வறுமைக்கும் உடற் பருமனுக்கும் என்ன தொடர்பு?
உயர் வருவாய் நாடுகளில் அதிக உடற்பருமன் வீதங்கள் (rates of obesity) நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் நாடுகளில் காணப்படுவதை விட அதிகமாக உள்ளது. பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் சீனா இந்தியா போன்ற நாடுகளில் அதிக உடற்பருமனும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. செல்வம் பெருகும் நாடுகளில் அதிக உடற்பருமனும் கூடவே பெருகி வருகிறது. அதிகமான வளம், அதிக உடற்பருமன் என்ற போக்கே உலக நாடுகளில் காணப்படுகிறது. அதிகம் செல்வம் கொழிக்கும் நாடுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஒன்றென்பதை நாமறிவோம். ஆனால் அங்குதான் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அதிக உடற்பருமன் (obesity) கொண்டோராகவும் மற்றொரு மூன்றில் ஒரு பங்கினர் அதிக உடல் எடை (overweight) கொண்டோராகவும் காணப்படுகின்றனர். நிலைமை இன்னும் மோசமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பருவ அதீத உடற்பருமன் (childhood obesity) வீதம் தொடர்ந்து அதிகரித்து நிலைமை மிகவும் மோசமாகும் என்றும் புள்ளிவிவரங்கள் முன்னெச்சரிக்கை செய்கின்றன. மரபியல் மாற்றங்கள் மற்றும் நடத்தை போன்ற தனிப்பட்ட காரணிகள் வாழ்நாள் முழுவதற்கான உடல் எடை அதிகரிப்பதில் ம...