த எல்லாக் கோள்களும் உயிரினங்கள் வாழத் தக்க வளிமண்டலத்தையும் தேவையான திரவ நீரை கொண்டுள்ளது என்றாலும் அதில் மூன்று கோள்களில் வசிக்கத்தக்க மண்டலம் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் நகரில் அறிவியல்பணிக்குழு இயக்கத்தின் (Science Mission Directorate) இணை நிர்வாகி திரு. தாமஸ் ஸுர்புசென் குறிப்பிடும்போது, இந்தக் கண்டுபிடிப்பு வசிக்கத்தக்க சுற்றுச் சூழல் மற்றும் உயிர் வாழ்வதற்கான உகந்த இடங்கள் குறித்த தேடலில் புதிர் ஒன்றில் கிடைக்கும் ...