அதிக உடல் பருமன் ( Obesity)
அதிக உடல் பருமன் (Obesity) என்பது பொதுவாகவே பிறரின் கேலிப் பேச்சுகளால் மன உளைச்சலையும் அதே நேரம் உடல் ரீதியான பல பிரச்சனைகளையும் தரக் கூடியது. உடலின் எடை அதிகரித்தல் மட்டுமே அதிக உடல் பருமன் (Obesity) இல்லை. இது உடலில் கொழுப்பு சேகரமாவதால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்டிரால் மட்டுமல்லாமல் புற்றுநோய் தாக்கும் அபாயத்தைக் கூட அதிகரிக்கச் செய்யும் தீவிரமானதொரு மருத்துவ நிலை என்றும் சொல்லலாம். ருசித்து வயிறாரச் சாப்பிடக் கூட நேரமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துப் பணம் சம்பாதித்து, அப்படிச் சம்பாதித்ததுச் சேமித்த பணத்தை வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி சேர்த்த பணம் என்று சொல்வது வழக்கம். உண்மையில் வாயைத் கட்டி வாழ்ந்தால் நிச்சயமாகப் பிற்காலத்தில் வயிற்றைக் கட்டி வாழ வேண்டி இராது என்று கொழு உடல் மருத்துவ இயல் அல்லது உடல் பருமனியல் மருத்துவம் (Bariatric medicine) தெரிவிக்கிறது. உண்மையில் வாயைக் கட்டாமல் அதாவது கண்டவற்றையும் தேவையில்லாமல் உட்கொண்டால் பின்னாளில் வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கட்ட வேண்டி வரும். இரைப்பைப் பட்டை அறுவைச் சிகிச்சை (Gastric Band surgery) குறித்துச் சொ