Posts

Showing posts from November, 2021
நான் பணிபுரிந்த பள்ளியில் 2006 வாக்கில் நபார்ட் வங்கிக் கடன் மூலம் முப்பத்திரண்டு வகுப்பறைகளுடன் இரண்டு ஆய்வகங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்டப்பட்டன. எல்லா வகுப்புகளுக்கும் போதுமான அளவுக்கு மின்விசிறிகளும் (fans) குழல் விளக்குகளும் (tube lights) போடப்பட்டு இருக்கும்.  இந்த மின்விசிறிகளின் இறக்கைகளை  தாமரைப் பூவைப் போல வளைப்பதும் குழல் விளக்குகளை உடைப்பதும் அவ்வப்போது நடக்கும். உடைக்கும் மாணவர்கள் யார்யாரெனக் கண்டுபிடித்தால் அரசியல் தலையீடுகள் வரும். அதனாலேயே ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் நமக்கேன் வம்பு என்ற எண்ணத்தில் கண்டும் காணாமல் இருந்து விடுவார்கள். சும்மா பேருக்கு இது போலப் பள்ளியில் சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காலையில் பிரார்த்தனைக் கூட்டத்தில் எச்சரிக்கை செய்வதும் எழுத்துப் பூர்வமாக எல்லா வகுப்புகளுக்கும் சுற்றறிக்கை விடுவதும் மட்டுமே இது சார்ந்து எடுக்கப்படும் கடும் நடவடிக்கையாக இருக்கும்.  2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது வகையில் பள்ளியில் மாணவர்கள் இடையில் அமைதியின்ம...