கண்ணோட்டம்
கடந்த 2016 ஆம் ஆண்டில் எனக்குப் பார்வை சற்றே மங்கலாக இருப்பதாகத் தோன்றியது. சென்னையில் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை மிகவும் பழமையான பாரம்பரியம் மிக்க மருத்துவமனை. அடுத்து மிகப் புகழ் பெற்ற பெற்ற நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனை. இவை தவிர அகர்வால், வாசன் கண் மருத்துவமனைகளும் பல சிறிய தனியார் மருத்துவமனைகளும் உள்ளன. உடனே அருகிலுள்ள பிரபலமான சென்னையில் பல கிளைகளைக் கொண்ட தனியார் கண் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளச் சென்றேன். அங்கு பரிசோதனைகள் செய்து உங்களுக்குக் கண்புரை அறுவைச் சிகிச்சை (Cataract operation) உடனே செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீடு ( Medical insurance) உள்ளதா? என்று கேட்டார்கள். அவர்கள் நிறுவனம் வழங்கும் மூன்று நான்கு வகையான புரை நீக்க அறுவைச் சிகிச்சைக்குரிய கட்டணத்தையும் கூறிய பின் எப்போது சிகிச்சையை வைத்துக் கொள்ளலாம்? என்றும் விரைவில் செய்து கொள்ளுங்கள், நீங்கள் சர்க்கரை நோயாளி என்பதால் பார்வையை இழக்கும் அபாயமும் உள்ளதென பயமுறுத்தினர். நான் எதற்கும் வேறொரு மருத்துவமனையில் இரண்டாவதாக கருத்துக் கேட...