31.01.2018 சந்திர கிரகணம் - ஒரு பார்வை
2018 ஆம் ஆண்டில் ஜனவரி 31 அன்று நிகழ இருக்கும் முழு சந்திர கிரகணம் மிகவும் சிறப்பானது . இந்த நிகழ்வின் சிறப்பு, அடிக்கடி நிகழாத அபூர்வமான மூன்று முக்கியமான நிகழ்வுகள் ஒருசேர நிகழ்வதே . இத்தகைய நிகழ்வை பெரிய நீல குருதி நிலவென்று (Super Blue Blood Moon) வேடிக்கையாகப் பெயரிட்டு அழைக்கலாம் . மேலும் இந் நிகழ்வு வானியல் ஆய்வாளர்களுக்கு நிலவினை வெப்பம் உணரும் கேமிரா மூலம் படமெடுக்கும் அரிய வாய்ப்பையும் நல்கியுள்ளது . 2018 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில்முழு நிலவு ( பௌர்ணமி ) கடந்த 2 ஆம் தேதி காட்சி தந்தது . இப்போது மீண்டும் ஜனவரி 31 ஆம் தேதி மீண்டும் முழு நிலவு காட்சியளிக்கப் போகிறது . ஒரு மாதத்தில் இருமுறை முழு நிலவு காட்சியளிப்பது சற்று அபூர்வமான நிகழ்வே . இத்தகைய நிகழ்வை ப்ளூ மூன் ( Blue moon ) என்றழைப்பர் . பொதுவாக நீல நிலா(Blue Moon) தொடர்பாக இருவகையான வரையறைகள் சொல்லப்படுகிறது . அதாவது பழைய வரையறைப்படி ஒரு ஆண்டின் நான்கு பர