வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (9)
இ ந்தப் புதிருக்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் பெத்தே (HANS BETHE) (HANS BETHE 1906 - 2005 ) மற்றும் பிரைட்ரிச் வைஸாக்கர் (FRIEDRICH WEIZACKER) (FRIEDRICH VON WEIZACKER 1912 - 2007) ஆகிய இருவரும் தனித்தனியாக 1939 இல் விடை பகன்றனர். அவர்கள் விண்மீன்கள் மற்றும் கதிரவனின் மையப் பகுதியில் ஹைட்ரஜன் எப்படி ஹீலியமாக மாறுகிறது என்பதற்கு இரு வேறு வழிமுறைகளைத் தந்தனர். சூரியனின் நிறையை விட அதிகமான நிறையும், உள் வெப்பநிலை 15 மில்லியன் கெல்வினை விட அதிகமான வெப்பநிலையிலும் உள்ள விண்மீன்களில் காணப்படும் அணுக்கரு இணைவு வினை கார்பன் - நைட்ரஜன் - ஆக்ஸிஜன் வினையாகும். சூரியன் போன்ற குறைந்த நிறையுடைய விண்மீன்களிலும், உள் வெப்பநிலை 15 மில்லியன் கெல்வினுக்குக் குறைவாகவும் உள்ள விண்மீன்களில் நடைபெறும் வினை மூன்று படிகளாக கீழே விளக்கப்பட்டுள்ளது. Image courtesy : Nobel Prize org Animation Courtesy : https://www.emaze.com/@AZOTITCC/What-is-energy? 1940 ஆம் ஆண்டில் இயற்பியலாளர்களும் , வானவியல...