தொண்டன்
சார்... ஃபோன் வந்தது. அங்கேயிருந்து பெரியவரோட பிஏ பேசினாரு. பெரியவருக்கு காய்ச்சலாக இருக்கிறதாம். கொரோனார டெஸ்ட் எடுத்திருக்கிறார்களாம். ஒருவேளை ரிசல்ட் பாஸிட்டிவ் என்றால் இங்கே அட்மிஷன் போடணுமாம். 'அன்பான' வேண்டுகோளாம். உங்களுக்குத் தகவல் சொல்லச் சொன்னாங்க. சரிய்யா. கொடுத்துத் தொலைச்சிடலாம். அவங்களைப் பகைச்சிக்கிட்டு வேற என்ன நம்மால செய்ய முடியும்? ஆமா கட்சிக்கார விஐபி எத்தினி பேரு இப்ப நம்ம கிட்ட டிரீட்மெண்டில் இருக்காங்க? அதுவா சார், இருபது முப்பது பேரு இருப்பாங்க. அதில் ஒரு நாலைஞ்சு கேசு இழுபறியில இருக்கு. ஓ. ஆக்ஸிஜன் கையிருப்பு பத்துமா? இன்னும் எத்தினி நாளுக்கு வரும்? அதுதான் சார் பிராப்ளம். கையிருப்பு நாலு நாளுக்குத் தாங்கும். இது தெரிஞ்சும் ஏன்யா முப்பது அரசியல் விஐபி களை அட்மிஷன் போட்டீங்க. கொஞ்சம் கவனமாயிருந்து எதுனா வேற காரணம் சொல்லி வேற இடத்துக்குத் தள்ளி விட்டிருக்கலாமே. என்னவோ போங்கய்யா. இப்போ பெரியவரை வேற சேர்த்துட்டா இங்க ஒரே தேர்க் கூட்டம் திருவிழாக் கூட்டமாயிடும். எப்படி சமாளிக்கத் போற? அதுதான் சார் உங்களைக் கலந்துகிட்டு...... அப்புறமா பெரியவர் பிஏ கி...