Posts

Showing posts from July, 2018

2018 ஜூலை 27 சந்திர கிரகணம் – ஒரு பார்வை

Image
சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வரும் போது சந்திரன் மீது பூமியின் நிழல் விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது . சூரியனின் ஒளியில் புவி உருவாக்கும் நிழலில் அடர்த்தி குறைந்த பகுதியை புற நிழல் ( பெனம்பரா ) என்றும் அடர்ந்த பகுதியை கரு நிழல் ( அம்பரா ) என்றும் பிரிக்கலாம் . சந்திரன் , புற நிழல் பகுதிகளைக் கடக்கும் போது பகுதிக் கிரகணமும் , கரு நிழல் பகுதிக்குள் முழுவதுமாக உள்நுழைந்து கடக்கும் போது முழு சந்திர கிரகணமும் ஏற்படுகிறது .   வரும் 2018 ஜூலை 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10.44 மணிக்குத் தொடங்கி மறுநாள்   ஜூலை 28 காலை 4.58 மணிவரையில் 6 மணி நேரம் 14 நிமிட காலத்திற்கு   நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணமே இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திரகிரகணம் . கிரகணத்தின் உச்ச நிலை 28 ஜூலை அதிகாலை 1.51 மணிக்கு அமையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது . சென்னையைப் பொருத்தவரையில் புறநிழல் கிரகணம் ஜூலை 27 அன்று இரவு 10.44 மணிக்குத் தொடங்குகிறது . பகுதி கிரகணம் 11.54 க்கு ஆரம்பம...