Posts

Showing posts from December, 2016

வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (12)

Image
இந்த அத்தியாயத்தில் பொலிவு மாறு விண்மீன்கள் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.  மாற்றம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாதது. அது போலவே விண்மீன்களின் வாழ்விலும் மாற்றங்களைத் தவிர்க்க இயலாது. கதிரவனை ஒத்த விண்மீன் அல்லது அதை விடச் சற்று அளவில் பெரிய விண்மீன் தனது எரிபொருள் இருப்பு குறைந்ததும், தனது வடிவில் பல மடங்கு பெரியதாக சிவப்பு அரக்கனாக மாற்றமடைகிறது. இறுதியில் வெள்ளைக் குள்ளனாக புவியின் அளவுக்கு வடிவத்தில் குறைந்து, மிக அடர்த்தியான பொருளாக மாற்றமடைந்து பின் மறைகிறது. இக் கால கட்டங்களில் விண்மீனின் பொலிவு முதலில் உயர்ந்தும் பின் குறைந்தும் மாற்றமடைகிறது. ஆனால் பொலிவில் ஏற்படும் இம் மாற்றங்கள் விண்மீனின் பிறப்பின் பொழுது அது அமையும் நிறையைப் பொருத்து பல மில்லியன் அல்லது பல ஆயிரம் மில்லியன் ஆண்டு கால அளவிலேயே ஏற்படுகிறது. ஆனால் சில விண்மீன்கள் தனது பொலிவில் சிறிய கால அளவுகளிலேயே மாற்றமடையும் என்று முன்னரே சொல்லியிருந்தோம். பொலிவில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் சில மணி, சில நாள் அல்லது சில மாதங்களில் கூட நிகழ்வதையும் அறிவோம். இத்தகைய பொலிவு மாறு விண்மீன்கள் ...

வானம் எனக்கொரு போதிமரம் அத்தியாயம் - (11)

Image
வெளிப்புற ஏடுகள் விரிந்து கொண்டே போவதால் விண்மீன், சிவப்பு அரக்கனாக மாற்றமடைந்து கொண்டிருக்கும் பொழுது கூட அதன் சிறிய உட்புறமானது தொடர்ந்து சுருக்கமடையும். அவ்வாறு சுருங்குவதன் காரணமாக உட்புற அடர்த்தி அதிகரித்து, சாதாரணமாக 1000 மடங்கு சராசரி விண்மீனின் உட்புற அடர்த்திக்குச் சமமாக உயரும். இதன் காரணமாக மையத்தில் வெப்ப நிலை 100 மில்லியன் கெல்வின் அளவிற்கு உயர்வதால் ஒரு புதிய அணுக்கரு வினை நிகழத் தொடங்குகிறது. மூன்று ஹீலியம் அணுக்கருக்கள் இணைவு வினையில் ஈடுபட்டு கார்பன் அணுக்கரு உருவாகத் தொடங்கும். விண்மீன் மீண்டும் ஆற்றலை உருவாக்கம் செய்து நிலைத்தன்மையைத் தற்காலிகமாகப் பெறும். இதற்குப் பின்னர் நடக்கவிருப்பது அனைத்தும் விண்மீனின் மொத்த நிறையினை சார்ந்தது. நமது கதிரவனைப் போன்ற விண்மீனைக் கருதினால் பெரியதாக ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. ஹீலியத்தின் அணுக்கரு வினை காரணமாக உருவாகும் கடும் அழுத்தம் சிவப்பரக்கனின் வெளிபுற உறையை முற்றிலுமாக ஊதித்தள்ளி விடுகிறது. எனவே மிச்சமிருப்பது கிட்டத்தட்ட புவியின் அளவிலான வெறும் மையப்பகுதி மட்டுமே. இப் பகுதி மிக வெப்பமாகவும் அதே சமயம் அளவில் சிறி...