Posts

Showing posts from November, 2020

கொரோனாவிலிருந்து மீண்ட பின் வாழ்க்கை.... பகுதி (2)

Image
மூளை SARS - CoV-2 (Severe Acute Respiratory Syndrome Corona Virus 2) வைரஸ் மூளையையும் பாதிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இருநூற்றுப் பதினான்கு கோவிட் -19 நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொண்டதில், அவர்களில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் தலைச்சுற்றல், தலைவலி மற்றும் அறிவாற்றல் குறைபாடு (cognitive impairment) உள்ளிட்ட நரம்பியல் அறிகுறிகளை அனுபவித்ததாகத் தெரிவிக்கிறது. இருப்பினும், அறிகுறிகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று விஞ்ஞானிகளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இந்த விளைவுகள் வைரஸ் நேரடியாக நியூரான்களைப் பாதிப்பதாலோ, அழற்சி நோயெதிர்ப்பு காரணமாகவோ அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறையால் சேதமேற்பட்டதாலோ இருக்கக் கூடும். வடமேற்கு பல்கலைக்கழகத்தின் (Northwestern University) நரம்பியல் - தொற்று நோய் மற்றும் உலகளாவிய நரம்பியல் துறையின் தலைவரான (Chief of neuro-infectious disease and global neurology) டாக்டர். இகோர் கோரால்னிக், எம்.டி (Igor Koralnik) கூறுகையில், நரம்பியல் பிரச்சினைகளின் மூல காரணம் பற்றி அதிகம் அறியப்படாத நிலையில், இந்த அறிகுறிகள் தற்காலிகமாகமானவையா அல்லது நிரந்தரமானவையா என்று நிபுணர்கள...