அனிச்சைச் செயல்பாடுகள் (Reflux Actions)
நரம்பியல் செயல்பாடுகள் பலவகைப்படும். அவற்றில் எளியதோர் வகை அனிச்சைச் செயல். இதில் ஒரு தூண்டுதல் உடனடி நடவடிக்கைக்கு வழிவகுக்கிறது. ஆங்கிலத்தில் அனிச்சைச் செயல்பாடுகள் ரிஃப்ளெக்ஸ் செயல்பாடுகள் ( Reflex actions) என்று அழைக்கப்படுகின்றன. “பிரதிபலித்தல்” என்னும் பொருள் தரும் லத்தீன் மொழிச் சொல்லான ரிஃப்ளெக்சஸ் ( Reflexus) என்ற சொல்லே ரிஃப்ளெக்ஸ் ( Reflex) என்ற சொல்லுக்கு வேர்ச் சொல்லாகும். இச்சொல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கில நரம்பியல் நிபுணரான மார்ஷல் ஹால் ( Marshall Hall) என்பவரால் உயிரியலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று சொல்வதை விட வடிவமைக்கப்பட்டது என்று கூடச் சொல்லலாம். ஒரு சுவர் மீது வீசி எறியப்பட்ட பந்து எவ்வாறு பிரதிபலிக்கப்படுகிறதோ அதுபோலவே தசைகள் ( muscles) ஒரு தூண்டுதலை ( stimulus) பிரதிபலிப்பதாக மார்ஷல் ஹால் கருதினார். ஒரு தூண்டியால் ( stimulus) தசையொன்றில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தசைகளில் தன்னியக்க எதிர்ச் செயல் ( automatic response) ஏற்படும். இதன் விளைவாக உட்செல்லும் நரம்பொன்று ( afferent nerve) தூண்டப்படும் ( excite) நிகழ்வே ரிஃப்...