கொரோனாவிலிருந்து மீண்ட பின் வாழ்க்கை ... பகுதி(1)
நம் நாட்டில் பெரும்பாலானவர்களால் “கொரோனா” என்றே கோவிட் -19 நோய் அழைக்கப்படுகிறது. சரியாகச் சொன்னால் கொரொனா வைரஸ் என்பது பல வகையான வைரஸ்களை உள்ளடக்கிய பெரிய வைரஸ் குடும்பத்தைக் குறிக்கும் ஒரு பொதுப்படையான சொற்றொடர். கோவிட் -19 என்பது நோய் (Disease). சார்ஸ் – கோவ் -2 (SARS – CoV 2 Severe Acute Respiratory Syndrome – Corona Virus -2) என்பது நோய்க்குக் காரணமான ஒரு குறிப்பிட்ட வைரஸ். CoViD -19 என்பதில் Co - Corona வையும் Vi -Virus என்பதையும் D - Disease என்பதையும் 19 - 2019 அதாவது இந்த வைரஸ் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டையும் குறிக்கிறது. ஆகவே இந்தக் கட்டுரையில் சார்ஸ் – கோவி 2 என்றால் அது வைரசையும், கோவிட் -19 என்றால் நோயையும் குறிக்கும் என்பதைத் தெளிவுபடுத்தவே மேற்கண்ட விளக்கம் தரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோவிட் -19 (covid -19) நோயால் தாக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் சுய உதவிக் குழுவொன்று (Self help group) ஃபேஸ்புக் (Face Book) சமூக வலைத் தளத்தில் கொரோனா வைரஸ் உயிர் பிழைத்தோர் படை (Corona Virus Survivor Crops) என்ற பெயரில் இயங்கி வருகிறது. இக் குழுவில் அவர்கள்...