Posts

Showing posts from March, 2020

அமினோ அமிலங்களை இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்பு படுத்துதல்

Image
மரபணு வெளிப்பாடு (Gene expression) என்பது ஒரு மரபணுவிலிருந்து பெறப்படும் தகவலைப் பயன்படுத்திச் செயல்படு மரபணு விளைபொருளைத் தொகுக்கும் செயல்முறையாகும். இந்தத் தயாரிப்புகள் பெரும்பாலும் புரதங்களாகவே (Proteins) இருக்கும். புரதங்களின் அடிப்படைக் கட்டுமானப் பொருள்களாக இருப்பவை அமினோ அமிலங்கள்(Amino acids). அமினோ அமிலங்கள் எண்ணிக்கையில் மொத்தம் இருபத்தொன்றாக (21) உள்ளன. இவற்றைக் கீழ்க்கண்டவாறு மூன்றாக வகைப்படுத்தலாம். 1) இன்றியமையாத அமினோ அமிலங்கள்(Essential Amino acids). எண்ணிக்கையில் இவை ஒன்பது (9) ஆக உள்ளன. உயிர் வாழ்தலுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத இந்த அமினோ அமிலங்களை நமது உடலால் செயற்கை சேர்மப் பொருளாக்கம்(synthesis) வாயிலாக உருவாக்கிக் கொள்ள இயலாது. இவற்றை நேரடியாக நாம் உண்ணும் உணவுகளிலிருந்து மட்டுமே பெற இயலும். ஹிஸ்டிடைன்(histidine), ஐசோலியூசின் (Iso Leucine), லியூசின்(Leucine), லைசின்(Lysine), மெத்தியோனைன் (Methionine), ஃபைனிலலனைன் (Phenylalanine), த்ரோயோனைன் (Threonine), டிரிப்டோஃபன் (Tryptophan)மற்றும் வாலின்  (Valine) ஆகியன இப்பிரிவில் அடங்கும். 2) கட்டுப்பாடுட...